வெள்ளி 04 2015

மழை நீரில் கால் பதிக்காத சீமாட்டி...........

படம்-baluspoli.blogspot.com



அந்தச் சீமாட்டியின்
கால்கள் அரியணை
ஏறிய நாளிலிருந்து
மண் தரையை
தொட்டதாக வரலாறு
இல்லாத  போது..
மழை நீரானது
அவர் கால்களை
தழுவிட  முடியுமா..?

வாய் பொளந்து
பல் இளித்து
சிந்திக்க மறந்து
அந்த சீமாட்டியை
அரியனை ஏற்றி
அவதி படும்
வாக்கு  ஆளார்கள்
தான் பதில்
சொல்ல வேண்டும்.


செய்த தவறுக்கு
சட்டத்தின் நீதிபதிகளே
தண்டிக்க மறுத்தபோது
ஆர்.கே..நகரில்
தண்டிக்க மறந்து
வேடிக்கை பார்த்தவர்களையும்
ஒதுங்கி நின்றவர்களையும்
இயற்கை தண்டிக்காமல்
மன்னித்து  விடுமா...??

அல்லது யாகத்தினாலும்
வேள்விகள் செய்வதாலும்
இயற்கையின் தண்டனையிலிருந்து
தப்பித்து விட முடியுமா...???



மறந்து விட்டவர்களின் நிணைவுக்கு.....மக்களே போல்வர் கயவர்
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். 

14 கருத்துகள்:

  1. இவர்களுக்கும் காலம் ஒருநாள் கால் கூடும் நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிகள் படித்து என் கண்கள் குளமாகி விட்டது நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த குளத்தை..திறந்துவிடாதீர்கள நண்பரே.....ஏற்கனவே..வீட்டைச்சுற்றி மழைநீர் தேங்கி கிடக்கிறது.

      நீக்கு
  3. தோழரே ,அவரவர் கஷ்டம் அவரவருக்கு :)

    பதிலளிநீக்கு
  4. ’இது அரசை குற்றம் சொல்ல வேண்டிய தருணம் இல்லை’ என்கிறார்கள் பலர். வேற என்ன செய்யலாம்? ராஜபக்‌ஷேவை குற்றம் சொல்லுவோமா? இது எதற்கும் வக்கற்ற செயலற்ற அரசு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இதற்கு மேலும் என்ன கருமத்துக்கு இந்த அரசுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்?

    பாரதி தம்பி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருமத்த அரசை முட்டு கொடுத்து..தூக்கிவிட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்

      நீக்கு
  5. இந்த சீமாட்டியின் கால்கள் ஒருபோதும் வெள்ளத்தை தொடவே தொடாது நண்பர். இந்த சீமாட்டி செய்த குற்றத்தில் இருந்து தண்டணையில்லாம தப்ப வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்ட மக்களை என்னவென்பது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண் சோறு சாப்பிட்டவர்கள் குற்ற வுணர்ச்சியால் வருத்தப்படபோவதில்லை..அடுத்து மண் சோறு திண்ணும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

      நீக்கு
  6. பார்ப்போம் என்ன ஆகும் என்று,

    உணர்வார்களா ? இந்த மக்கள்,,

    இது இல்லை என்றால் அது அவ்வளவு தான்,,

    பதிலளிநீக்கு
  7. பார்ப்போம் என்ன ஆகும் என்று,..........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....