பக்கங்கள்

Sunday, January 10, 2016

கொடுத்தவளே....பறித்து கிட்டா...க்கா ....

படம்-Oneindia Tamil

அக்கா......என்னக்கா...... எங்க பையொட கிளம்பிட்டீங்க.....”

“வேற எங்க போவேன்.... ரேசன் கடைக்கு தாண்”...

அங்க என்னக்கா விசேசம்...”

“உனக்கு தெரியாதா.....ஸ்டிக்கர் ராணி, இந்த பொங்கலுக்கு. பச்சை அரிசியும்,வெல்லமும், கூடவே ஒன்றையடி கரும்பும், 100ரூபாயும் தாராலாம்.... அத வாங்கிட்டு வர... உங்க மாமா போயிருக்காரும்மா... காலைல போன மனுசன் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் வரலீயே ன்னு போயி பாக்கலாமுன்னு போறேன்ம்மா.......


ஓ....பொங்கல் பரிசு வாங்கப் போறேன்னு சொல்லுக்கா.......”


“ஓமா.....பொல்லாத பொங்கள் பரிசு...... ஏங்கன்னு நீயுதான் படிச்சுட்டு வேலை இல்லாமா இருக்க..... ஒனக்கு ஒரு வேல கிடைச்சா .....  நீ இந்த பொங்கல் பரிச வாங்கவா போற.......

“ சத்தியமா.... வாங்க மாட்டேன்க்கா...ஆனா நிலம அப்படி இல்லக்கா...... ஸ்டிக்காரி தர்ர 100ரூபாய்க்கு இருக்கிறவனுங்களும்....இல்லாதவங்களும் பிச்சைகாரனாக மாறிவிடுறாங்க........ எ ங்க அப்பா போயி பாத்துட்டு வந்து கூட்டமாக இருப்பதாக சொன்னார்க்கா.......

“ஏதுக்கும் நான் போயி பாத்துட்டு வந்துடுறேனே....”

“ சரிக்கா...போயிட்டு வாங்க்கா....”

.....................................


என்னக்கா......போன வேகத்துல...திரும்பி வந்துட்டீங்க....... ரேசன் கடையில கூட்டமக்கா.....”

“ஆமாக் கன்னு பொம்பள கூட்டம் அதிகமாக இருக்கு, ஆம்பிள கூட்டம் கொஞ்சம் குறைவாக இருக்கு....”

“ அப்போ....மாமா.....ரேசன்ல வாங்கிட்டாரா.....”

அந்த கூத்த ஏன்? கேட்குற.......ரேசன் கடையில  கொடுத்த  100ரூபாய்க்கு உன் மாமன். சரக்கு வாங்கி ஊத்திகிட்டு போனதா...... அந்தாளு கூட நின்னாளு ஒருத்தரு சொன்னாரும்மா......என்  பொழப்ப பாத்தீயாம்மா....”

இல்லக்கா......கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு கொடுத்தவங்களே...பறித்துகிட்டாங்கக்கா..........

“ என்னா செய்யிறதுகொடுக்கிற ஆளும் சரியில்ல.......  வாங்குற என் வீட்டாளு சரியில்ல....இந்தக் கொடுமை என்னிக்குத்தான்  தீரப் போகுதோ தெரியலையம்மா.........??????


10 comments :

 1. இது தீராது தீரவே தீராது மக்கள் மனதில் மாற்றம் வரும் வரை மாறாது நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே...

   Delete
 2. Replies
  1. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனாலும் அங்க ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு வருமாம் அய்யா.....

   Delete
 3. அரிசி வீட்டுக்கு ,துட்டு டாஸ்மாக்குக்கு ,சரிதானே :)

  ReplyDelete
 4. ஹிஹிஹி.. வெறும் 100 ரூபாய்தானா.. கொஞ்சம் கூடக் கொடுத்தா அவங்களுக்கும் கொஞ்சம் கூடத் திரும்பக் கிடைக்குமே...!
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு தெரிந்தது.அவுகளுக்கு தெரியலையே நண்பரே...

   Delete
 5. 100 ரூபாய்க்கு ஆக
  இருக்கிறவனுங்களும்... இல்லாதவங்களும்...
  பிச்சைகாரனாக மாறிவிடுறாங்க...

  அருமை... அருமை...
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பரே...தொடருகிறேன்......

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com