படம்-நக்கீரன் |
ஜெ. அரசு என்றாலே பலரும் தொடை நடுங்கும்போது அவரது பேனரை அகற்றிய நீங்கள் யார்? உங்கள் பின்னணி என்ன?
அக்தர் : நான் இந்த நாட்டின் பாமரக் குடிமகன். துணிச்சல்தான் என் பின்னணி.
-சட்ட அனுமதியை மீறி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றியதற்காக அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் அக்தர். (அவருடன் ஜெயராமன், சந்திரமோகன ஆகியோரும்)
சிறையில் அவர்கள் இருந்தபோது நக்கீரன் நிருபர் அரவிந்த்Arvind Arvi எடுத்த பேட்டியிலிருந்து.. (தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்)
நீங்கள் அதி.மு.க.வுக்கு எதிரானவர்களா?
அக்தர் : இல்லை. மக்களுக்கு ஆதரவானவர்கள். இதற்கு முன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் பேனர்களைக் கூட அகற்றியிருக்கிறோம். அவர்கள் யாரும் இப்படி அராஜகமாக நடந்துகொள்ளவில்லை.
தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இப்படி களத்தில் இறங்கியிருக்கிறீர்களே? உங்கள் உள் நோக்கம்தான் என்ன?
அக்தர் : அநீதியை எதிர்ப்பது தவிர, வேறு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க. அரசின் அராஜகப் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவ்வ ளவு நாள்தான் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப் பது? மழை வெள்ளத்தில் சிக்கி, மக்கள் தங்கள் உறவுகளையும் உடமைகளையும் இழந்து கண்ணீருடன் பரிதவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இதைப்பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், பொதுக்குழு என்ற பெயரில் ஆடம்பரத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். செய்யாத, செயல்படாத திட்டத்தையெல்லாம் சாதனை என்று சுயதம்பட்டம் அடிக்கிறார்கள்.
மேலும் சில பதில்களுக்கு..http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=158574
அக்தர் பாராட்டுக்குறியவர் நண்பரே
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குடிராபிக் ராமசாமியின் வீரம் இவர்களுக்கும் இருக்கிறது,வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துக்கள் அவர்களுக்கு உரித்தாகட்டும் நண்பரே.......
நீக்குபாராட்டுக்குரியவர்(கள்)
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்கள்தான் நண்பரே........
நீக்குதுணிச்சலான மனிதர் ஜி...
பதிலளிநீக்குதுணிச்சலான மனிர்கள்தான்ஜி
நீக்குபாராட்டுகள் அந்தத் துணிச்சல்காரர்களுக்கு!
பதிலளிநீக்குபொதுக் குழுவிற்கு ஒரு சிறு தூரத்திற்குள் இடைவெளி கூட விடாமல் எத்தனை பேனர்கள் தெரியுமா 100. அதன் பின் இன்னும் பல சாலைகள் அடைத்து. அது மட்டுமா இப்போது சமீபத்தில் சென்ற வாரம் மீண்டும் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தார் என்று பல பேனர்கள், கூட்டம் என்று ட்ராஃபிக் ஜாம் என்று நொந்து நூடுல்ஸ்...ட்ராஃபிக் ராமசாமி என்ன ஆனார் என்று தோன்றியது...
கீதா
பேசாமல் இந்த கட்சியை ஸ்டிக்கர் கட்சி பேனர்கட்சி பெயர் வைத்துவிடலாம் அய்யா
பதிலளிநீக்கு