படம்-“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி |
“வாங்க அண்ணே... திருச்சிக்கு போயிட்டு வந்தீங்களா”....??
ஆமாடா... வர்ரேன் வர்ரேன்னு சொல்லிவிட்டு ...கடைசி நேரத்துல வராம எஸ்கேப் ஆகிட்ட.... எங்கடா...போன....”
அது வந்துண்ணே......
சும்மா சொல்லு...... .அட..சும்மாச் சொல்லுடா....
வரணும்முன்னுதான் ரெடியா.... இருந்தேண்ணே.. அந்த நேரம் பார்த்து பயல்க சரக்க ஊத்தி விட்டானுகண்ணே.....
என்னடா.... கதை விடுறியா ...????
சத்தியமா இல்லண்ணே ...இராணுவத்தில இருந்து வந்தவன் ஒருவன் மிலிட்டிரி சரக்க கொண்டு வந்து ஒரிஜினல் சரக்குன்னு ஆசைய தூண்டிவிட்டானுகண்ணே....
“வீட்டுல வந்து பார்த்தேன்.. வீட்டில காணோமே......
“ நா.... குடிச்சிருக்கிறது உங்களுக்கு தெரிய வேணாம்ன்னு வீட்டுக்காரி சொன்னா...அதனால..கம்மாக்கரைய பக்கம் போயிட்டண்ணே....மாநாடெல்லாம் எப்படிண்ணே.இருந்துச்சு...... கூட்டமெல்லாம் எப்படிண்ணே......
அந்த மாநாட்டுல..ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்முன்னு பாடினாருல தோழரு கோவனு அவரு.. உங்களையெல்லாம் நல்லா குடிக்கச் சொல்லி பாடி இருக்காருடா..
எண்ணண்ணே....இப்படிச் சொல்றிங்க...குடிய விடனும்முன்னு மல்லக்கட்டுறது உங்களுக்கு தெரியாதண்ணே
அதனால்தாண்ட நாசமா போன பயலே சாராய போதையில் சுயமரியாதை அற்றும்,மானம் மரியாதை கெட்டு, குடும்ப நிலம தெரியாம .தமிழ்நாட்டு வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உங்களின் பாரமுகத்தையும் கேலி செய்து பாடி இருக்காருடா...???
குடி சிந்திக்காதே குடி”ன்னு ...... இந்தா.. எம் போன்ல கோவன் பாடியதை கேளுடா................
இதைத்தான் எதிர்பார்த்தேன்... குடுங்கண்ணே போன........
தோழர் கோவனின் புதிய பாடல் "குடி சிந்திக்காதே குடி"
-------------------------------------------------------------------
//மூடு டாஸ்மாக்கை என்பது அரசுக்கு வைக்கிற கோரிக்கை அல்ல, மூடு டாஸ்மாக்கை என்பது என் உழைக்கும் மக்களுக்காக வைக்கும் கோரிக்கை//
மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற “மூடுடாஸ்மாக்கை” சிறப்பு மாநாட்டில் மக்களின் வரவேற்பை பெற்ற தோழர் கோவனின் புதிய பாடல்
"குடி சிந்திக்காதே குடி"
*****
சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..
குடி சிந்திக்காதே குடி...
ஆத்து மணல் கொள்ளையைக் கண்டுக்காமல் இருந்துக்கோ,
ஆவின் பாலில் சோப்பு நுரை
ஆயிரம் கோடி தியேட்டர் டீசர்ன்னு நினைச்சிக்கோ.
குடி சிந்திக்காதே குடி...
அரிசி விலை ஏறுதுன்னா அம்மா மெஸ்ல துன்னுக்கோ
வீட்டுக்குப் போனா பேஜாருன்னா டாஸ்மாக்ல தூங்கிக்கோ
குடி சிந்திக்காதே குடி..
நன்றி: nakkheeranwebtv
ஹா ஹா ஐயா.அருமையான பதிவு ஐயா.பாடலும் அருமை.
பதிலளிநீக்குபாரதியார் சொன்னார் பாருகுள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு-னு.ஆனால் இன்று பார் குள்ளதான் நம் நாடு ஐயா..
பாடல் அருமை...
பதிலளிநீக்குகுடிகாரனுக்கு எவ்வளவு
சொன்னாலும் அவன் கேக்கமாட்டான்
அதான் குடி னு சொன்னா குடிக்கிறத
விட்ருவான்னு அப்படி சொல்லிருக்காரு
நம்ம கோவன் ஐயா....
கோவன் மாநாடு போட்டு சொன்னதயே கேக்காத இவனுங்க...
நான் இணையத்துல சொன்னத கேக்கவா போறானுங்க...!
குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும் விழிக்கமாட்டாயோ...!!!
குடி குடி மனிதா உன்
குடி கெடும்வரை குடி...
குடித்து நீ தள்ளாட
குடியால் உன் குடி தள்ளாட...
என்னை நீ குடித்து முடிக்க
உன் குடியை நான் கெடுத்து முடிக்க...
உன் வருமானம் சாராயம் தேடி
உன் தன்மானம் அவமானம் தேடி...
உன்னால் அரசின் குடி வளர
பின்னால் உன் குடும்பம் குடி தளர...
குடித்து உன் குடல் வேக
குடியால் உன் குடி மூழ்க...
குடி குடியென்று நீ குடி தேடி
பொண்டாட்டி தாலி அடகுக்கடை தேடி...
குடி பொருள் விற்றுக் குடி
உன்னை கல்லறைக்குடி வைக்கக்குடி...
குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும்
உன் குடியை வாழ வைக்க மாட்டாயோ....!!!
ajaisunilkarjoseph.blogspot.com
மக்களின் போதை தெளிய வேண்டும்.
பதிலளிநீக்குதம +1
நல்லாத்தான் இருக்கு...
பதிலளிநீக்குசிந்திக்காமல் குடி ,சிந்தாமலும் குடி என்றும் பாடியிருக்கலாம் :)
பதிலளிநீக்குயாரு பாடி யாரு கேட்கிறா படவேண்டியதை பட்டுதான் தீரணும் குடிகாரனோட சேர்ந்து, குடிக்காதவனும்
பதிலளிநீக்குஅருமையான பாடல்!
பதிலளிநீக்குத ம 5
நல்ல பாடல்! மக்கள் தெளியவேண்டும்.
பதிலளிநீக்கு