புதன் 02 2016

ஒரு தற்கொலை கடிதத்தின் லட்சியமும் வேண்டுகோளும்....

படிக்க----ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !



ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து  ........

ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது  எனது லட்சியம்  . ஆனால். என்னால் எழுத முடிந்தது என்னவோ, இந்த தற்கொலை கடித்த்தை மட்டுமே.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.., ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்ககளை திரும்பி பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும் சுமுகமாகவும் நடை பெறட்டும். நான் தோன்றினேன் மறைந்தேன் அவ்வளவே... அதை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிழவுலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.


8 கருத்துகள்:

  1. வேதனையான கடிதமே நண்பரே இவ்வளவு அறிவாற்றல் உள்ள இந்த மனிதன் இறந்திருக்கூடாதுதான்.

    பதிலளிநீக்கு
  2. அரச உதவித்தொகையை பெற்று பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க்க சென்ற இவர், தான் சென்ற வேலையை பொறுப்புணர்வோடு செய்திருந்தால், அவரது லட்சியத்தை நிறைவேறுவதுடன் பெற்றோருக்கும் பயன் உள்ளவராக இருந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  3. லட்சியத்தை நோக்கிய பயணத்தில் ரோகித் வெமுலா,தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்து இருந்தால் ,அவர் கொள்கைக்கு இன்னும் உத்வேகம் கிடைத்திருக்கும் !

    பதிலளிநீக்கு
  4. தற்கொலை செய்து கொள்ள வந்த தைரீயம் அதை எதிர்த்து நிற்க தெரியாமல் வாழ்வை முடிக்க என்ன அவசியம்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. தற்கொலை செய்ய
    துணிச்சல் இருந்தவருக்கு
    அதை எதிர்க துணிச்சல்
    இல்லாமல் போனதேனோ
    நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. தற்கொலைகளை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. உணர்வுகளினால் ஏற்படும் மூளை ரசாயன மாற்றத்தினால் நிகழும் இவை பல சமயங்க்ளில் என்னதான் பக்குவப்படுத்த முனைந்தாலும் எல்லையைத் தாண்டிவிடுகின்றது. எல்லாம் மூளை ரசாயனம் படுத்தும் பாடு

    பதிலளிநீக்கு
  7. தற்கொலை செய்யாமல் தனது இலட்சியத்தைத் தொடர்ந்திருப்பதே அவர் வெற்றியாக இருந்திருக்கும். இது அவரது கோழைத்தனத்தையே காட்டுகின்றது...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்