சனி 24 2015

இந்தியை எதிர்த்து மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் பொன்விழா ஆண்டு...!!!!..

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
படம்-வினவு

காந்தி சூதந்திரம் வாங்கி தருவதற்கு முன்பு அதாவது பத்து வருடத்திற்கு முன்பு காந்தியின் சம்பந்தியான ராஜ கோபாலாச்சாரி என்பவர் காங்கிரஸ் கட்சியின். சென்னை மாநிலத்தின்  முதலமைச்சர் பதவியை கொல்லைப்புறமாக கைப்பற்றி 1937-ல் முதலமைச்சரானார். முதலமைச்சராக வந்தவுடன் 1937-ஆண்டு ஏப்ரல் ஒன்னாந்  தேதி  முதல் ஒரு உத்தரவு  போட்டு    இந்தீயை கட்டாய பாடமாக்கி னார்.


இதோடு இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவதற்க்கான விதத்தில் முதல் கட்டமாக இந்தியை  கட்டாய பாட மாக்குவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

கொதித்தெழுந்த தமிழ் அறிஞர்களான சோம சுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன், தந்தைப் பெரியார் போன்றவர்களின் தலைமையில் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக மக்கள்  வீறு கொண்டு போராட்டம் நடத்தினா்

இத்தகைய  இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடராஜன் 1939 ஆண்டு சனவரி 15ந்தேதியிலும். இவருக்குபின்  தாளமுத்துவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும்போதே மருத்துவமனையில் 1939ம்ஆண்டு மார்ச் 12 ந்தேதியிலும தியாகி ஆனார்கள்.

இவ்விரு மொழிப்போர் தியாகிகளின் மரணத்தால் மேலும்  தமிழமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வலிமையால் காந்தி சம்பந்தி ராஜ கோபாலாச்சாரி.. கட்டாய இந்தி திணிப்பு உத்தரவை  திரும்ப பெற்றார்.

இதனால் அன்றைய காங்கிரஸ் அரசு. இந்தியை கட்டாய மாக்குவதில் பின்வாங்கிச் செல்வது போல் போக்கு காட்டிவிட்டு  மீண்டும் 1965 ஆண்டு சனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று இந்தியை  ஆட்சி மொழியாக அறிவிக்க முடிவு செய்து. மீண்டும்   இந்தியை திணிக்க முயன்றது.

இதை எதிர்த்து 1965 ஆண்டு சனவரி 25ந்தேதி மதுரையில் தொடங்கிய போராட்டத்தீ சென்னை, நெல்லை, கொவை, திருச்சி என்று  தமிழக முழுவதும் பரவியது.

சென்னையில் கூடிய அனைத்து கல்லூரி மாணவர் போராட்டக்குழு , சனவரி 26ந்தேதியை துக்க நாளாக அறிவித்தது.

 பள்ளி, கல்லூரி.பல்கலை கழகம் என அணைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டும் போராட்டம் ஓயவில்லை. மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்காக முதல்முறையாக  இராணுவம் இறக்கி விடப்பட்டு, கொலை வெறியாட்டம் போட்டது.

அந்த கொலை வெறியாட்த்தின் ஊடே.. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ராஜேந்திரன் போன்ற வீரமிக்க மாணவர்களின்-இளைஞர்களின் உயிர் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55நாட்களாக நீடித்த மாணவர்கள் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

 1937ஆண்டு ராசாசியில் தொடங்கி, பக்தவச்சலம் போன்ற காங்கிரஸ்  கட்சி தலைமையில்  இருந்து தற்போது ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி தலைமையில் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள்.

 இது வெறும் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, இந்த இந்தி திணிப்போடு நாட்டை, நால் வருண, சாதி, வேத, வைதீக, சமஸ்கிருத மயமாக்கும் சதி!!

உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் முன்னோடியாக.....

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பொதுவுடமை பேசிய மொழி, “

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும” என்ற சமத்துவத்தை உயர்த்தி பிடித்த மொழி,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”, “கொல்லாமை”, “கள்ளுன்னாமை”, “பொய் சொல்லாமை”,  “பிறன்மனை நோக்காமை” போன்ற உயரிய அறங்களை கற்பித்த மொழி, நல்ல  பண்பாடுகள் மிக்க மொழி, தமிழ் மொழியே..!!!!!!!!!




நன்றி! 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி






வெள்ளி 23 2015

பொங்கல் வாழ்த்து சொல்ல மறுத்த ஒலக நடிப்பு முதல்வர்...????

படம்-kotticodu.blogspot.com

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள  எதிர்கட்சிகள் முதற்க்கொண்டு எல்லாவித வீர பராக்கிரம  பொருந்தியசாதி சங்கல்களும் மற்றும் எல்லா வண்ண அரசியல் கட்சிகள் உள்பட,சினிமா  படமெடுத்த கம்பெனி ,தினசரி வார பேப்பர் கம்பெனி முதற்க்கொண்டு அல்லாரும் கண்ணும் கருத்துமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறின .இதுமட்டுமல்லாமல் வருங்கால தமிழ்நாட்டு முதலஅமைச்சர்களாள நடிகை நடிகர் எல்லாரும் தொலைக்காட்சியில் முன் தோன்றி பொங்கலு வாழ்த்துச் சொன்னார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் முதல்வர் மட்டும் வாழ்த்து கூற மறுத்து விட்டார். காரணம் என்னவென்று பேப்பர் கம்பெனி செய்தியாளர்கள்.  விசாரித்தபோது...

தமிழ்நாட்டில் பொங்கள்ளு விழா கொண்டாடும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துச் சொல்ல போயஸ் கார்டனில் வாசம் செய்யும் புகழ் பெற்ற முன்னால் நடிகையும். இன்னால் ஊழல் குற்றவாளியுமான  நிஜ முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்க வில்லையாம்.

போயஸ் கார்டன் வாசஸ்தலத்தில் இருக்கும் நிஜ முதல்வரிடமிருந்து அனுமதியும் உத்தரவும் கிடைக்காத காரணத்தால்தான்  தமிழ்நாட்டின் நிழல் முதல்வர் பொங்கலு வாழ்த்து சொல்ல வில்லையாம்.  அய்யோ பாவம்...தமிழ்நாட்டு குடிமக்களுக்கு வந்த சோதனை....

படம்-www.semparuthi.com

காவி நிறத்தை கண்டுபிடித்து சொன்ன கல்வி அமைச்சர்....

படம்- கல்வி அமைச்சர் விலாஸ் சர்மா
சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் காவி நிறம் தோன்றுகிறது. இறைவனை வழிபடுகிறவர்களும் காவி நிற உடை அணிகிறார்கள். இந்திய தேசிய கொடியிலும் காவி நிறம் இடம் பெற்றுள்ளது. என்று தன் அரிய கண்டு பிடிப்பை அரியாணா மாநில கல்வி அமைச்சர் விலாஸ் சர்மா தெரிவித்தார்.

இதோடு.அரியாணா மாநில பள்ளி பாட திட்டத்தில்“பகவத்கீதை”ய சேர்க்க முடிவெடித்ததைத் தொடர்ந்து பாரத பண்பாட்டையும், நாகரீகத்தையும் கற்பிக்கும் வகையில்  கல்வி முழுவதும் காவி மயமாக்கப்படும் என்று கூடுதலாக அறிவித்தார்.

இதற்கு அரியாணா மாநிலத்தின்  காங்கிரசின் முன்னாள் முதல்வரான பூபிந்தர்சிங்ஹூடா “பகவத்கீதை”பாஜகவிற்கு மட்டுமே சொந்தமில்லை .உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது என்று தன்து கண்டனத்தின் மூலம்  கீதையைின் உரிமையை பதிவு செய்தார்.

வியாழன் 22 2015

பலம்பெரும் கோமாளி நடிகரைப்பற்றிய பரபரப்பு செய்தி....!!!

படம்-கோமாளி நடிகர்.
பிரபல கோமாளி நடிகரும் கோமாளி பத்திரிகையின் ஆசிரியருமான ச்சோ......வுக்கு  நள்ளிரவு மூச்சு திணறல் ஏற்பட்டதால்... அப்புலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்.

பலம்பெரும் கோமாளி  நடிகரை பரிசோதித்த  பிரபல வசூல் ராஜக்கள் .. தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ள மூச்சு திணறலை கட்டுப்படுத்த ஒரு வாரம் வரை எங்களது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டுமென்று கூறியுள்ளார்களாம்.








கேசரிவாலின் அடுத்த “ஐ” டெக் பிரச்சாரம்

கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
படம்- வினவு
வாக்காளர்களே! இது தேர்தல் காலம். அதனால் வாக்குக்கு பணம் கொடுக்க வருவார்கள் அவர்கள் ஏற்கனவே கொள்ளையடித்த பணத்திலிருந்து தருவார்கள். அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள், அப்படி பணம் கொடுக்காவிட்டால் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்....ஆனால் ஓட்டை மட்டும் “ஆம் ஆதமிக்கு” போட்டுவிடுங்கள் என்று கூறி ஓட்டுக்கு வாங்காமல் இருக்கக்கூடாது என்றார். அமெரிக்க ஆம் ஆத்மியின் டெல்லியின் முன்னால் முதல்வர்

இந்த முன்னால் முதல்வரின் பிரச்சாரம்  மோ(ச)டியின் தேர்தல் “ஐ” டெக் பிரச்சாரம் போல இருப்பதைக் கண்டவுடன் அரண்டு போன திருடர்கள் அனைவரும் .“ கேசரிவால்  ஓட்டுக்கு பணம் வாங்கும் ஊழலை ஊக்கு விக்கிறார் என்று தேர்தல் கமிசன் -ல் புகார் கொடுத்தன.

அமெரிக்க ஆம் ஆத்மியின் முன்னால் முதல்வரின் பிரச்சாரத்துக்கு  போட்டியாக    முன்னால் திருடர்களின் ஒரு பிரச்சார குழுவின் தலைவரான அஜய் மொக்கானும் 

அவர் தனது வண்டியில் சிவப்பு விளக்கை பயன்படுத்தாமல்,தன்னை சுற்றியிருந்தவர்களை பயன்படுத்தச் செய்தார். அவர் பாதுகாப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களை பயன்படுத்தச் சொன்னார். முதலமைச்சர் மாளிகையில் வசிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எட்டு அறைகள் கொண்ட ஆடம்பர பங்களாவில் ஆட்சி நடத்தினார். என்று பிரச்சாரம் செய்தார்.

இதற்கிடையில் தேர்தல் ஆணையம், கேசரியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ்க்கு பதில் அளிப்பதற்கு கால அவகாசம் அளித்துள்ளது.

ஆக டெல்லி தேர்தலில் மூன்று அமெரிக்க சீடர்களின் “ஐ”டெக் பிரச்சாரத்தில் டெல்லி வாழ் மக்கள் யாரிடம் ஏமாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை..






செவ்வாய் 20 2015

மன உளைச்சல் ஏற்ப்பட்டதால்..வழக்கு ....???

fly-i-2
படம்-வினவு



மாபெரும் பிரமாண்ட இயக்குநார் இயக்கிய பிரமாண்ட தயாரிப்பாளர் .தயாரித்த படத்தை பார்த்ததால்,மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால்  மேற்படி இருவருடன்  கதாநாயகனாக நடித்த நடிகர் மீது நடவடிக்கை கோரி  மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பாரதி கண்ணம்மா என்பவர்.

 1986-ம் ஆண்டு வெளி வந்த திஃபிளை என்ற ஹாலிவுட் படத்தை ஈயடிச்சான்  ரேஞ்சுக்கு காப்பியடிக்காமல் அதை  , தமிழ் சினிமா சுழலுக்கு ஏற்றபடி கண்...காது. மூக்கு வைத்து  படமெடுத்து ஓட விட்டிருக்கிற இந்தப்படத்தில் மூன்றாம் பாலினத்தவரை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சி இடம் பெற்றதால். அதைக் கண்டு தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஏற்ப்பட்டுள்ள மன உளைச்சலை போக்க இந்தியச தண்டனைச்சட்டம் பிரிவு 499,500,501,504, ஆகிய பிரிவுகளில் படத்தை இயக்கிய சங்கர், படத்தை தயாரித்த ரவிச்சந்திரன்,படத்தில் நடித்த நடிகர்கள் விக்கிரம், சந்தானம் ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விசாரனைக்கு வந்த போது வந்தபோது மனுதாரரின் மன உளச்சலை  போக்கும் முகமாக  விசாரனையை ஜனவரி22தேதிக்கு தள்ளிவைத்தார்.

1.தி பிளே..படம் பார்க்க


ஞாயிறு 18 2015

இந்துவை எதிர்க்கும் இந்து மக்கள் கட்சி ...........

Sn Sikkandar
மனு தர்மத்தை எதிர்த்து போராடாதது ஏன்?
***************************************************
எழுத்தாளர் மதிமாறன் :- இந்த புத்தகத்தை இவ்வளவு கடுமையாக எதிர்க்கும் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு ஒரு கேள்வியாக கூட இல்லாமல் வேண்டுதலாக ஒரு விஷயத்தை வைக்கிறேன்,
ஹிந்துவான அர்ஜுன் சம்பத் ஆகிய உங்களையும் ஹிந்துவான என்னையும் ஹிந்துவான குமரேஷன் அய்யாவையும் மற்றும் அனைத்து சூத்திரர்களையும் "வேசியின்" மக்கள் என்று சொல்லும் " மனு தர்மத்தை எதிர்த்து போராடாதது ஏன்?
காஞ்சி சங்கராச்சரியருடன் சுப்ரமணியன் சுவாமி சரிசமமாக உக்காருகிறார், அதே ஹிந்துவான மத்திய அமைச்சர் " பொன் ராதாகிருஷ்ணன்" மண்டியிட்டு தரையில் உக்காரவைக்க படுகிறார், இந்த அவலங்களை எல்லாம் எதிர்த்து போராடாத நீங்கள் உண்மையான ஹிந்துவாக இருக்க வாய்ப்பில்லை, அதனால் நான் ஹிந்து மத காவலன் என்று சொல்வதை நிறுத்திகொள்ளுங்கள்
அர்ஜுன் சம்பத்:- அய்யா அய்யா மனுதர்மத்தை நான் படிக்கிறதில்லை, நானா ஏன் அதை படிக்கணும், நான் படிக்கிறதெல்லாம் " தேவாரம், திருவாசகம்" அதனால் மனு தர்மத்தில் என்ன சொல்லி இருக்கு என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.
எழுத்தாளர் மதிமாறன் :- ஆறுமுக சாமி சிதம்பரம் கோயில்ல "தேவாரம் திருவாசகம்" தானே பாடினார், அவரை கடுமையாக தாக்கி சட்டையை கிழித்து கோயிலுக்கு வெளியே தள்ளிய தீட்சிதர்களை எதிர்த்து போராடாதது ஏன்?
அர்ஜுன் சம்பத்: - ப ப ப க ப க ப , அவர்கள் சோழ மன்னரால் போற்றப்பட்ட தீட்சிதர்கள் அவர்களை நான் எப்படி எதிர்த்துபோராட முடியும்
எழுத்தாளர் மதிமாறன் :- வள்ளலார் சிதம்பரம் கோயில்ல "தேவாரம் திருவாசகம் பாடினப்போ, அவரும் கடுமையாக தாக்கப்பட்டு வெளியேற்றபட்டார்.
அர்ஜுன் சம்பத்: - ப ப ப க ப க ப , அய்யா அய்யா நீங்க இப்படி விவாதத்துக்கு சம்பந்தமில்லாத கேள்விகேட்ட.... நா நா நா ......... சரி இவ்ளோ பேசுறிங்களே மனு தர்மத்தை பற்றி கருணாநிதியே மனு நீதி சோழன், மனு நீதி என்று சொல்லுவாரே, அதுகென்ன சொல்றிங்க.
எழுத்தாளர் மதிமாறன் :- அது மனு(petition)நீதி , மனு தர்மம் கிடையாது, நீதி தவறாத சோழ மன்னனுக்கு மனு நீதி சோழன் என்று பெயர்,
இந்த அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத அர்ஜுன் சம்பத் அவர்கள் ஹிந்து மதகாவலன் என்று காட்டிகொள்வது , அவரை குறைந்த பட்சம் ஹிந்துவாக கூட என்னால் ஏற்றுகொள்ள முடியாது, அர்ஜுன் சம்பத அவர்களே நீங்கள் ஹிந்துவே இல்லை என்று பகிரங்கமாக சொல்கிறேன் நான்.
நீங்கள் உங்கள் பிழைப்புக்காக மதத்தை கையில் எடுத்திருக்கும் ஒரு அரசியல்வாதிதான் நீங்கள்.//
சர்ச்சைக்குரிய மாதொருபாகன் புத்தகம் தொடர்பான விவாதமேடை நிகழ்ச்சி, நாள் : 13/01/2015
நன்றி:ஜாபர்




www.youtube.com/watch?v=zDfBhQiD-NY

மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. இறந்துவிட்டார் அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். ...