பக்கங்கள்

Thursday, April 21, 2016

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சித்தலைவரை நெகிழச் செய்த கதை,

உலக பாட்டாளிகளி வர்க்கத்தின் மாபெரும் தலைவரும் ஆசானுமான  உழைப்பாளிகளின் புரட்சித் தலைவருமான தோழர் லெனின் 1892- நவம்பரில் ஒரு பத்திரிக்கையை யதேச்சையாக படித்த போது அந்த பத்திரிகையில் வந்த சிறுகதை  பாட்டாளிகன் புரட்சித்தலைவரை நெகிழச் செய்துவிட்டது. அவரது மனமும் கனத்துப் போனது.

அவரது நிணைவில் ஜார் கொடுங்கோல் அரசால் தூக்கிலடப்பட்ட தன் அண்ணன் அலெக்சாந்தரும். அண்ணனின் நினைவால் இறந்து போன தன் தந்தையும். மருத்துவ மனையில் துடிதுடித்து இறந்த தங்கை ஒல்காவும் வந்து போயினர்.

தன் குடும்ப நிகழ்வோடு, அந்தக் கதை ஒத்துப் போனதால்..அந்தச் சிறுகதை அவரை நெகிழச் செய்துவிட்டது என்பது மிகையில்லை..


அந்தக் கதை.

150 மைல்களுக்கு அப்பால் ரயில்வே நிலையம் இல்லாத ஒரு நகரம். அந்த நகரத்திலே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு மருத்துவமனை ஒன்று இருக்கிறது.

அந்த மருத்துவ மனையில் ஆறாவது வார்டில் ஜவான்புரேமோவ் என்ற பெயருடைய மனநலம் பாதிக்கப்பட்டவன் ஒருவன் இருந்தான். அவன் அதிகம் படித்தவன். அதோடு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்.

அவனது குடும்பத்தில் ஒரு நாள் அவனது அண்ணன் மரணமடைந்தான்  அடுத்தாக .அவனது தந்தையும் இறந்து போனார். அவனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜவானுக்கு வந்தது.

ஜவானுக்கு சோதனைக்காலம்.அண்ணனும் தந்தையும் அடுத்தடுத்து இறந்து போனதால்  ஜவான் மனநலம் பாதிக்கப்பட்டு  பைத்தியமாகிப்போனான். ஜவான் மனநலம் பாதிக்கப்பட்டுப் போனதால் ,அந்த மனநல மருத்துவமனையில் நோயாளியாக “வார்டு என்று ஆறு”-ல் சேர்க்கப்பட்டு இருந்தான்.

அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர். தினமும் அதிகாலை வரை புத்தகம் படிப்பார். அந்த மருத்துவருடைய ஆசை எண்ணம் எல்லாம் எதுவென்றால்  “தன்னைப் போன்ற ஒரு படிப்பாளி ஒருவருடன் உலகத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் குறித்து உரையாட வேண்டும் என்பதுதான்.

அந்த மருத்துவ மனையில் அப்படி யாரும் இல்லாததால்.. பைத்தியமான ஜவான்தான் அந்த மருத்துவருக்கு கிடைத்தான்.

ஜவானும், அந்த மருத்துவரும் நிறைய பேசினார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த மருத்துவரும் பைத்தியமாகிப்போனார்..அந்த டாக்டரும் அதே மருத்துவமனையில் “ வார்டு எண் ஆறு” -ல் நோயாளியாக சேருகிறார். சிலநாளில் அந்த மருத்துவரும் இறந்து விடுகிறார்.

அந்த கதை,,“ வார்டு எண் ஆறு” என்ற தலைப்பில் ஆண்டன் செக்காவ் எழுதிய சிறுகதைதான்.

6 comments :

 1. உண்மையில் நெகிழ்ச்சியான கதையே... நண்பரே

  ReplyDelete
 2. கதை ,ஒரே சோகரசமாய் இருக்கே !

  ReplyDelete
 3. அருமையான கதை!
  த ம 3

  ReplyDelete
 4. ஆமாம் நெகிழ்ச்சி யான கதையேதான்...

  ReplyDelete
 5. தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 6. அருமையான கதை வலிப்போக்கன்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!