திங்கள் 25 2016

இவர்தான் தோழர் லெனின்...........!!!

சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியின் போது... பாட்டாளிகளின் தலைவர். தோழர் லெனினை சந்திக்க பத்திரிகையாளர் ஒருவர்.  சோவியத் தலைவரின் அறைக்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பு அறையில் அமர்ந்திருந்தார்.

அவர் சந்திப்பதற்க்கான  குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டிய பிறகும் தோழர் லெனினுடைய அறைக்கதவு திறக்கப்படவில்லை. வந்திருந்த பத்திரிகையாளர்க்கு ஒரே ஆச்சரியம்.. அது என்னவென்றால் நேரம் தவறாமல் இருப்பதில் லெனின் மிகவும் கறாராக இருப்பவர். என்பது அவருக்கு தெரிந்து இருந்தது.

யாராவது மிக மிக முக்கியமான பிரமுகர் உடன் லெனின் விவாதித்துக் கொண்டு இருக்கலாம் என்று அவரும் அவருடன்  வந்து காத்திருந்தவர்களும் நிணைத்துக் கொண்டார்கள்.

அரைமணிநேரம் கடந்தது ,ஒருமணி நேரம் ஆகியது. அந்த ஒரு மணி நேரமும் கடந்து ஒன்றரை மணியும் ஆயிற்று.. கதவு திறக்கபடவேயில்லை.. தோழர் லெனினுடன இவ்வளவு நேரம் நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப் பட்டு இருக்கும் அந்த முழு அதிகாரம் பெற்ற தூதர்  யாரோ? என்று யோசித்தார். சந்திப்புக்காக காத்திருந்த அந்த பத்திரிக்கையாளர்.

கடைசியாக சோவியத் தலைவரின்  அறைக் கதவு திறந்தது.. பிரதமர் அறையிலிருந்து  வெளியே வந்தவரை பாா்த்ததும் காத்திருந்த  அனைவரும் அசந்து போய்விட்டார்கள்.

அவர்கள் அசந்து போனனதுக்கு காரணம் வெளியே வந்தவர். பரட்டை தலையும், அழுக்கு உடையுமாக காட்சியளித்த ஒரு ஏழை விவசாயி..

தோழர் லெனினுடைய அறைக்குள் அந்த பத்திரிக்கையாளர் உள்ளே சென்றவுடன். லெனின் சொன்னார். “ உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வந்தவர் ஏழை விவசாயி. அவர் தம்போவ் பகுதியைச் சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதார கொள்கை போன்றவற்றைப் பற்றி அவருடைய கருத்துக்களை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. அதனால் நேரத்தை மறந்து விட்டேன. என்று சொன்னார்  ரைஸ் வில்லியம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரிடம்...





9 கருத்துகள்:

  1. படிக்க சுவாரசியமாக இருந்தது....

    பதிலளிநீக்கு
  2. தோழர் லெனின் அவர்களது வாழ்வில் ஒருநாள் அத்தியாயத்தைச் சொன்ன தோழருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. லெனின் அவரது வாழ்வில் ஒரு நாள் நிகழ்வை அறிந்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பிரமிப்பான மனிதர்தான் இன்றைய வார்டு கவுன்சிலர்கள் சிலர் செய்யும் அட்டகாசம் இருக்கின்றதே....

    பதிலளிநீக்கு
  5. இவரல்லவோ புரட்சித் தலைவர் !

    பதிலளிநீக்கு
  6. லெனின் வாழ்க்கையை படிக்கும் போது கக்கன், ஜீவா போன்ரவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  7. படிக்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்.

    பதிலளிநீக்கு
  8. இக்காலத்தில் இதுபோன்ற தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? தலைவரனெ்றால் இவர்தான்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....