அனலாய் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தியது வெயில். கொளுத்திய வெயிலில் வெந்துபோன நண்பர்கள் இருவர். டூவிலரில் பயணம் செய்து கொண்டே வந்த வழியில் இருந்த கடை ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினர்.
ஒருவர் இருக்கையைவிட்டு அந்தக் கடையில் கூல்டிரிங்ஸ் கேட்டார். அந்தக் கடைக்காரரோ கூல்டிரிங்க்ஸ்க்குப் பதிலாக... அந்நியனின் மூத்திரமான கோகோலாவையும் செவன் அப்பையும் பெப்சியையும் நீட்டீனார். இருவரும் வேண்டாம் மூத்திரம் குடிப்பதில்லை என்று மறுத்துவிட்டு...மீண்டும் வறுத்தும் வெயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.
சிறிது நேரம் பயண தூரத்தை கடந்து வந்தபோது.. ஒத்தை மர நிழலில் கீழ் ஒரு தள்ளு வண்டியில் “ கம்மங்கூழ்” விற்பனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள். ஏற்கனவே.. ஐந்தாறு டூவிலர்களுடன் .. நான்கு சக்கர வாகனம் கார் ஒன்றும் அந்த “ கம்மங்கூழ்” கடையின் முன் நின்று கொண்டு இருந்தது.
நண்பர்கள் இருவரும் ஆவலுடன் வண்டியை விட்டு இறங்கினர். அவர்களுக்கு முன் ஒருவர் பெரிய மீசை வைத்திருந்த ஒருவர் “கம்மங்கூழ்” குடித்துக் கொண்டு இருந்தததை நண்பர்கள் இருவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். எப்படி மீசையில் கூழ் ஒட்டாமல் குடிக்கிறார் என்று.
அந்த மீசை்க் காரர் தன்னை அலட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நின்று தலையை மட்டும் பின் பக்கமாக சற்று வளைந்து கொடுத்து, கம்மங்கூழ் நிரம்பிய செம்பு பாத்திரத்தை உயரே தூக்கியபடி..ஒரே சீராக தன் அகன்றபடி திறந்த வைத்துள்ள வாய்க்குள் ஊற்றினார். விழுங்கும் அடையாளமாக..தொண்டையில் உள்ள சங்கு மேலும் கீழுமாக அசைந்தாடி ஓடியது..
கம்மங்கூழ் மீசை படாமல் குடித்து முடித்ததும். தான் குடிப்பதை வேடிக்கையாக பார்த்தவர்களை மீசையை தடவியபடி வெற்றிப் புன்னகையுடன் பார்த்தார்.
மீசையில் படாமல் அன்னாந்து கூழ் குடிப்பது அவர் வழி முறையாக இருந்தாலும். அதில் ருசித்து குடிக்க முடியாததால். நண்பர்கள் இருவரும் அந்த மீசையின் வழிமுறையை பின்பற்றவில்லை..
கம்மங்கூழ் விற்பனையாளரிடம் சின்ன ஸ்பூன் கரண்டி வாங்கி சிறிது நேரம் பருகிப் பார்த்தனர். அது அவர்களில் ஒருவருக்கு சரிபட்டு வரவில்லை.. மீசைக்காரர் சாப்பிட்ட முறையில் சிறிது மாற்றம் செய்து மீசையில் கூழ் படாமல் சாப்பிட்டு முடித்தார். கம்மங்கூழும் அதனுடன் கொடுத்த வத்தல்களும் மிகவும் சுவையாக இருந்ததால் அதிகமாகவே சாப்பிட்டனர். நண்பர்கள் இருவரும்..
கரண்டியால் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவரும். நண்பர் சாப்பிடும் முறைபை்படியே மீசையில் கூழ்படாமல் சாப்பிட்டு முடித்தனர். கொளுத்தும் வெயிலுக்கு அது இதமாகவும் இருந்தது..
படம்- |
மீசையில் ஒட்டாமல் கூழ் குடிப்பது எப்படி?
பதிலளிநீக்குஅருமையான விளக்கத்துடன்
அழகாக கதை அருமை நண்பரே
காலத்துக்கு ஏற்ற வகையில் சொம்புக்கு பதிலாய் பாட்டிலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் வியாபாரம் பெருகுமே :)
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்.
நீக்குசெம்பு தூக்குவது அம்மாவுக்கு மட்டுமாக இருக்க வேண்டும். குடிப்பதற்கு கண்ணாடிக் குவளை, கப், கரண்டிகளை தான் பயன்படுத்த வேண்டும்.
அபுதாபியில் நானும் இதையே ஃபாலோ பண்ணுவேன் நண்பரே... தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஇப்ப என்ன சார்,மீசையில் கூழ் ஒட்டினால்,,?
பதிலளிநீக்குகூழ் குடிப்பதுதானே முக்கியம் இல்லையா,,,?
வியப்பாக இருக்கின்றது மீசையில் ஒட்டாமல் குடிப்பது என்பது ஆனாலும் கம்பங்கூழ் தனிச்சுவைதான்.
பதிலளிநீக்குகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பார்கள்! கூழ் இதுவரை இரண்டுமுறை குடித்திருப்பேன், அவ்வளவுதான்! அதுவும் ஆடி ஞாயிறு சமயத்தில்.
பதிலளிநீக்குமீசையில் கூழ் ஒட்டினால்தான் என்ன? அதனால்தான் எல்லோரும் தானியங்களை மறந்து விட்டார்கள்
பதிலளிநீக்குகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! பரவாயில்லை வலிப்போக்கன் மீசையில் ஒட்டினால்தான் என்ன கழுவிக் கொள்ளலாமே..கூழ்னைச் சுவைப்பது தானே முக்கியம் ..
பதிலளிநீக்குஉணவில் சுவை பற்றாகுறை காரணமாக தமிழ்மணத்தின் சமையல் குறிப்புகள் பகுதியில் தேடிகொண்டிருந்தேன். வலிப்போக்கன் பதிவு இருந்திச்சு! வலிப்போக்கனும் சமையல் செய்ய தெரிந்தவரா! என்று பாத்தா மீசையில் ஒட்டாமல் கூழ் குடிப்பது எப்படி? இது தானாம் அவர் சமையல் பதிவு!
பதிலளிநீக்குஅடுத்து நம்பள்கி பதிவு வந்தது. கேசரி செய்வது எப்படி என்பது போல் ஊழல் செய்முறை பதிவு.
ஊழல் செய்தது யார் என்று தெரியாத ஸ்டாலின் முதல்அமைச்சாரா? என்ற அவரின் பதிவு.