சனி 28 2016

அதிகாலை கனவுகள்.1



                           



சில நாட்களில் சில நேரங்களில்  எனக்குஅதிகாலையில் நல்ல தூக்கம் ஏற்ப்படுகிறது. அந்த நல்ல தூக்கத்தின் போது பல கனவுகள் நல்லதுமாய் கெட்டதுமாய்..... அப்படி தோன்றுகின்ற கனவுகளில் பல மறந்துவிடுகின்றன. சில மனதில் நின்றுவிடுகின்றன... மறக்காமல் நினைவில் நின்று விடுகின்ற கனவுகளை  உள்ளது உள்ளபடி அதிகாலை கனவுகள் தலைப்பில் தொடராக மேலான நண்பர்களுக்கு....... பதிவிடுகிறேன்

கனவில் தொலைந்த செருப்பு..நிஜத்தில் கிடைத்தது...

பெய்த பெரு மழையில் பஸ் செல்லும் ரோடெல்லாம் வெள்ளம் ஓடிக் கொண்டு இருந்தது. செல்போன் கம்பெனி தகவல் சேவை மையத்தின் அலுவலகம் இருக்கும் அபர்னா டவரின் அய்ந்தாவது மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்... அய்ந்தாவது மாடியில் எனக்கு என்ன வேலை என்றால். தகவல் சேவை மையத்தின் ரசீதுகளை தேதி வாரியாக பிரித்து பைண்டிங் செய்வது என் வேலை... அலுவலக பணியாளரின் உணவுகூடத்தின் முன்பாக எனக்கு பைண்டிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு நாற்காலியில் அமர்ந்தபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கையில். நிறுவனத்தின் H.R பெண் மேலாளர்.  . நான் இருக்கும் இடத்திற்கு வந்தார். வந்தவர் கையில் தனித்தனியாக கிழிந்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டி இது என்னோட பையனின் புத்தகம் அக்கக்காக கிழித்துவிட்டான். இதை உடனே பைண்டிங் செய்து தாருங்கள் என்றார்.

வெளியில் மழை பெய்கிறது.. மழை நின்றவுடன் வீட்டிற்கு சென்று செய்து கொண்டு வருகிறேன் என்ற போது....

அய்யோ...எனக்கு அதெல்லாம் தெரியாது..  நான் ஆபீஸ முடிந்து வீட்டுக்கு போகும்போது எனக்கு என் பையனின் புத்தக்தை பைண்டிங் செய்துதர வேண்டும்  என்றார்.

இவர் வந்தவுடன் நிர்வாகத்துக்கு சிக்னம் பிடித்து  தருவதற்க்காக  ரசீது பைண்டிங்  மூலம் வந்து கொண்டு இருந்த என் வருவாயின் பாதியை நிறுத்தி அதன் மூலம் பெருமை தேடிக் கொண்டவர்..  பின்பு A4சைஸ் டாக்குமெண்ட்களை மட்டுமே பைண்டிங் செய்து வந்து கொண்டு இருந்தேன். பின் கொஞ்ச நாளில்  மத்திய அமைச்சர்  ஒருவரின் புன்னியத்தில் கம்பெனியே கைம்மாறிப்போனபோது இந்த H.R.உள்பட பலர் காணாமல் போனது வேறு விசயம்... இப்போது கனவு கதைக்கு வருகிறேன்.

கண்டிசனாக சொல்லிவிட்டு H.R சென்றுவிட்டார்கள்...பைண்டிங் செய்தாலும் இவர்  காசு தர மாட்டார். கேட்டால் நாங்கள் வேலை தறோம்ல என்பார்.... ஒரு நாள் இவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி அணிந்த்து அலுவலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

அந்த நிணைப்பில் ரெண்டு ஆயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கி அணிந்து எல்லாரும் பேசுவதைக் கேட்டு பெருமைப்பட வசதி இருக்கிற இவர்.. தன் ஒரு மகனின் புத்தகத்தை பைண்டிங் செய்வதற்கு காசு தராமல் ஓசியில் வாங்கிக் கொள்ள அந்த மழையிலும் எனக்கு உத்தரவு போட்டுவிட்டு புத்தகத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது.  புத்தகத்தை பாலீதின் பையில் கொண்டு போனாலும் சுத்தமாக நான் நணைந்து விடுவேன். ஈரத்துடன் வீடு சென்றாலும் பைண்டிங் செய்ய முடியாது. மழையை வேடிக்கை பார்த்தபடி என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த போது. செக்ருட்டி வந்தார்..

அண்ணே.. மேடம் புத்தகத்தை பைண்டிங் செய்துட்டீங்களா? என்றார்  ஓ.. செய்திட்டேன் போய் கொடுங்க என்று புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன்.
வாங்கியவர் என்னண்ணே... அப்படியே கொடுக்குறிங்க என்றார்.

அடிக்கிற பேய் மழையில...இந்த பேயி..கொடுத்த புத்தகத்தை எப்படி பைண்டிங் செய்வது. சொல்லுங்க.. அதனால்தான்.... அப்படியே போய் கொடுங்க என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்றேன்.

சரி. என்று கொண்டு போனார்..... சிறிது நேரத்தில் ஆபீஸ் பாய் வந்தான் அண்ணே மேடம் கூப்பிடுறாங்க என்று வந்தான்..

அய்ந்தாவது மாடியிலிருந்த நான்காவது மாடியில் இருக்கும் அந்த மேடத்தை பார்க்க படிகளில் சென்ற போது பளிங்கு படிகளில் இருந்த மழை தண்ணிரின் ஈரம் வழக்கியதால் செருப்பை கழட்டி கையில் பிடித்துக்கொண்டு. அவர் அறைக்கு அருகில். எனது செருப்பை..  வெளியே ஓரமாக வைத்துவிட்டு விட்டு உள்ளே சென்றேன்..

என்னைவிட எச் ஆர் ஒரு அடி உயரமான கூடுதல தகுதி இருந்தாலும் வயதில் நான் மூத்தவனாக இருப்பதால. சில நேரங்களில்...இந்தா பைண்டரே என்பதற்கு பதிலாக மறந்து போயி இப்படி  மரியாதையாக பேசுவார்.

என்னங்க.. பைண்டிங் செய்யாம அப்படியே தர்றீங்க  என்றார்.. மழை நின்னாத்தான் செய்ய முடியும் என்றேன்..அய்யோ  நாளைக்கு நான் லீவுங்க..அதான் இன்னிக்கே கேட்டேன் என்றார். பைண்டிங் செய்யாமல் தைத்து மட்டும் தருகிறேன் தாங்கள் வேலைக்கு வந்தபின் காலையில கொடுத்துவிடுங்கள் வீட்டுக்கு செல்லும்போது கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு தைத்து  கொடுத்தேன்.... இவர்க்காக நான்காவது மாடிக்கும் அயந்தாவது மாடிக்கும் அலைந்த்தினால் என் செருப்பு நிணைவுக்கு வரவில்லை. மழையும் விடவில்லை.எல்லோரும் சென்ற பின்பு நான்  நனைந்தாவது வீடு செல்ல வேண்டும் என்ற நிலையில் செருப்பை தேடியபோது என் செருப்பைக் காணவில்லை. இரு நூறு ரூபா செருப்பு வாங்கி இரண்டு நாள்கூட ஆகவில்லை...

.
எல்லா இடத்திலும் தேடியபோதும் செருப்பு கிடைக்கவில்லை.. H.R- ரெண்டாயிரம் செருப்பை பார்த்த எனக்கு அந்த செருப்புதான் என் கனவில் வந்தது நான் பார்த்து வாங்கிய  செருப்பு  வரவில்லை.

பாவிகளா ரெண்டாயிரம் செருப்ப தூக்காம இரு நூறு ரூபா செருப்ப போயி...தூக்கிட்டீஙகளேடா... என்று புலம்பத்தான் தோன்றியது.... ரெண்டாயிரம் செருப்பு மீண்டும் மீண்டும் மறையாமல் வந்து நின்றது.அந்த செருப்பை உற்று பார்க்க நிணைத்தபோது...

விழிப்பு ஏற்ப்பட்டது... மணியைப் பார்த்தேன். காலை ஆறு.. எழுந்தவுடன் ரெண்டாயிரம் செருப்புதான் நிணைவுக்கு வந்த்து என் செருப்பை தேடினேன். காணவில்லை. விடாப்பிடியாக தேடினேன். அன்று இரவு பெய்த மழையில் என் வீட்டை சுற்றி தேங்கிய நீரில் . என் செருப்பு மழையில் நணைந்த படி   களவு போகாமல் பத்திரமாக  ஆடிக் கொண்டு இருந்தது.



7 கருத்துகள்:

  1. உழைத்த காசு கனவிலும் வீணாக போகாது ஜி :)

    பதிலளிநீக்கு
  2. செருப்பு என்றால் சாதாரணம் அல்ல என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
  3. உழைத்த காசில் வாங்கியது நன்றியுள்ள செருப்பு நண்பரே..

    பதிலளிநீக்கு
  4. செருப்புடன் சேர்ந்து நினைவுகளும்,,,/

    பதிலளிநீக்கு
  5. வியர்வை சிந்தி உழைத்த காசு வீணாகாது நண்பரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....