பக்கங்கள்

Tuesday, May 17, 2016

அடிமைகள் அழைப்பதினால் அப்படி கூப்பிட முடியுமா...??

 தோழர்... இந்த்த் தேர்தலில் யார் வருவார்கள் தோழரே...

நான் ஜோசியன் இல்லையே...நண்பா...???

தாங்கள் அப்படிச் சொல்லக்கூடாது.. ஒவ்வொரு தேர்தலிலும் தாங்கள் கணிப்பு சரியாக இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன் தோழரே...
சொல்லுங்கள்.

அப்படியா...? எனக்கு எதுவும் தெரியவில்லை நண்பரே...

அப்படி என்றால்.. கிளி ஜோஷ்யம் பார்க்கலாமா...???

தமிழ்நாட்டு தேர்தலைப்பற்றி கிளிக்கு என்ன தெரியும்...? கிளியிடம் கேட்பதைவிட... குடி(கார) மக்களிடம் கேட்கலாம் நண்பரே.....

நன்றி! தோழரே.. தங்களின் வழிகாட்டலின் படி...அதோ த்ள்ளாடி தள்ளாடி வரும் குடி மகனிடமிருந்து ஆரம்பிக்கிறேன் தோழரே...

வருக!....தமிழ் நாட்டின் குடி மகனே...! வருக!.. இவ்விடம் சற்று தள்ளாடாமல் நிற்க!  வரப்போகிற தேர்தலில் யாருக்கு ஒட்டு போட்டீங்க

வணக்கம்........ தலைவா... என்னாது  ...ஓ....ஓ....ஓட்டா.......அப்பிடீன்னா........ஹா....ஹா...ஹா..... ஓட்டா...... எனக்கு இல்லேன்னு சொல்லிட்டாங்கே.......

அப்படியா ...ஏன்? இல்ல  இருந்திச்சுனா.....யாருக்கு போடுவீங்க....... சார்

இருந்திச்சின்னா....... அய்யாவுக்குத்தான் போடுவேன்.....சார்..

என்னாது  அய்யாவுக்கா...!!!! அம்மா கட்சியின் வேட்டிய கட்டிக்கிட்டு... அய்யாவுக்கு போடுவேன்னு சொல்றீங்க.....ஏன்? இப்படி....!!!

ஷ்ஷ்......ஷ்.....ஷ்...... யாரு அம்மா...கண்டவக எல்லாம் என்னைப் பெற்ற அம்மா ஆக முடியுமா...??  என்ன சார்...  குடிச்சுட்டு உளருறேன்னு பாக்கீறீங்களா ..அந்த .அய்யாவ பாருங்க. கலைஞர், தலைவர்ன்னு பேரு வச்சுருக்கிறார்... அவர அப்பான்னு யாரும் கூப்பிட்டாங்களா..??அவர மாதிரி...இந்த புளச்சி தலைவி, கொளவி,கலைஞின்னு பேர வச்சுக்காம... அம்மா.நொம்மான்னு வச்சுகிட்டு, என்னபெற்று எடுத்து வளர்த்த  அம்மாவின் பெயரை கெடுக்குது...

..நீங்களெல்லாம் அப்படித்தானே கூப்பிடுறிங்க.......................

நானா...ஹா...ஹா...மத்தவுங்க எப்படியோ..??. அண்ணனுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே..அண்ணினுதான் கூப்பிட்டேன்... தலைவரோட சேர்ந்தப்போ தலைவின்னுதான் கூப்பிட்டேன்.... அம்மான்னு கூப்பிடவேஇல்லை.. தலைவா..அம்மான்னு அடிமைகள் அழைப்பதினால் அப்படி கூப்பிட முடியுமா...??அம்மான்னு அடிமைகள் அழைப்பதினால் அப்படி நானும்  கூப்பிட முடியுமா...??
........................

ம்ம்...தோழரே..  என்னப் பாருங்க ..உங்களுக்கே  தெரியும்.என்னை குடிகாரனாஆக்கினது யாருன்னு!! நீங்களும் எத்தன தடவ எனக்கு அட்வைசு பன்னியிருப்பீங்க.. வயதான என் அம்மாவும் எத்தினி வாட்டி உங்க்கிட்ட என்னய திருத்தச் சொல்லி அழுதிருக்கும்..சாராய கடைய திறந்து என்னை நாசமாக்கியவர்கள் எப்படி  அம்மாவாக இருக்க முடியுமா..??? தோழரே

இப்போ...அம்மான்னா... அவரைத்தானே குறிக்கும்...ப்பா...

அதுக்காக அம்மான்னு கூப்பிட முடியுமா....!!!நான்  அந்தக் கட்சியில்இருந்தாலும்  அந்தக் கிழவியை அம்மான்னு கூப்பிட்தில்ல்லையே...
நிஜமாகவா.......

அட.. சார்.......பொய்யா சொல்றேன்

பின் என்னப்பா ..தோழர்தான் இத்தினவாட்டி அட்வைசு பன்னி இருக்காருல... அந்த சாராயத்தை  வாங்கி குடிக்கிறத...விட்டுட வேண்டியதானே...???

என்ன செய்யிறது குடிச்சுப் பழகிப்புட்டேன். விட முடியல.... ...தப்பிக்கவும் வழியில்ல கடைய அடச்சலவாது  என்னால குடிக்காம இருக்க முடியும் என்ற நப்பாசையிலதான் சொல்றேன்... கலைஞர்க்காவது போகப் போகிற கடைசி காலத்திலாவது..  அவருக்கு புன்னியம் கிடைக்கிறதுக்காவாவது என்னை மாதிரி குடிகார பயலுக்கள காப்பத்தின புன்னியம் கிடைக்குமுன்னு சாராயக்கடைய மூடுவாரு.ன்னு........நம்புறேன்..

நம்பிக்கைதான் வாழ்க்கையின்னு சொல்லிக்கிறாங்க....  முடிவு வரட்டும் பார்ப்போம்  உங்க நம்பிக்கையை என்றார் தோழர்..

12 comments :

 1. வித்தியாசமாக மக்களின் மன நிலையைச்
  சொல்லிப்போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நம்பிக்கைதான் வாழ்க்கை நம்புவோம் கடை மூடலை....

  ReplyDelete
 3. இவர் ஒரு தெளிவாக உள்ள குடிக்கும் மகன். குடியை நிறுத்தினால் முன்னேறிவிடுவார்.

  ReplyDelete
 4. இவரோட நம்பிக்கையே அனைவரின் நம்பிக்கையும் :)

  ReplyDelete
 5. அம்மா என்று ஏன் அழைப்பான் பெயர் சொல்லிஅழைப்பதுதானேமுறை வெளிநாடுகளில் யாரையும் இப்படி அழைப்பது இல்லை ஜனாதிபதி என்றாலும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்)))

  ReplyDelete
 6. முடியாது, கூடாது.

  ReplyDelete
 7. ஹா..... ஹா.... ஹா.... ரசித்தேன். பாவம் அந்த குடிகாரன்... மதுவிலக்கை ரத்து செய்து சாராயக்கடை திறந்ததே ஐயாதான் என்பதையும் 2005, 2006 இல் இதே மதுவிலக்கு சம்பந்தமாக ஐயாவின் அறிக்கையையும் மறந்துட்டார் போல....!

  ReplyDelete
 8. நன்றாக அலசி உள்ளீர்கள்
  பாராட்டுகள்

  ReplyDelete
 9. குடிமக்களை குடிகார மக்களாக்கிய அரசு இனி வருமா...?

  ReplyDelete
 10. எந்தக் கட்சி வந்தாலும் இந்த சாராயம் ஒழியுமா தெரியவில்லை...ஏனென்றால் இந்தக் கட்சிகள்தானே மாறி மாறி வருகின்றன...எந்தக் கட்சியும் மூடவில்லையே....

  ReplyDelete
 11. அடிமைகள் ஆறாவது தடவையும் அடிமைகளாக வாழவே விரும்பியுள்ளனர்.

  ReplyDelete
 12. அடிமைகள் ஆரம்பித்துவிட்டார்கள்!
  https://www.youtube.com/watch?v=9qkIRIbzUe4

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com