பக்கங்கள்

Tuesday, May 31, 2016

கவரிமான் வேடம் போடும் கானகத்து கடும்புலி
தோழரே.... நீங்கள் கருத்து தெரிவித்த மாதிரியே.. கலைஞரும்  சொல்லி இருக்கிறார் என்று கூறியபடியே வந்தார் நண்பர்.

என்ன சொல்லியிருக்கிறார் கலைஞர் என்று தோழர் கேட்டபோது.நண்பர் கையில் கொண்டு வந்திருந்த பேப்பரை விரித்து படிக்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு படிக்க ஆரம்பித்தார்.

தோழரும் நண்பர் படிப்பதை கேட்க ஆரம்பித்தார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன்.நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, விருட்டென்று எழுந்து வெளியேறினாரே.... அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்தி விட்டார் என்பதையா..காட்டுகிறது.

அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது? தொடர்ந்து ஜெயலலிதாவின் தொலைக்காட்சியிலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் என்னைப்பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் திமுகவைப்பற்றியும் பண்பாடற்ற அநாகரிகமான மொழியில்தானே அர்ச்சிக்கிறார்கள்..

அவரது தொலைக்காட்சியில் நடப்பதும், நாளேட்டில் அர்ச்சிக்கப் படுவதும் ஜெயலலிதாவுக்கு தெரியாமலா நடக்கிறது? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலையை பிறர் அவருக்கு போதிக்க வேண்டுமா, என்ன? இப்படி  ஒரு பக்கம் அரசியல் நாகரித்தையும். பண்பாட்டையும் அடித்துத் துவைத்துக் காயப் படுத்துவதும், மறுபக்கம் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிப்பதுப் போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்.. நாடகத்தின் அடுத்து நடக்கப் போகும் காட்சி என்ன?

கானகத்துக் கடும்புலி 
கவரிமான் வேடம் 
போடுகிறது. உங்களையும் 
கடித்து குதறும்போதுதான் 
வேடம் எனபது தெரியும்
நாவில் நெளிவது விசம் 
என்பது புரியும்..
-      
 படித்து முடித்த நண்பர் தோழரைப் பார்த்தார்.  தோழரும் சரியாய்தான் சொல்லி இருக்கிறார் கலைஞர்.. கானகத்து கடும்புலி கவரிமான் வேசம் போடுகிறது , நாவில் நெளிவது விசம் என்று...


.
                       ............................................

7 comments :

 1. யோக்கியரு வாராரு சொம்பு எடுத்து உள்ளே வைங்க....
  கழுதை விட்டையில முன்விட்டை வேற பின்விட்டை வேறயா.....

  ReplyDelete
 2. அரசியல்ல இதெல்லாம் .........:)

  ReplyDelete
 3. அரசியல்கோமாளிகள் அதிகம் தான்)))

  ReplyDelete
 4. கானகத்துக் கடும்புலி கவரிமான் வேடம் போட, அது கவரிமானாகவே மாறிவிட்டதாக பலர் நம்பத்தொடங்கிவிட்டனர்.

  ReplyDelete
 5. இவர் இப்படிச் சொல்வதும் வேடிக்கைதான்.

  ReplyDelete
 6. இதுதான் அரசியல்.

  ReplyDelete
 7. க்லைஞர் சொல்லுவது அதுவும் ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஹஹஹஹ் அப்போ அவர் தொகுதிக்காக அவர் சட்ட சபையே செல்லவில்லையே இதுவரை...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com