நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை
தோற்கடிக்க எல்லா செய்தி பத்திரிகைகளும், செய்தி ஊடகங்களும் ஓரணியில் நின்று
வாங்கிய பணத்துக்கு மேலயே அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தன. . செய்தி சேனல்களிலே
வருவது விளம்பரமா..? செய்தியா? என்று திகைக்கும் அளவுக்கு கூவினார்கள். கூக்குரலிட்டார்கள்.
இவைகளுக்கு மத்தியில் .செய்தி பத்திரிக்கையின்
தினமலர் மட்டும் திமுகவை தோற்கடிக்க புதுவிதமான கைங்கரியத்தை கடைபிடித்தது.
அது தமிழ் இலக்கணத்தில் வருகிற
வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி. இகழ்வது போல் புகழ்வது, புகழ்வது போல் இகழ்வது போல்
இருந்தது.
தேர்தல் தேதி அறிவித்தவுடனே.. எல்லா
பத்திரிகையைப் போலவே அதுவும் தோ்தல்களம் என்ற ஒரு தனி சிறப்பு பக்கத்தை தொடங்கியது..
அதில் கடந்த
அய்ந்து ஆண்டகாலம் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றியும் ஜெயலலிதா 110
விதியின் கீழ் அறிவித்த திட்டங்களைப்பற்றி
குறை கூறுவதுபோல் விமர்சித்தது. இந்தத் தேர்தலில் திமுகதான் பெரும்பாண்மை வெற்றி
பெரும் என்று ஊதி பெருக்கியது.
இந்த ஊதி பெருக்கிய தினமலரின் கைங்கரியத்தை
புரியாத திமுகவின் உடன் பிறப்புகள், சூழ்ச்சிதனை புரியாமல் மெய் என நம்பி
புளகாங்கிதம் அடைந்து. அடுத்தது நம்ம ஆட்சிதான் என்ற மிதப்பில்
மிதந்துவிட்டார்கள், தினமலரால் மிதக்க வைக்கப்பட்டார்கள். அந்த மிதப்பில்தான்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் மும்மரமாக ஈடுபடாமல்.. அதிமுகவின் பணப்பட்டுவாடாவை
தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்....
இது திமுகவின் வெற்றியை தடுத்த முக்கிய
காரணங்களுக்குள் தினமலர் செய்த கைங்கரியமும் ஒன்று...
இது உண்மைதான் நண்பரே...
பதிலளிநீக்குநம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டதா தினமலர் ?
பதிலளிநீக்கு:))))))
பதிலளிநீக்குதிமுகவை விவிமு ஆதரித்தது உண்மை என்றால் இதுவும் உண்மைதான்
பதிலளிநீக்குதினமலர் வாங்கிய காசுக்கு குரைத்தது. தி.மு.க தோல்வி அடைந்தால் அவர்களை பழி சொல்வதேன் ?
பதிலளிநீக்குஆனால் ஒன்று நிச்சயம் சொல்ல வேண்டும்: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் எல்லா சேனல்களும் வெளியிட்ட எதிர் பார்ப்புகளில் தி மு க கிட்டத்தட்ட பெரும்பான்மை பெரும் என்று காண்பித்தார்கள்; அ.தி.மு.கவை வெறுப்பவர்களை விட தி .மு.கவை வெறுப்பவர் அதிகம். மூன்றாம் அணிக்குப் போடலாம் என்று இருந்தவர்களும் தி.மு.கவை வெல்ல விடக கூடாது என்றெண்ணி அம்மையாருக்குப் போட்டதாக நான் நினைக்கிறேன்