பக்கங்கள்

Monday, July 11, 2016

யாருக்கு பவர் அதிகம்...???நண்பர்கள் இருவர் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தனர் அவர்கள் பேச்சில் எந்த முடிவுக்கும் அவர்கள் வரவில்லை... பேச்சு நீட்டிக் கொண்டே போய் கொண்டே இருந்தது. மணி கடந்து  கொண்டே இருந்தது.

நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலையைக்கூட மறந்து பேசிக் கொண்டு இருந்தனர். தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வந்த ஆட்களும் இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து வியப்புடன் சென்றனர்.. சாராயக்கடை பத்து மணிக்கு அடைத்துவிட்டாலும்.. பாரில் சாராயம் விற்பனை ஆகிக் கொண்டு இருந்தது.

 முதலில் சாராயக் கடைக்கும் பின் சாராய பார்க்குக்கும்  போலீஸ் காரில் அமர்ந்திருந்தபடியே போலீஸ் காவல் காத்துக் கொண்டு இருந்தது. நண்பர்கள் இருவரும்  அதுகளை பொருட் படுத்தாமல் பேசிக் கொண்டு இருந்தனர்.

 நண்பர்கள்  விடாமல் பேசிக் கொண்டு இருந்தது . கடவுள் பவர் பெரிதா? பேய் பவர் பெரிதா? என்பதுதான்

ஒருவர். சாமியின் பவர்க்கு பயந்ததுதான்  பேய் என்று சொல்ல..இல்லை. பேயின் பவர்க்கு பயந்ததுதான் சாமி என்று அவரவர் கதைகளை அள்ளிவீசிக் கொண்டு இருந்ததினாலதான் அவர்கள் பேச்சு முடிவையாமல் நீண்டு கொண்டே இருந்தது.நண்பர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டு இருப்பது. பக்கத்துவீட்டுக்குள் நுழைய காத்திருக்கும் கள்ளக் காதலனுக்கும் அவன் வரவை எதிர் பார்த்து காத்திருக்கும் கள்ளக் காதலிக்கும் ரெம்பவும்  கடுங் கோபமாய் இருந்தார்கள்.

பொருத்து பொருத்து பார்த்த  க.காதலர்கள் இருவரும் தத்தம் காத்திருக்கும் இடத்திருந்து   நண்பர்கள் இருவரும் மீதும்  குறி பார்த்து  சற்று பெரிய கற்களைக் கொண்டு சரமரியாக எறிந்தனர்.

சரமாரியாக வந்து விழுந்த கற்களால் அடிபட்ட நண்பர்கள் இருவரும் அ்யயோ! அம்மா என்று அலறிபடியே இடத்தை காலி செய்தனர்.....

 இந்தப் பதிவை படிப்பவர்கள் சொல்லுங்கள் பவர் யாருக்கு அதிகம்..! சாமிக்கா..? பேய்க்கா...?

சரமரியாக விழுந்த கற்களால் சாமிக்குத்தான் பவர் அதிகம் என்று சொன்னவர்க்குத்தான் கல்லெறி காயம் அதிகம்.........

4 comments :

 1. ஹாஹாஹா காலக்கிரகமடி கருமாரி

  ReplyDelete
 2. பேய்க்குதான் சக்தி அதிகம் !பேயை ஒழிக்க கடவுளாலும் முடியவில்லையே :)

  ReplyDelete
 3. பகவான்ஜி அவர்கள் சொல்கிறார், பேய்க்குதான் சக்தி அதிகம், பேயை ஒழிக்க கடவுளாலும் முடியவில்லையே என்று, அவர் சொன்னது முற்றிலும் உண்மை.
  பேய்யை வைத்து பயங்காட்டி தானே கடவுளாரின் பிழைப்பே மனிதர்ககளிடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com