புதன் 13 2016

உரிமையை நிலை நாட்டிய குடிமகன்........





தூரத்தில் பஸ் ஒன்று வருவது தெரிந்தது அந்த குடிமகனுக்கு.. ஓரமாக நின்று கையை நீட்டினால் நிறுத்தாமல் சென்று விடுவாங்கே என்று அனுபவத்தில் உணர்ந்த அந்த குடிமகன் தா்ன தள்ளாடுவதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ரோட்டின் நடுவில் அதாவது பஸ்ஸின் முன் பக்கத்தில் நடுவில் வந்து தடுத்தார்.

பஸ் ஓட்டுனரும்  ஆகா...நம்மல விட இவிங்கே விவரமாத்தான் இருக்காங்கே“ என்று எண்ணியபடி... பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.

வண்டி நின்றதும் குடிமகனும் தன்னுடைய வியூகம் வெற்றி பெற்றதை எண்ணி பெருமையாக வண்டியில் ஏறி அமர்ந்தார்.

பஸ் சில தூரம் சென்றதும் கண்டக்டர் வந்தார். குடி மகனிடம் பயணசீ்ட்டு வாங்கும்படி கேட்டார்.

குடி மகன் எழுந்து நின்று அவிழ்ந்த வேட்டியை கட்டிக் கொண்டு இருக்கும்போது.. கண்டக்டர் பயணச்சீட்டு வாங்க காசு எடுக்கத்தான் எழுந்திருக்கார் என்று நிணைத்தவர். குடிமகன் திரும்பவும் உட்கார்ந்தவுடன் மீண்டும் பயணச்சீட்டு வாங்க  காசு கேட்டுள்ளார்.

 சாராய ராணி ஆளும் கோ்ட்டையின் குடிமகனின் உரிமைபை்பற்றி தெரியாத தவறுதலாக பயணச்சீட்டுக்கு காசு கொடுன்னு கேட்கலாமா..?.“ என்னையே டிக்கெட் எடுக்கச் சொல்கிறாயா” என்று கோபம் கொண்டார் ... அமெரிக்கவாழ் மக்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருப்பது போல், சாராய ராணி ஆளும் சாராய கோட்டையின் குடிமகன். தன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கத்திரிக்கோலால் சதக் சதக் சதக் என்று சரமாரியாக  பஸ் கண்டக்டரின் காலில் குத்தினார்.

 சாராய நாட்டின் குடிமகன் கத்திரி கோலால்  பஸ் கண்டக்டரை குத்துவதைக் கண்ட பயணிகள்  ஓடிக் கொண்டு இருக்கும் பஸ்ஸில் அலறி அடித்து  நாலா பக்கமும் சிதறி ஓட முடியாததால்..... உடனடியாக108 ஆம்பு  லன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
 காலம்தாமதிக்காமல் ஓடி வந்து கண்டக்டருக்கு முதலுதவி செய்தது.

தகவல் அறிந்து வந்த குடிமகன்களை காக்கும் போலீஸ் .. கத்திரிக்கோலால் குத்திய குடி மகன்  சாதாரண குடிமகனாக இருந்ததினால்  காவல் நிலையம் அழைத்துச் சென்றது..

5 கருத்துகள்:

  1. ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆஃப் அடித்தவர்களால் இன்னும் இருக்கு ஆப்பு

    பதிலளிநீக்கு
  2. பாட்டிலுடன் வருபவர்களுக்கு பஸ் ஃபிரீ என்று ஆக்கிவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா :)

    பதிலளிநீக்கு
  3. பயணிகள் பயந்து ஓடியதே
    அந்தக்குடிகாரனுக்கு
    அதிகத் தெம்பளித்திருக்கும்
    நம் மக்கள் குழுவாகையில் ஏனிப்படி
    சோப்ளாங்கி ஆகிவிடுகிறாரள்

    பதிலளிநீக்கு
  4. அமெரிக்கவாழ் மக்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருப்பது போல்சாராய ராணி ஆளும் சாராய கோட்டையின் குடிமகன். தன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கத்திரிக்கோலால் சதக் சதக் சதக் என்று சரமாரியாக...

    தமிழக குடிமகனிடம் கத்திரிக்கோலுக்கு பதிலாக ரிவால்வர் இருந்திருந்தால்..
    அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதின் பயங்கர அபாயம் பற்றியும் வலிபோக்கர் அருமையாக விளக்கியுள்ளார்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...