பக்கங்கள்

Friday, July 22, 2016

நாட்டிற்கு மிகவும் தேவையானது.. முக்கியமானது.

அய்ஏஎஸ் மற்றும் வேலைக்கான பரிட்சைளிலும்,நேர்முகத் தேர்விலும் கேட்பாங்கே... அதனால் நாட்டிற்கு மிகவும் தேவையானதும் முக்கியமானதுமான் இவற்றை தெரிந்து வைத்துக் கொல்லுங்கள்.

கேரள நடிகர் மோகனலாலின் மாமனார் பாலாஜி
நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் சகோதரி
ராஜேஸ்வரி பார்த்தசாரதி..இந்த ராஜேஸ்வரியின்
மகன் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். இந்தமகேந்திரனின் மனைவியோட
தங்கை லதா ரஜினிகாந்த். நடிகர் ரஜினி காந்தின் மகள் ஐஸ்வரியா
ஐஸ்வரியாவின் கணவர் தனுஷ்.   லதாரஜினிகாந்தின்  தம்பி ரவி,
நடிகர் ரவியின் மகன் அனிருத்.. நடிகர்ஒய்.ஜி மகேந்திரனின் 
மகள் மதுவந்தி, மதுவந்தியின் கணவர் அருண்,அருணின் 
பாட்டி நடிகை சாவித்திரிஜெமினிகணேசன்.7 comments :

 1. ஆமாமா ரொம்ப ரொம்ப முக்கியம்தான்

  ReplyDelete
 2. சாகலாம் போலிருக்கு ,இத்தனை நாள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து இருக்கிறோமே :)

  ReplyDelete
 3. தெரிந்து வைத்துக் கொண்டு நிச்சயம் கொல்லுவோம். யாரைக் கொல்ல வேண்டும் என்ற பட்டியல் மட்டும் கொடுத்தால் போதும்.

  ReplyDelete
 4. ஆம் இவை மிகவும் தேவையான விவரங்கள். ஆனால் மனப்பாடம் செய்வது தான் கடினமாக இருக்கிறது.
  --
  Jayakumar

  ReplyDelete
 5. நாட்டிற்கு தேவையான அத்தியாவசியமான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. நாட்டிற்கு மிகவும் தேவையானது, முக்கியமானது என்பதில் கபாலி ரஜினி நடிகர் மோகன்லாலுக்கு என்ன முறை என்பதை அறிந்து வைத்து கொள்வதோடு, தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கான வித்தாய் எப்படி கபாலி படத்தில் ரஜனி செயல்பட்டார் என்பதையும் அறிய பாடம் படித்து கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!