பக்கங்கள்

Saturday, June 06, 2015

தாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...!!!


படம்-  வினவு ..வாராயோ தோழி வாராயோ…………!


முன்னால் முதல்வரும
இன்னாள் முதல்வரும்
 தேர்தலில் நின்று ஜெயிக்க

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
குறித்து கொடுத்த நல்
நாளில் வேட்பு மனு
தாக்கல் செய்வதற்கு...

புறப்பட்டு செல்லும் சாலை
வழியில் பத்தடிக்கு ஒரு
போலீஸ் நிறுத்தப் பட்டு
அந்த போலீசுக்கு துனையாக
 தொண்டர்களும் காத்து கொண்டு
நின்றனர் முதல்வரின் தரிசனத்துக்காக

சரியாக ஒன்றரை மணிக்கு
கடற்கரை சாலையில் தேரில்
பவனி வந்த வேளையில்
அக்னி பகவானின் தாக்கம்
அதிக அளவில் இருந்தது

இன்னாள் முதல்வர் பவனி
வந்த தேரில் குளிர்
சாதன வசதி இருந்தும்
தேரின் இடது பக்கத்தில்
ஓரமாக அமர்ந்து இருந்தாலும்
தேரில் பொருத்தப்பட்ட
கண்ணாடியை ஊடுருவி அக்னி
தாக்கியதால்.. அந்த தாக்குதலை
தடுக்க தேரின் பின் இருக்கையில்
அமர்ந்து வந்த முதல்வரின்
தோழி ஒரு அட்டையை எடுத்து
தன் தோழியின் முகத்தின்
ஒரு பக்கமாய் வைத்து
அக்னியின் தாக்குதலிருந்து தன்
தோழியை காத்தாள் தோழி..

14 comments :

 1. சேவை தொடரட்டும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாக்குபடியே சேவை தொடரும்

   Delete
 2. என்ன சொல்ல என்ன சொல்ல
  இந்தக் கதை பற்றி என்ன சொல்ல

  ReplyDelete
  Replies
  1. எல்லாத்தையும் சொல்லியாச்சு...இனி என்ன சொல்லி என்ன செய்ய என்கிறிர்களா??? அய்யா.

   Delete
 3. தாரசில் வைத்து நிறுத்த மடியாத பாசம் அய்யா....

  ReplyDelete
 4. தனது தோழி யார் கடவுள்.
  கடவுளை அக்னி தாக்குமா? தோழி சிந்தித்திக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தோழியை சோதிக்க அக்னி பகவான் நடத்திய அவதாரமாக கூட ஏன்? இருக்கக்கூடாது... !!!

   Delete
 5. Replies
  1. அக்னி பகவான் மீது ஆணையாக மெய்யாலும்தான்..

   Delete
 6. தோழிகளை கண்டு என் கண்ணே பட்டு விடும் போல.... திருஷ்டி பூசணிக்காய் வாங்கி உடைங்க நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. இன்று விடுமுறை நாளாக இருந்ததால்..திருஷ்டி பூசனிக்காய் கடை அடைக்கப்பட்டதால் உடைக்க முடியவில்லை....

   Delete
 7. எனக்கு இப்படி ஒரு தோழி இல்லையே,

  ReplyDelete
  Replies
  1. அதுக்கெல்லாம் முற்பிறவியில நீங்க கொடுத்து வச்சிருக்கனும்.

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com