பக்கங்கள்

Monday, July 04, 2016

பேத்திக்காக சிறை சென்ற பாட்டிஏழாவது படிக்கும் அந்தச் சிறுமியின் பெயர் பிரியங்கா, இருந்த போதும் பிரியங்காவுடன் படிக்கும் பள்ளி, மற்றும் வகுப்பு மாணவிகள் கூப்பிடுவது, குறிப்பிடுவது, சுட்டிக்காட்டுவது எல்லாமே  கஞ்சா பாட்டியின் பேத்தி என்றுதான்.

பிரியங்கா என்ற பெயரைவிட கஞ்சா பாட்டிபேத்தி என்ற பெயரே அந்தப்பள்ளி முழுவதும் பிரபலமாக விளங்கியது.

பிரியங்காவின் வகுப்பு ஆசிரியர் உள்பட அந்த அந்தப்பள்ளியின் ஆசிரியர்களோ.“பிரியங்காஎன்று பெயர் சொல்லி அழைக்காமல் கஞ்சா பாட்டி பேத்தி என்றே அழைத்தனர்.

பிரியங்காவுக்கோ, தன்னை எல்லோரும் தன் தோழி உள்பட கஞ்சா பாட்டி பேத்தி என்று அழைப்பது ஒருவிதமான  அவமானத்தையும் இகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஒரு நாள் பிரியங்கா, மனக் குமுறலோடும் அழுகையோடும் , பள்ளி முடிந்து வந்தவுடன் தன்பாட்டியிடம் கொட்டித் தீர்த்தாள்.

“தன்னை எல்லோரும் “கஞ்சா பாட்டி பேத்திஎன்றே  அழைக்கிறார்கள். “நீ கஞ்சா விற்பது எனக்கு கேவலமாக இருக்கிறது.. நீ ..கஞ்சா விற்பதை நிறுத்தாவிட்டால் நான் பள்ளிக்கு போகப்போவதில்லை.. அதோடு நான் செத்துப் போவேன் என்று தன் பாட்டிக்கு  எச்சரிக்கை விட்டார்  சிறுமி பிரியங்கா......

பேத்திக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மனக்குமுறலையும் எச்சரிக்கையையும்  கண்டு பதைபதைத்த பிரியங்காவின் பாட்டி, மனதில் தீர்மனமாக ஒரு முடிவு எடுத்து, தன் பேத்தியிடம் உறுதிபட தெரிவித்தார்.
இனிமேல். எந்தச் சூழ்நிலையிலும் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் கஞ்சா விற்கும் தொழிலை செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார்.

அன்றையிலிருந்து பிரியங்காவின் பாட்டி கஞ்சா விற்கும் தொழிலை நிறுத்திவிட்டு, மானமுள்ள வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு மாதம் கடந்து சில நாள் ஆனபிறகு ஒருநாள், பிரியங்காவின் பாட்டியைத் தேடி  அப்பகுதி போலீஸ் வந்து காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றது. காவல் நிலையத்தின் ஆய்வாளர். அந்தப் பாட்டியிடம் மாதா மாதம் வரும் மாமூல் சென்ற மாத்த்தில் கொடுக்காத மாமூலை ஏன் கொடுக்கவில்லை என்று விசாரித்துக் கொண்டு இருந்தான்.

தன் பேத்திக்காக, கஞ்சா விற்கும் தொழிலை கைவிட்டதாகவும் , தன் பேத்திக்கு கொடுத்த வாக்குறிதிக்காகவும் தாம் இனிமேல் கஞ்சா விற்கப்போவதில்லை என்று காவல் ஆய்வாளரிடம் கூறினார்.

அந்தக் காவல் ஆய்வாளரோ, பிரியங்காவின் பாட்டி சொன்னதை கேட்டு ஏளனமாக சிரித்துவிட்டு, மாதம் மாதம் எங்களுக்கு மாமூல் கிடைக்க வேண்டும் அதனால்  நீ கஞ்சா விற்க வேண்டும்  இல்லை என்றால் உன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுவோம். அதனால் எதிர்த்து எதுவும் பேசாமல் கஞ்சா விற்று மாத மாதம் மாமூல் கட்டுற வழியைப் பார். என்று மிரட்டியபடி கண்டிப்பு செய்தான்..

காவல் ஆய்வாளரின். மிட்டலுக்கும் கண்டிப்புக்கும் பயப்படாத அந்த மூதாட்டி,என் தலைமுறையோடு இந்த ஈனத் தொழில் ஓழியட்டும் சிறை சென்றாலும் பரவாயில்லை.. இனிமேல் கஞ்சா விற்கப் போவதில்லை என்று உறுதியுடன் கூறினார்..

கோபம் கொண்ட ஆய்வாளர் ரைட்டரை கூப்பிட்டு,. இந்தக் கிழவி வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா கைப்பற்றதாக பதிவு செய்து குண்டர் சட்ட செக்சனைபோட்டு  வழக்கு பதிவு செய் என்று உத்தரவிட்டான்.

தன் பேத்திக்காக கஞ்சா விற்கும் தொழிலை கைவிட்ட பாட்டி,  மீண்டும் போலீசின் மாமூலுக்காக மீண்டும் கஞ்சா விற்கச் சொன்ன காவல் ஆய்வாளரின் மிரட்டலையும் மீறி, கஞ்சா விற்க மறுத்தற்க்காக, கஞ்சா விற்றதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்  

இது பிரியங்காவிற்கு வருத்தமாக இருந்தாலும் கஞ்சா பாட்டி பேத்தி என்ற அவப் பெயர் மறைவதில் பெருமையாக இருந்தது.

 கூடவே, போலீஸ.ஸ்டேசன் மாமூலுக்காக, கஞ்சா விற்க மறுத்த பிரியங்காவின் பாட்டி பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்  என்ற செய்தியும் வைரலாக பரவியது.. 

5 comments :

 1. திருந்தி வாழவும் விட மாட்டாங்களா ?என்னையா இது கொடுமையா இருக்கு :)

  ReplyDelete
 2. இதுதான் இந்திய அரசியல் சட்டம் வேதனையாக இருக்கின்றது எல்லோருக்கும் மனது என்ற ஒன்று இருப்பதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

  ReplyDelete
 3. இந்நிலை எப்போது மாறுமோ?

  தமிழ்மணம் 503 எரர் என்கிறது!

  ReplyDelete
 4. ஹும் என்னவோ போங்க நம்ம நாடு உருப்பட்டாப்புலதான்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com