பக்கங்கள்

Monday, September 05, 2016

சித்து வெள்ளி பதக்கம் பெற உதவியது யாரு தெரியுமா...?

அன்றைய செய்தித்தாளை படித்த அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒலிம்பிக்கில்  பேட்மின்டன்  விளையாட்டில்  சித்து வெள்ளி பதக்கம் பெற்றதற்கு காரணம் யாரு தெரியுமா..? என்று  தான் சொன்ன போது தன்னை எல்லோரும் எள்ளி நகையாடியது அவருக்கு நிணைவு வந்தது


இப்போது பி.வி. சித்து. வெள்ளி பதக்கம் வாங்க காரண கர்த்தாவாக இருந்தது யாரு என்று செய்தித்தாளை படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. எனபது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய கணிப்பு சரியாக இருந்திருக்கிறது என்பதை தன்னை எள்ளி நகையாடியவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று  முடிவு செய்தார்.. அதனால் மீண்டும் அந்தச் செய்தியை படித்தார்.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதால் திருப்பதி கோயிலில் சித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.   ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம்  வென்ற வீராங்கனை பி.வி.சித்து திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் நேற்று தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் நேர்த்திக் கடனாக  ரங்கநாதர் மண்டபம்அருகே உள்ள துலாபாரத்தில் தனது எடைக்கு எடை வெல்லம் காணிக்கையாக செலுத்தினார்.. அவருடன் சென்ற பயிற்சியாளர் கோபிசந்தும் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்


சாமி தரிசனம் செய்த சித்து நிருபர்களிடம் கூறுகையில் , “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்லும் முன் ஏழு மலையான் கோயிலுக்கு வந்து ((ஏழமலையானே. நான் ஒலிம்பிக்கில்  வெற்றி பெற்று பதக்கம் வெல்ல அருள் புரிய வேண்டும் என்றும் அதற்கு காணிக்கையாக ... எடைக்கு எடை வெல்லம் செலுத்துகிறேன் என்று )  வேண்டிக் கொண்டேன்.


தற்போது ஏழுமலையான் அருளால் நான்  வெற்றி பெற்று பதக்கம் பெற்றதால் எனது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்தினேன். தொடரந்து போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெறுவேன் -----என்று அவர் படித்து முடித்ததும் தன் தொடையை ஓங்கி அடித்து... அவராக பேசிக் கொண்டார்.

வௌக்கண்ண வெண்ணெய்கள் “ ஏழுமலையானிடம் வேண்டியதால்தான் சித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்” என்று தான் அப்ப சொன்னதை ஒரு வெண்ணய்களும் நம்பல.... இப்ப அந்தப் பொண்ணே சொல்லியிருச்சுலே....
என்றபடி மீண்டும் தன் தொடை அடித்துக் கொண்டார்.

“இப்ப  என்னடா சொல்லப் போறீங்க...” னொண்ணைகளா...?? என்றார் வெற்றி பெருமிதத்தில்.........

அவரின் னொண்ணைகள் வந்து அவருடன் பேசிய பிறகுதான்... அடுத்து என்னவென்று  தெரியும்..


3 comments :

 1. சிந்து இப்படி சொன்னது எனக்கும் ஏமாற்றம் தான்.
  அந்த பதக்கம் கொடுத்த கடவுளார் தங்க பதக்கத்தை கொடுத்திருக்கலாமே! அவர் தங்க பதக்கத்தை பெறுவாய் என்று மட்டும் சொன்னால் போதுமே, சிந்து தங்க பதக்கத்தை பெற்றிருப்பார்.

  ReplyDelete
 2. வெள்ளி பதக்கத்துக்கு ஏன் வேண்டிகிட்டாங்க ?தங்கம் என்றாலே ஏழு மலையானுக்கு மட்டும்தான் சொந்தமா :)

  ReplyDelete
 3. எடைக்கு எடை
  வெல்லமா?
  பாராட்டுகள்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!