பக்கங்கள்

Wednesday, September 07, 2016

இதெல்லாம் எதற்க்காக...........அன்று ஒருநாள்
ஒரு அமாவாசை
இரவில் அவர்கள்
இருவரும் ஒருவரை
ஒருவர் இடித்துக்
கொண்டார்கள்.........

மறு நாள் காலையில்
நல்ல வெயிலில்
அவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
பார்த்து முறைத்துக்
கொண்டார்கள்........

பின் ஒருநாளில்
அவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
திட்டிக் கொண்டபடி
அடிதடியில்  மோதிக்
கொண்டார்கள்................

இடித்துக் கொண்டதால்
முறைத்துக் கொண்டதால்
மோதிக் கொண்டதால்
ஏற்ப்பட்ட கௌவரத்தில்

இருவரும் தங்கள்
கைகளில் வெட்ட
அரி வாளுடன்
உச்சி வெயில்
மணடையை பிளக்க
பட்டப் பகலில்
ஒருவரை ஒருவர்
வீதியல் வெட்டிக்
கொண்டார்கள்.............

ஒருவன் பிணவறையில்
மற்றவன் அடுத்து
பிணவறைக்கு செல்ல
ஐஒசியில்................

இதெல்லாம் எதற்க்காக
அய்யா எதற்க்கா..க......
5 comments :

 1. இடித்து கொண்டதற்கா இந்த கலவரம்

  ReplyDelete
 2. ஒருவரை ஒருவர்
  வீதியிலே
  வெட்டிக் கொல்லத் துணிந்த பின்
  பிணவறை என்ன
  சுடுகாடு என்ன
  இடுகாடு என்ன

  ReplyDelete
 3. டாஸ்மாக்கால் வந்த வினையோ :)

  ReplyDelete
 4. எதற்காக என்றுதான் நானும் கேட்கிறேன் ?

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com