திங்கள் 10 2016

அண்ணே..... நீங்களா....ண்ணே...

அண்ணே.... அண்ணே.....என்னண்ணே....பேசமாட்டுறீங்க......

நா..... எப்பப்பா...பேச மாட்டுறேன்னு சொன்னேன்....செல்போன்ல வேறு ஒருத்தருகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்பவே..... பொறு பொறுன்னு கை சாடை காட்டினேன் நீங்க....தாப்பு கவனிக்க மாட்டுறீங்க........

ஹா.....ஹா.....ஹா.........

என்ன..‘ஹா....ஹா..... கூப்பிட்ட விவரத்த சொல்லுங்கப்பா.....

அது வேற ஒன்னுமில்லண்ணே...... எல்லோரும் ஆயுத பூஜை கொண்டாடிகிட்டு இருக்காங்க....... நீங்க கொண்டாடலயா..ண்ணே...... ன்னு கேட்கத்தாண்ணே  கூப்பிட்டேன்ணே....

ஏண்டா...டேய்.......ஆஸ்பத்திரியில.. அம்மா. கெடக்குது... அது செத்துச்சா...பொழச்சுச்சா  இல்ல .உயிரோடு இருக்கா இல்லயா, அட என்னதான் ஆச்சுன்னு ஒரு எழவும்   தெரியல..... இதுல.. ஆயுத பூஜை கொண்டாடலயா.... சுன்டலு, பொரி கடலையும்  குடுக்கலியான்னு கேள்வியா கேட்குறீங்க.....நீங்க எல்லாம் என்ன ஜென்மம்டா.....இந்தத் தெருவுல எத்தன ஒர்க் ஷாப்பு இருக்கு எவனாச்சும் ரேடியா போட்டு  உங்க காதையேல்லாம் கதற விட்டு இருக்கானுங்களடா.....நிலமகேத்து கேளுங்கடா.......


அண்ணே..... நீங்களா....ண்ணே..... பேசுறிங்க......எனக்கு புல்லரிக்குதுண்ணே...

என்னது புல்லரிக்குதா..... போடா...போயி... அம்மா கடையில ஒரு புல்லு வாங்கி அடி..எல்லாம் சரியா   போயிடும்.....

போங்கண்ணே   சும்மா...... இங்கே சுண்டலுக்கும் பொரிக்கும்மே வழியக் காணோம்   இதுல  அம்மா கடையில புல் அடிக்கச் சொல்லிட்டாரு போங்கண்ணே........


3 கருத்துகள்:

  1. ஆயுத பூஜை ,ஆயுதங்களுக்காக கொண்டாடப் படுவதில்லையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழில் அபிவிருத்திக்காக ஆயுதங்களுக்கு நன்றி என்பதுகூட அறிவுக்குப் பொருத்தமாகாது. காலுக்கு செருப்பு அவசியம்தான் - அதற்காக அதற்குப் பூஜை போட முடியுமா?

      நீக்கு
  2. இதனாலதான் அபுதாபில் யாருமே கொண்டாடலையோ...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....