ஞாயிறு 09 2016

பாவி, அவன் காந்தி மன்றத் தலைவனாம்....

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்,


அவன் வீட்டு
பண்ணை அடிமையாக
பணி ஆற்றிய
 என் தந்தையை
ஏமாற்றி என்
தந்தை பெயிரில்
உள்ள வீட்டு
வரியை அவன்
பெயரில் மாற்றி
விட்டு நான்
வசிக்கு வீட்டை
வாடகை கொடுக்க
வில்லை என்று
சொல்லி குடி
இருக்கும் வீட்டை
காலி பன்னச்
சொல்லி வக்கீல்
நோட்டீஸ விட்டான்

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்,

அரை குறை
விபரத்துடன் என்
தாயும் பதில்
நோட்டீஸ் விட்டார்

வழக்கு பத்து
வருடம் நடந்தது
இறுதியில் உரிமை
இயல் கோர்ட்டீல்
தீர்த்துக் கொள்ளச
சொல்லி பாவி
அவன் போட்ட
வழக்கு தள்ளுபடி
ஆக்கியது கோர்ட்டு

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்

மீண்டும்  அவன்
உரிமையில் கோர்ட்டில்
வழக்கு தொடுத்து
என்னையும் என்
தாயையும் கோர்ட்டுக்கு
இழுத்து அடித்தான்

பாவி அவன்
காந்தி மன்றத்
தலைவனாம் அவன்

கோர்ட்டில கருப்பு
அங்கி அணிந்த
சாத்தான்களோ சமர்பித்த
ஆதாரங்களை வைத்து
தீர்ப்பு சொல்ல
வக்கற்று போயி
இருபது ஆண்டாக
வாய்தா போட்டே
வழக்கு தொடுத்தவன்
சாக  அவனுக்கு
வழக்கு நடத்துவனும்
சாக, வழக்கு
தொடுத்தவனின் மூத்த
மகனும் சாக
இடையில் வழக்கில்
சேர்ந்தவனும் சாக
கடைசியாக என்
தாயும்  போய்
சேர்ந்த பின்பும்
காந்தி படத்தை
மாட்டி வைத்து
இருக்கும் கோர்ட்டில்
21 ஆண்டாக
இன்னும் வாய்தா
போட்டுகிட்டு இருக்காங்கே...

பாவிகள் அவர்கள்
இன்னும் இந்த
நாட்டை காந்தி
தேசம் என்கிறாங்கே..




5 கருத்துகள்:

  1. தங்களது சொந்த அனுபவத்தை சொல்லும் பொழுது நீதி இன்னும் இருக்கின்றதா... என்ற சந்தேகம் வருகின்றது நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.
    வணக்கம்.
    தங்களின் தனிப்பட்ட அனுபவமா? அல்லது பொதுவான நீதி அமைப்பினைப் பற்றிய சாடலா வலிப்போக்கரே?

    பதிலளிநீக்கு
  3. தாமத நீதி ,அநீதி என்று அவர்களுக்கு புரியாதா :)

    பதிலளிநீக்கு
  4. தங்கள் தாயாரை இழந்த நிலையில் கடந்த ஆண்டு பதிவர் சந்திப்புக்கு வராதது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....