பக்கங்கள்

Friday, October 28, 2016

தீபாவளியை துறக்கச் செய்த தாய்.........நாற்பது வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது..எனக்கு பதிணைந்தோ,பதினாரோ வயது இருக்கும். என்வீடு பனை ஓலையால் வேயப்பட்ட கூரைவீடு.. மழை பெய்தால்  வீட்டினுள் ஒதுங்குவதற்குகூட  இடமிருக்காது. அந்தளவுக்கு ஒட்டை ஒடிசலும் நிறைந்த வீடு . அந்த வீட்டை திரும்பவும் வேயமுடியாமல் அல்லல்பட்ட நேரம். அப்படிபட்ட நேரத்தில் வந்தது தீபாவளி..

திருமணம் முடித்து சென்ற என் ஒரே அக்காவுக்கு தலை தீபாவளி என்று சொல்லப்படுகின்ற முதல் தீபாவளி. அந்த சமயங்களில்  என் அம்மா மட்டுமே வருமானம் ஈட்டும் உழைப்பாளி.. வருகிற பணத்தில் நானும் என் அம்மாவும் வாழ்நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் வந்தது தீபாவளி.

என் அக்காவும் மச்சானும் தலை தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என் அம்மா தீபாவளிக்கு கையில் காசு இல்லாத குறையை நிணைத்து கவலைப்பட்டாலும் அந்தக் கவலையை எனக்கு முன்னால் காட்டாமல.. தெரிந்தவர்களிடம் கடன் கேட்டு பார்த்தார்கள் கடன் எதுவும் கிடைக்கவில்லை.

சோர்ந்து போயிருந்த நேரத்தில் என் அம்மா வீட்டு வேலை பார்க்கும் முதலாளி அம்மா வீட்டிலிருந்து என் அம்மாவுக்கு இரண்டு சேலைகள் கொடுத்தார்கள். ஒருமாத சம்பளத்தை இனாமாக கொடுத்தார்கள்..

மகிழ்ந்து போன என் அம்மா... தனக்கு கிடைத்த சேலையை என் அக்காவுக்கும், கிடைத்த பணத்ததில் என் மச்சானுக்கு வேட்டி சட்டையும் எடுத்துக் கொடுத்து பெண்ணை பெற்றெடுத்த இல்லாத வீடுகளில் தொன்று தொட்டு விடாது துரத்தி  வந்த தலைத் தீபாவளி பழக்கத்தை ஒரு வழியாக நிறைவேற்றி முடித்தார்கள்.

நான் தீபாவளிக்காக புதுத்துணிகள் கேட்காமால இருந்த போதிலும். என் அம்மா. என்னிடம். உன் அப்பா இறந்த நாள்டா.. அதனால் நீ தீபாவளியை கொண்டாடக் கூடாது. புதுத் துணி அணியக்கூடாது  என்றார்கள்..

அம்மாவிடம் இருக்கும் பயத்தில் சுருதி குறைந்த குரலில் ,“ அக்கா் மட்டும் புதுத்துணி அணியலாமா என்று கேட்டபோது சொன்னார்கள். அக்கா அடுத்தவர் வீட்டுக்கு வாக்கப்பட்டுபோன பொண்ணு, அவர்கள் நம்ம வீட்டு துக்கத்தில் பங்கெடுப்பார்களா..? என்று பதிலும் கேள்வியுமாக கேட்டபோது.. புரியாமல்  சரிம்மா... தங்கள் சித்தம்மா என்று விட்டு,  முகம்மறியா என் அப்பாவின் இறந்த நாளுக்காக தீபாவளியை புறக்கணிக்க என் அம்மா சொல்லியதை ஏற்றுக் கொண்டேன்.

அன்று முதல் இன்றுவரை என் தந்தையார் இறந்த துக்க நாள் என்பதை மனதிலே ஏற்றுக் கொண்டு. கூடுதலாக அம்பேத்கர், பெரியார், மற்றும் தோழர்கள் எழுதிய, வாசித்த. கேட்டறிந்த உண்மைகளை தெரிந்து கொண்டு எம்பாட்டன் நரகாசுரன் இறந்த வஞ்சக கதைகளை காரணகாரியங்களோடு கேட்டும் தீபாவளியை அந்நிய தீபாவளியை கொண்டாடியதே இல்லை.


அன்று தீபாவளியைப் பற்றி எதுவுமே தெரியாத காலத்தில்... இருந்த எனக்கு முதன் முதலில் தீபாவளியை துறக்கச் செய்த என் தாய்க்கு எனது முதல் வணக்கமும் நன்றியும்....


5 comments :

 1. பரவாயில்லை நண்பரே இதெல்லாம் மனதளவில் ஒரு சடங்குதானே.... விட்டுத்தள்ளுங்கள்.
  சந்தோஷ தினத்தை தீபாவளி ஆக்கி கொள்வோம்

  ReplyDelete
 2. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 3. தீபாவளி வந்த விபரம் தெரிந்த பிறகு கொண்டாடவே மணம் வந்திருக்காதே :)

  ReplyDelete
 4. அம்மா சொன்னது மிகவும் சரியானது.
  மகிழ்ச்சியாக கொண்டாடுவற்கே கொண்டாட்டங்கள்.
  அப்பா இறந்த நாளை கொண்டாட முடியாது.
  //பொருளாதார வசதிகளில்லாத நிலையில் தீபாவளி கொண்டாட முடியாது
  பெண்ணை பெற்றெடுத்த இல்லாத வீடுகளில் தொன்று தொட்டு விடாது துரத்தி வந்த தலைத் தீபாவளி பழக்கத்தை ஒரு வழியாக நிறைவேற்றி முடித்தார்கள்.//
  இந்த கொடுமைகள் வேறு என்று தான் ஒழியுமோ!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com