பக்கங்கள்

Tuesday, January 10, 2017

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் இல்லை...


மழையும் பொய்த்துவிட்டது  விவசாயமும் பொய்த்துவிட்டது... மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சமும் பெருகிவிட்டது...இப்படி  ஒன்றா...இரண்டா  எடுத்துச் சொல்ல......

இந்த லட்சணத்தில் எனது மதிப்பிற்குரிய தலைவர்களும் அ்ண்ணன்களும் நண்பர்களும்... தமிழ்மானம் காக்கும் வீரர்களும்  ஜல்லிகட்டு நடத்த போராட்டத்துக்கு விரைந்து வா  நண்பா... என்று  எனக்கு அழைப்பு விட்டார்கள்.. அண்ணன்களும் தலைவர்களும் என்னிடம் ஜல்லிகட்டு பற்றிய என் கருத்தைக் கேட்டார்கள்..

எனக்கு வேலைதான் சோறு போடுகிறது அதனால் அந்த வேலைகள் இருப்பதால்   அண்ணன்களையோ..தலைவர்களையோ சந்தித்து கருத்துரைக்க முடியாத காரணத்தால்.... எனது கருத்துக்கு உடன்பாடான வினவு தளத்தில் வந்த  கட்டுரையையே. சொடுக்கி ..............

இன்றைய நிலைமைக்கேற்றவாறு பொருத்தி படித்துக் கொள்க....மாற்றிக் கொள்ள முடியாத   மாற்றுக் கருத்து இருந்தால்..  பத்திரமாக  பூட்டி வைத்துக் கொள்க ..... பிற்பாடு    பேசிக் கொள்ளலாம்

சொடுக்கி படிக்க............
ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?
9 comments :

 1. நமது விளையாட்டை, நம் வீட்டில் விளையாடத் தடை
  நமது வீட்டில் உள்ளவர்களே தடுக்கிறார்கள், வேதனை வேதனை

  ReplyDelete
 2. இந்த காலத்துக்கு ஒவ்வாத விளையாட்டு :)

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரியாக சொன்னீர்கள் பஹவான்ஜீ.
   மாட்டோடுமட்டுமல்ல, மனிதர்களோடும் விளையாடி மனிதர்களை துன்புறுத்தும் காலத்துக்கு ஒவ்வாத விளையாட்டுகள் பல நம்மிடம் இப்போதும் உண்டு.

   Delete
 3. உங்கள் வேலை உங்களுக்கு முக்கியம் தான் ஜி...

  ReplyDelete
 4. நெடுநாள் நிலைத்த ஜல்லிக்கட்டு
  விடுதலை பெற்று ஓய்வெடுப்பதா?
  தமிழர் பண்பாடு மறைவதற்கா?

  ReplyDelete
  Replies
  1. ஐயா,
   தமிழர்கள் வாழும் இலங்கையில் ஜல்லிக்கட்டு இல்லையல்லவா.
   தனுஷ் கமலஹாசன் சூர்யா கார்த்திகேயன் போன்றவர்களுக்காக இங்கே தமிழகத்தில் மட்டும் எதற்கு ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்?

   Delete
  2. ஐயா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
   நான் 16 november 2017 பேசிய இலங்கை நண்பர் கூட சொன்னார் மாட்டோடு சண்டை போடுவது என்பது இலங்கைதமிழர்களிடம் ஒரு போதுமே கிடையாது என்றார்.லூசு தனம் என்றார்.
   ஜல்லிக்கட்டு என்பது ஒரு லுசு தனம் என்பது உண்மையே.

   Delete
 5. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக பொங்கி எழுந்துள்ளார்களாம் தனுஷ், கமலஹாசன், சூர்யா, கார்த்திகேயன்!
  முதலில் அரசு ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடைசெய்வதிற்கு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து தடை செய்ய வேண்டும். அதன் பின்பு தான் அரசியல் கட்சிகளும் வலிப்போக்கர் சொன்ன தமிழ்மானம் காக்கும் வீரர்களும் மக்களுடைய அவசிய தேவைகளுக்காக போராடுவார்கள்,அதற்காக மெரினாவிலும் ஊர்வலம் போவார்கள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com