பக்கங்கள்

Wednesday, January 11, 2017

அதனால்தான் பேசமுடியவில்லை............

என்னா..தலைவரே..போன் அடித்தால்  எடுக்கக்கூட மாட்டுறீங்க...அவ்வளவு பிசியா.....???


பிசியெல்லாம் கிடையாது தலைவரே..... முன்னாடி ஒரு மணி நேரத்தில செய்த வேலைகள் எல்லாம் இப்போது செய்து முடிக்க ரெண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகுது.... முன்னாடி மாதிரி  வேக வேகமா செய்து முடிக்க முடியவில்லை... அதனால் வேலையின் கவனத்தில் இருப்பதால் போன் அடிப்பது காதில் விழுவதில்லை   அதனால்தான் எடுத்து பேச முடியவில்லை...


அப்படி என்றால் வேலைகள் தேங்குமே....???

தேங்கினாலும் செய்து முடித்துவிடலாம் என்றாலும் புதுசா வேலை கொடுக்கிற சீமான்களை நிணைத்தால்தான்   எரிச்சலா  இருக்கிறது....

எரிச்சலா..உங்களுக்கா... அப்படி என்ன  எரிச்சல.....

புதுசா வேலை கொடுஙக்கறவங்க... அதாவது பத்தரிக்கை அடிக்கிறவங்க.... புருப் பார்த்து முடிக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு மேல எடுத்துகிட்டு, ஃபுருப் சரியாக இருக்கிறது என்று  காலையில் வந்து சொன்னவுடன்  மாலையில் பத்திரிக்கை வேண்டும் என்கிறார்கள்... அதான்.....எரிச்சல்...


நியாயமான..எரிச்சல்தான் நண்பரே......கல்யாணம் முடிந்த மறுநாளே  பிள்ளை வேண்டும் என்கிற கதையாக இல்ல  இருக்கிறது....

ஆமங்க.....வர்ர  நபர் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க...... அதனால் காலையில் உட்கார்ந்தால்  இரவு பத்து மணிக்கு மேல்தான் உட்காந்த இடத்தைவிட்டு நகர வேண்டியதாக இருக்கிறது... அதனால்தான் பேசமுடியவில்லை.. சந்திக்க முடியவில்லை... கோபித்துக் கொள்ளாதீர்கள்...

பரவாயில்லை.. பரவாயில்லை.....உங்க வேலைதான் எனக்கு தெரியுமே.... சரி பொங்கல் பண்டிகை.......எப்படி...???

பொங்கல் பண்டிகையா....பொங்குற பண்டிகையாகத்தான் எனக்கு தோனுது..அந்த பொங்கல் பண்டிகைய.. தொலைக்காட்சி காரனும்  சினிமா காரனுகம்தான் கொண்டாடுவாங்கே.... அவிங்கதானே.... ஒரு வாரத்துக்கு முன்பே விளம்பரம் செய்துகிட்டு இருந்தாங்கே.......எனக்கு வேலை இல்லாத நாட்கள்தான் விடுமுறை நாள்..... அந்த விடுமுறை நாளும் வரவர குறைஞ்சிகிட்டே வருது...வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை... அதனால்தான் குடும்பத்தோடு வேலை செய்கிறோம்.......

வேலை  செய்யச் செய்ய வருவாய்தானே....

ஆமாமா... இன்னிக்கு செய்த வேலைக்கு ஒரு மாசம் கழித்துதான் செக்கு கொடுப்பாங்க.... அந்த செக்கு கிளியரிங் ஆகி வருவதற்குல்ல... மொள்ள நிறைய சேர்ந்திடும்.....

 ஒ....ஒ... அப்படி  ஒன்னு இருப்பதை மறந்துவிட்டேன்... நீங்க சொன்னபிறகுதான் ஞாபத்துக்கு வந்தது... எனக்கு சில மொல்ல செலவு வந்தது நினைவுக்கு வந்துவிட்டது. பிறகு பேசுகிறேன்...  முடிந்தால் அந்தப் பக்கம் வந்தால்  வீட்டுக்கு வருகிறேன்.

நல்லது....வாங்க... வச்சுடுகிறேன்....

7 comments :

 1. "புதுசா வேலை கொடுஙக்கறவங்க...
  அதாவது பத்தரிக்கை அடிக்கிறவங்க....
  புருப் பார்த்து முடிக்கிறதுக்கு ஒரு வாரத்துக்கு மேல எடுத்துகிட்டு,
  ஃபுருப் சரியாக இருக்கிறது என்று
  காலையில் வந்து சொன்னவுடன்
  மாலையில் பத்திரிக்கை வேண்டும் என்கிறார்கள்...
  அதான்.....எரிச்சல்...

  நியாயமான... எரிச்சல்தான் நண்பரே......
  கல்யாணம் முடிந்த மறுநாளே
  பிள்ளை வேண்டும் என்கிற கதையாக இல்ல இருக்கிறது...." எனச் சிறப்பாக ஒப்பீடு செய்துள்ளீர்கள்.
  அருமையான கையாளும் வழி

  ReplyDelete
 2. ஒரு மாசம் கழித்துதான் செக்கு...? ஐயோ...

  ReplyDelete
 3. உண்மை டிவிகாரனும், சினிமாகாரனும்தான் கொன்று ஆடுறான் நண்பரே

  ReplyDelete
 4. இப்போது பொங்கல் ஆன்லைனில் பொங்கித் தராங்களே...ஆர்டர் கொடுத்தா வீடு தேடி வருது பேக்கேஜ்...இனிமே எல்லாமே வெர்ச்சுவலாக மாறிடுமோ...

  ReplyDelete
 5. வேலை வராது ,வந்தால் இப்படியா :)

  ReplyDelete
 6. பொங்கல்வாழ்த்துடன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com