புதன் 25 2017

வெறி நாயில.ஆணென்ன..பெண்னென்ன....தோழர்..

வணக்கம்....தோழர்.....!

வணக்கம்..தோழர்...!!

உடம்பு சுகமாகிவிட்டதுங்களா.....தோழர்...??.

ம்.ம்....சுகமாக்கிவிட்டார்கள்  தோழர்....

நாட்டு நடப்புகள் மற்றும்  மாணவர்கள் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியும்தானே........தோழர்..

தெரிந்து கொண்டேன் தோழர்...ஜல்லிகட்டு போராட்டத்தின் முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் தோழர்... தொண்டை கிழிய கோஷம் மிட்டதாலும்...பசியை போக்க தண்ணீரைஅடிக்கடி குடித்ததாலும் அன்று இரவில்  உடம்புக்கு  முடியாமல்.. நோயில் படுத்துவிட்டேன் தோழர்... மற்றபடி தோழர் என்றால் தேச விரோதி என்று  ஏவல் அதிகாரி சொன்னது வரை நடந்த நிகழ்ச்சிகள் அணைத்தும் தெரிந்துகொண்டேன்.. தோழர்.

அப்படியா...? மகிழ்ச்சி..தோழர்.

மெரினாவில் ஏவல் துறை நடத்திய வன்முறையில்.. பெண் என்றால் பேயும் இறங்கும் என்று சொல்லிக் கொல்கிற பெண் போலீசும். தன்னுடைய ஏவல் சேவையை கச்சிதமாக செய்திருக்கிறதே..தோழர்...

தோழர்...வெறி நாயில..ஆணென்ன... பெண்னென்ன தோழர்.. ரெண்டும்.. பாய்ந்து கடித்து குதறும் தோழர்...அதுகளின்  ரேபிஸிருந்து யாரும் தப்பிக்க முடியாது தோழர். இதோ இந்த வீடியோவுல. அவர்கள் திரும்ப வருவார்கள் என்று மெரினா தாக்குதல் பற்றி குமுறும்  ஒரு பெண்ணின் குமுறலை  பாருங்க........






மேலும் ..படிக்க.....






7 கருத்துகள்:

  1. காணொளி நாளை கணினியில் காண்கிறேன் தோழர்

    பதிலளிநீக்கு
  2. வீடியோவை பார்த்தீர்களா , வீட்டின் மேல் தீயை வைப்பவர் பெண் போலீஸ் தான் !

    பதிலளிநீக்கு
  3. வேதனைதான்...ஆனால் மீண்டும் அறிவுபூர்வமாக வருவார்கள் என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  4. இனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. உயிரைவிட்டாலும் விடுவோம், மாட்டோடு சண்டைபோட ஜல்லிக்கட்டை விட மாட்டோம் என்று போராட்டம் நடத்திய மாணவர்களையும்.மற்றவங்களையும் தானே அவர்கள் திரும்ப வருவார்கள் என்று அந்த பெண் வீடியோவில் சொல்கிறார்!
    மாணவர்கள் படிக்க வேண்டாமோ? இப்படி அந்த பெண் அவர்கள் திரும்ப வருவார்கள் என்று சொல்வதெல்லாம் கடவுள் வருவார்,அருள்புரிவார்,இயேசு உலகத்திற்கு Coming back என்று சொல்வதை போன்றவைகளே.
    போராட்டம் நன்றாக ஜாலியா போய்கொண்டிருந்த போது, ஒரு பெண்மணி பேசினார் அந்த மேடம் (இரும்பு தலைவி, ஆளுமை கொண்ட தலைவி) இன்று இருந்திருந்தால் எமக்கு இந்த நிலை வந்திருக்குமா என்றார். ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் முட்டிக்கு முட்டி தட்டி இந்த கூட்டம் மெரினாவில் சேராமலே பார்த்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வீடியோவில் பேசும் இந்தம்மா சொல்கிறார்,மொத்த இந்தியாவும் பார்த்து பிரமித்த மாட்டோடு சண்டைபோட்டு வீரத்தை காட்டும் விளையாட்டிற்காக போராடிய மாணவாகள் என்று சொல்லி பெருமையடைகிறார் கர்வம் கொள்கிறார்.
      இப்போது செய்தி பார்த்தேன், சென்னையில் தடையை மீறி பஸ் டே (பஸ் தினம்) கொண்டாடும் மாணவர்கள்
      பஸ் டே கொண்டாடுவதற்கு இருக்கும் தடையை மீறி மாணவர்கள் திடீரென பட்டாசு வெடித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
      நானும் வெளிநாட்டில் மாணவனாய் இருந்து குப்பை கொட்டியிருக்கிறேன். தமிழக மாணவர்கள் மாதிரி பஸ் டே கொண்டாடிய பொறுப்புணர்வுள்ள மாணவர்கள்,மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள் கொண்ட, புரட்சிகர எண்ணங்கள் கொண்ட மாணவர்கள் வேறு எவரையுமே நான் கண்டதில்லை.
      அந்தம்மா சொன்ன மாதிரி மாட்டோடு சண்டைபோட்டு வீரத்தை காட்டும் விளையாட்டிற்காக போராடிய அவர்கள் திரும்ப வருவார்கள் தமிழகத்தை காப்பாற்றுவார்கள்.

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...