என்ன...அண்ணே...அஞ்சாறு நாளா....ஆளையே...காணோம்... மெரினா போராட்டத்துக்கு போயிட்டிங்களா.....???
ஏன்டா....டேய்...என்னப் பாத்தா...அப்படியாடா...தெரியுது....????
பின்னே..... தமிழ்நாடே..... பத்தி எரிஞ்சுகிட்ட இருக்கருப்பா... உங்கள காணோம்ண்ணே...........இதுல வேற.. மெரினா கூட்டத்துல சமூக விரோதிக புகுந்திட்டாங்கன்னு..பரபரப்பா டிவியில பேட்டி கொடுத்தாங்களா அதே நேரத்துல... உங்கள வேற காணோமா...???? நீங்கதான் மெரினாவுல புகுந்திட்டிங்களான்னு நிணச்சண்ணே...
அப்படியாடா ..சரிடா... மதுரை கே...ஆஸ்பத்தரியில... குளுக்கோசு ஏத்திகிட்டு பெட்டுல படுத்துகிடந்தப்போ..என்ன . வந்து பாத்தவன்க யாருடா...அவிங்க.....???
அவிங்களாண்ணே....அவிங்க சமூக விரோதிகண்ணே.....
என்னது சமூக விரோதிகளா...??இப்பத்தானடா என்ன சமூக விரோதின்னு சொன்ன .......
சமூக விரோதிய பாக்க சமூக விரோதிக வருவது நட்புகாகத்தாண்ணே
அடேங்கப்பா நட்பு நிறைந்த அந்தசமூக விரோதிக யாருடா.....???
அவிங்களாண்ணே.. ஹிப் ஹாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்சு, கெமிசனர் ஜார்ஜ் ண்ணே....
ஏலே....வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்னு இவுகள்ல சொல்றாங்க.....
என்னண்ணே.. நீங்க. புரியாம கேக்குறீங்க..... ஆத்தா போலீச பத்தி இன்னும் புரியாம இருக்கீங்க..... .....
ஏலே.ஒன்னவிட எனக்கு நல்லாவே புரியும்டா... ஆமா.... ஆத்தாதான் செத்து போச்சுலடா.... ...
ஆத்தா செத்து போச்சுன்னா... சின்ன ஆத்தா... இருக்குல.... இந்தா இந்த வீடியோவ பாருங்க.....மெரினாவில் புகுந்த சமூக விரோதியாருன்னு. உங்களுக்கு தன்னாலயே புரியும்....
ஹா ஹா ஹா ஸூப்பர்
பதிலளிநீக்குமாணவர்களின் எழுச்சியைக் கொச்சைப் படுத்த இப்படியா செய்வார்கள் :(
பதிலளிநீக்குஇந்திய மத்திய அரசம்
பதிலளிநீக்குதமிழ்நாடு் மாநில அரசும்
தோல்வியை ஒப்புக்கொண்டதால்
மாணவர் எழுச்சியை அடக்கினரோ!
மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்
இந்திய மத்திய அரசம்
தமிழ்நாடு் மாநில அரசும்
என்ன தான் செய்ய முடியும்?
காவலர்களின் போக்கு கண்டிக்கத் தக்கது
பதிலளிநீக்குமோசமான முடிவு... இருந்தாலும் வெற்றி...
பதிலளிநீக்குநல்ல தொடக்கம். மோசமான முடிவு.
பதிலளிநீக்கு