வியாழன் 26 2017

உண்மையான சமூக விரோதிகள் யார்....???

அந்த டீக் கடையை ஒட்டிய இடத்தில்   மூன்று நான்கு பேர் அன்றைய செய்திப் பத்திரிக்கையில் வந்த விபரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.அவர்களின் பேச்சு  மெரினா போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார் ? என்ற கேள்வியிலிருந்து தொடங்கி...  உண்மையான சமூக விரோதிகள்  யார்?? என்று கண்டுபிடிப்பிதில் முடிவுறா நிலையில் சென்று கொண்டு இருந்தது...

அவர்களின் அறிவு மட்டத்திற்கு சமூக விரோதிகள் என்றால். திருடர்கள், கொள்ளையர்கள் என்ற கணிப்பில் இருந்தது... இருந்தாலும் அவர்களுடன் வேறு யார் சமூக விரோதிகள் என்று கண்டபிடிக்க முடியாத..தெரியாத நிலையே  நீடித்தது..

தெரியாத அந்த உண்மையான சமூக விரோதிகள் யார் ?? என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டதால்... தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வீதி வழியே பொகிறார்களா..?  என்று கவனித்தனர்.


நெடு நேரத்திற்கு பிறகு ..வீதிவழியே சென்ற ஒரு தோழரை தவறிவிட்டு..பின் அதில் ஒருவர் ஓடிச் சென்று கையோடு கூட்டி வந்து... அவரிடம் தன் சந்தேகத்தை கேட்டனர்.....

அவரோ....என்னைவிட.... நம்ம கணேஷ்  தோழர்...உண்மையான சமூக விரோதி யாருன்னு உங்களுக்கு விளக்கமாக சொல்வார்...  இருங்கள்... அவரை கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று விட்டு.... அவர் சொன்ன  அந்த கணேஷ் தோழரை அழைத்து வந்தார்.


 வந்தவர்  சந்தேகம் எழுப்பியவர்களைப் பார்த்தார்.. அவரின் அனுபவத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள் அனைவரும்  த்ண்ணிவண்டி பார்ட்டிகள்....என்று தெரிந்து கொண்டார்.

அவர்களின் பார்வையில்.. தான் தோழர் என்ற தகுதியில்... இருப்பதால்  அவர்களுடைய  சந்தேகமான  உண்மையான சமூக விரோதிகள் யார் ??என்று
அவர்களுக்கு  சுருக்கமாக அவர் விளக்கினார்..

அய்யா  நான் கேட்கிறேன்னு  நீங்க என் மேல் கோபப்படக்கூடாது... சரிங்களா
என்று ஒரு பீடீகையுடன் தொடர்ந்தார்.

அய்யா.... உங்க அப்பா  அம்மா..காலத்துல..... சாராயம் காய்ச்சுறவன்... விக்கிறவன்...ஊறுக்கு சற்று தள்ளி ஒதுக்குப்புறமாக இந்தாங்கே அதை குடிக்கிறவன் எல்லாம்  அவுக விட்டாளுக்கே தெரியாம  ஏன்? ஊறுக்கே தெரியாம போயி குடிச்சுகிட்டு வருவாங்க.. என்பது தெரியுமா...? என்று தோழர் கேட்டதும்....

எல்லோரும் ஒரே குரலில் தெரியும் என்றார்கள்...ஏன்? அப்படி..?அவர்கள் தெரியாமல் வித்தார்கள். குடிப்பவர்கள் ஏன்? தெரியாமல் குடித்தார்கள் என்று கேட்டபோது  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்தை கூறினார்கள்.

அவர்கள் சொன்னதை திரும்பக் கூறி..அசிங்கம். அவமானம்.. விறபவன் ஊறுக்கு கேடு விளைவிக்கிறான்.என்றும். குடிப்பவன் குடும்பத்துக்கு கேடு.விளைவிக்கிறான் என்று.அவர்களசொன்னதெல்லாம் சரி என்றார்.

இப்படியான ஊறுக்கும்  குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் சாராயத்தை ஊறுக்கு ஒதுக்குப்புறமாக விறபனை செய்ததை  நல்ல சாராயம் என்று   தெரு தெருவுக்கு தெரு திறந்து வைத்து பெண்களின் தாலியை அறுத்து எறிந்த... .நீங்க எல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கமும்.... சமூகத்தையே சிரழிக்கும் சாராயக் கடையை மூடச் சொல்லி போராடும் மாணவர்களையும் பாதிக்கப்பட்டப பெண்களும் போராடும்போது... மெரினாவில் போலீஸ. அடித்தது  மாதிரி...போராடியவர்களை அடித்து துவம்சம் செய்து... சாராயக்கடையை இராப் பகலா காவல் காக்கும் போலீஸ்சும்தான்   உண்மைான முதல சமூக விரோதிகள்.... என்று கூறி முடித்தார் ... சந்தேகம்  கேட்டவர்கள்  யாரும் மறு பேச்சு எதுவும் பேசவில்லை.....

என்ன நான் சொல்வது  சரிதானா..... என்று   கேட்டபோது.... தலையை மட்டும் ஆட்டினார்கள்.அவர்கள்.  இவரை அழைத்து வந்தவர் மட்டும் ஒரு கேள்வியைக் கேட்டார்..

அப்போ அந்த சாராயத்தைக் குடிப்பவர்கள்....???

குடிப்பவர்களும்... அந்த உண்மையான சமூக விரோதிகளுக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் மூன்றாமதர சமூக விரோதிகள்  என்றார்........ சரி  நான் சொல்வது தவறு என்றால்....பேசலாம்  என்ற போது...யாரும்  எதுவும் பேசவில்லை...

தமிழ் சமூகத்தின் உண்மையான சமூக விரோதிகள் இவர்களேதான் அதில் எந்த மாற்றமில்லை  என்று கூறிவிட்டு அழைத்து வந்தவரிடம் இருந்து.. விடைபெற்றார்....








5 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...