திங்கள் 20 2017

குற்றவாளியை பாதுகாக்கும் சமூக விரோதிகள்.......

தோழர்....எங்க கிளம்பிட்டிங்க  .... என்ற குரல் வந்த திசையை பார்த்த போது... அவர் நின்று கொண்டு இருந்த ரோட்டின் அருகில் வந்து நின்றது ஒரு கார். யார் என்று பார்த்தால்...தனது ஏரியாவில் அறிமுகமான தம்பி....


நான்..அந்தப் பக்கம்தான் செல்கிறேன் வாங்க..அங்கு இறக்கி விடுகிறேன்  என்றபோது....இல்லப்பா..என்னோட  பஸ்சு  சில நிமிடங்களில் வந்துவிடும்பா.... நீ கேட்டதுக்கு நன்றிபா ... நீ போயிட்டு வா...என .தன் பஸ்சுக்கான தெளிவுரையை விளக்கி..அவரை அனுப்பிய சிறிது நேரத்தில் அவருடைய பஸ்சான  அரசு போக்குவரத்து பஸ் வந்து கொண்டு இருந்தது.


அந்த நிறுத்தத்தில் ஆட்டோக்கள் வரிசையாக நின்று கொண்டு இருப்பதால்  எங்கே  நிற்காமல் சென்று விடுவாரோ என நிணைத்து.. ஆட்டோக்கள் நின்று இருந்த இடை வெளியில்  நுழைந்து சற்று நடு ரோட்டுக்கு வந்து கையை நீட்டி விட்டு  ஆட்டோவுக்கு முன்னால் சென்று கொண்டார்.. அவர்...


அவருடைய பஸ்சில்  ஏறி  பெரியார் நிலையத்தை அடைந்த போது  மணி பத்தரை ஆகியிருந்தது..  ஆர்ப்பாட்டம் நடக்க இன்னும் அரை மணி நேரம் இருந்ததாலும்... ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில்  சமூக விரோதிகள் நிறைய பேர்கள் குவிக்கப்பட்டு இருந்ததாலும்.... சற்று தூரம் சென்று ஒரு கடையில் விற்பனைக்காக தொங்க விட்டு இருந்த புத்தகங்களை  பார்த்துக் கொண்டு இருக்கையில்......

மக்கள் அதிகாரம் வாழ்க..!

குற்றவாளிக்கு அரசு மரியாதையா...!!
மெரினாவில் இருந்துகுற்றவாளியை ஜெயா சமாதியை உடனே அகற்று...!!!
குற்றவாளி ஜெயாவின் படங்களை அரசு அலுவலங்களிலிருந்து நீக்கு!!!!
குற்றவாளி ஜெயாவின் சின்னங்களை அகற்று !!!!!!!
மக்கள் அதிகாரம்..வாழ்க!!!!!!மக்கள் அதிகாரம் வாழ்க!! 

என்ற முழக்கம்
கேட்டதுதான் தாமதம்..... குற்றவாளியை பாதுகாக்கும் சமூக விரோதிகள் கூட்டம்  குற்றவாளிக்கு எதிராக  முழக்கமிட்ட போராளிகளை பாய்ந்து . பிடித்து அவர்கள் தப்பித்து செல்ல முடியாமல்  சமூக விரோதிகளுக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றி உடனே  அவ்விடத்தை விட்டுஅகன்றனர்...

சற்று தூரத்தில் புத்தகங்களை பார்த்துக் கொண்டு இருந்தவர் முழக்கம் சத்தம் கேட்டு வந்த போது..... சமூக விரோதிகளின் பஸ்  குற்றவாளியை  எதிர்த்த போராளிகளை ஏற்றிக் கொண்டு நகர்ந்துவிட்டது...பின் சமூக விரோதிகள் அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்..

ஏ1 குற்றவாளியை எதிர்த்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர். தனக்கு தெரிந்த தோழர்களின் செல்போனுக்கு  போன் செய்த போது  பிசியாக இருப்பதாக பதில் வந்தது... போன் செய்த படியே  ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தை அடைந்தார்..  சிம்மக்கல் அருகில் ஒரு மண்டபத்தை அடைத்து வைத்து இருப்பதாக தகவல் வந்தது.

உடனே பஸ் ஏறி சிம்மக்கல்லில் இறங்கி பழைய சொக்கநாதர் வழியாக வக்கில்புது தெருவை அடைந்து மேற்கு பக்கமாக திரும்பி பார்த்த போது... மண்டப வாசல் முன் மக்கள் அதிகாரம் கொடி தெரிந்தது..

வாசல் கதவு அடைக்கப்பட்டு இருந்தது...தனது வீட்டு இடப்பிரச்சினையின் காரணமாக தன் மீது அடிக்கடி பொய் புகாரால் அடிக்கடி தனது  பகுதி  சமூக விரோத நிலையத்துக்கு சென்றபோது...அங்கு அவரை விசாரித்த அறிமுகமான ஒருவர் இருந்தார்.. ..அவர் இவரைக் கண்டு என்ன இங்கே என்று கேட்டபோது... போராடிய போராளிகளுடன் சேர  வந்துள்ளேன் என்ற போது..

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்... நீ வீட்டுக்குப் போயி ரெஸ்டு எடு என்றார்.

சார், நான் போராட்டத்தில் கலந்து கைதாகவிட்டால்  என் சீட்டை கிழித்து விடுவார்கள். என்றபோது..... வயர்லெஸ் போனை காதில் வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல். அருகில் நினற்வரை கதவை திறக்கச் சொன்னார்.

சார், இனி கதவ அடைச்சுகோங்க... வெளியில வர மாட்டேன் என்று குற்றவாளியை எதிர்த்த போராளிகளுடன் போராளியாக சேர்ந்து கொண்டார்.அவர்.

குற்றவாளியை எதிர்த்த போராளியாய் மாறி போராளிகளுடன் அமர்ந்திருந்த சிறிது நேரத்தில் குற்றவாளியை பாதுகாக்கும் சமூக விரோதிகளில்உயர் பதவியில் உள்ளோர்கள்... போராளிகளை  தனித்தனியாக  வீடியோ படம் எடுத்துக் கொண்டு இருந்தனர்.. அதை எதிர்த்து போராளிகள் மண்டபம் அதிர முழக்கமிட்டனர்.....

போராளிகள் முழக்கத்தாலும் உறுதியாலும் போராளிகளை வீடியோ படம் எடுப்பதை  ஏ1 குற்றவாளியை பாதுகாக்கும்  சமூக விரோதிகள்  வீடியோ படம் எடுப்பதை. நிறுத்திக் கொண்டனர்.

வழக்கம் போலவே போராட்டத்தின் போது கைதாகும்.. குற்றவாளியை எதிர்த்த போராளிகள்.. உரை வீச்சு,.பாடல் என்று தங்கள் பணியினை தொடர்ந்தனர்...மதிய  உணவு வந்தது. உண்ட சில நேரங்கள் ஓய்வு எடுத்து.. மீண்டும் உரை வீச்சு , பாடல் என்று சென்று கொண்டு இருந்தபோது அடைத்து வைக்கப்பட்ட அனைத்து போராளிகள் அனைவரும் வெளியே செல்ல   உத்தரவிட்டனர்... குற்றவாளியை பாதுகாக்கும் சமூக விரோதிகள்....




5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...