பக்கங்கள்

Sunday, February 19, 2017

கழித்துக் கட்டவும் மனமில்லை...சரி செய்யவும் வழியில்லை...

ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொன்னுத்தி மூன்றில் சுயமாக தனியாக சொந்தமாக  அச்சு கோர்க்கும் டைப்பில் அச்சாபீஸ் தொடங்கி சில வருடங்களில்... பழைய முறைகளை கடாசி விட்டு கம்யூட்டர்  முறையிலான டெக்ஸ்டாப்பில் அச்சாபிசில் உள் நுழைந்த நாள் முதல் இன்றைய நாள்வரை என்னோடு பயனித்த எனது கம்யூட்டர் தனது பனியினை முடித்துக் கொண்டது.... இருந்தாலும் நான் அதனை தனியாக விடுவதாக இல்லை.. எனக்கு முன்னால் செல்லவும் அனுமதிக்கவில்லை... முடிந்தால் இருவரும் சேர்ந்து பனியினை முடித்துக் கொள்வோம்... அதற்கு வாய்ப்பு இல்லையென்றால்.. எனக்கு பின்னால் அதன் பனியினை முடித்துக் கொள்ளட்டும்...

கம்யூட்டர் சர்வீஸ்காரரும் அண்ணே..இது பழையமாடல்ண்ணே... அவ்வளதாண்ணே... இதை தூக்கிபோட்டுவிட்டு வேறு வாங்குகண்ணே என்று பலமுறை சொல்லியும் என்னால் என்னோடு பயனித்த கம்யூட்டரை கழித்துக் கட்டவும் மனமில்லை... அதை சரி செய்யவும் வழி ஏற்படவில்லை....

என் தாயை இழந்த போது  தவித்த தவிப்பை போன்று  என் மனநிலை உள்ளது... சரி செய்ய முடியுமா என்று தொடர்ந்து முயன்று வருகிறேன்... கம்யூட்டர் சர்வீஸ் காரர்் மனது வைப்பார் என்று  நம்புகிறேன்..... நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதைப்போல......


9 comments :

 1. உண்மைதான் நண்பரே
  நம்பிக்கைதான் வாழ்க்கை

  ReplyDelete
 2. உங்கள் கணினி போல சில பொருட்களை விட்டுப் பிரிவதென்றால் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் மாற்றங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை? https://www.sigaram.co/

  ReplyDelete
 3. உங்கள் நம்பிக்கை பொய்க்காது தோழரே :)

  ReplyDelete
 4. மிக சிறப்பான பதிவு விடாதீர்கள்

  ReplyDelete
 5. நம்பிக்கைதான் வாழ்க்கை

  ReplyDelete
 6. கம்யூட்டர் சர்வீஸ்காரர்
  மனது வைத்தால் கணினி இயங்குமே!

  ReplyDelete
 7. உங்கள் மனநிலை புரிகிறது இருந்த போதிலும் புதிய கணனியை வாங்குவதுதான் சிறந்தது காரணம் புதிய கணனியில் இன்றைய தினத்திற்கான புதிய மென்பொருள் பயன்படுத்த முடியும் அது உங்களின் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதை பயன்படுத்தாத வரை அதன் பயங்களை இழக்கதான் நேரிடும் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் புதிய கணனியை மிகவும் விரும்புவீர்கள்

  ReplyDelete
 8. நல்லதொரு அனுபவ பதிவு.
  நான் சில காலங்களுக்கு முன்பு படித்த ஒரு வெள்ளை இனத்தவரின் பேட்டி தான் எனக்கு நினைவுக்கு வந்தது. போர்ட் கார் பதிதாக வாங்கி இப்போது 24 வருடங்களாகி விட்டது, மனைவி, மற்றும் எல்லோரும் இதை தூக்கிபோட்டுவிட்டு புதிய கார் வாங்கும் படி சொல்கிறார்கள். இன்னும் ஓடுகிறது. அதை விட மனமில்லை, முடியவில்லை என்றார். ஆனால் செயலிழந்த தனது கம்யூட்டரை விட மனமில்லாத வலிப்போக்கர் அவரை மிஞ்சிய பாசக்காரன்.
  //என் தாயை இழந்த போது தவித்த தவிப்பை போன்று என் மனநிலை உள்ளது//
  ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்த தமிழகத்தில், உண்மையான தாய்,தாய்பாசம் கிடைக்க பெற்ற வலிப்போக்கரின் தவிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com