பக்கங்கள்

Tuesday, February 21, 2017

IPS எனப்படும் சமூக விரோதிகளின் சட்டதிட்டம்....

IPS என்ப்படும் இந்தியன் போலீஸ் சர்வீஸ்  பற்றிய போலீசு கதை தெரியுமா...? என்றார். அவர்.

தெரியாதே  என்று பதில் வந்தவுடன்.. இந்தியன் போலீஸ்  சர்வீஸ் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

IPS என்ப்படும் இந்தியன் போலீஸ் சர்வீஸ் என்பது. சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும்.இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு நிறுவனம்.அது கிழக்கிந்திய கம்பெனியால் அவனுக்கான  சட்டதிட்டங்களால்  இந்திய மக்களுக்கு எதிராக 1861ம் வருடம் ஆங்கிலேயர்களால் அவனுடைய சுரண்டலை பாதுகாப்பதற்க்காக வகுப்பட்ட விதிகளில்தான் இன்றளவும் இயங்கி வரும்  சமூக  விரோதிகளின் துறைதான் இந்த போலீசு துறை...

கிழக்கு கம்பெனிக்காரன் இந்தியாவை விட்டு போன பிறகும் அவன் போட்ட சட்டதிட்டங்களால் வழி நடத்தப்படுவதுதான் போலீஸ துறை என்ற  இந்தசமூக விரோத துறை.

இதனால்தான் நம் நாட்டின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடினால்  உடனே..முதல் ஆளாக வந்து நின்று லத்தி கொண்டு போராடுபவர்கள் மீது பாய்கிறது....அந்தத் துறையில் இருப்பவன் இந்தியனாக நம்மாளாக இருந்தாலும் வெறி கொண்டு பாய்வதற்கு காரணம்.. ஆங்கிலேயனால் ஏற்றப்பட்ட ரத்தமே  காரணம்......

அண்மையில் தழிழகத்தில் “தமிழண்டா” என்று சொல்லிக் கொண்டு நடந்த மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்களின் போராட்டம் கடைசி நாளில்  சமூக விரோதிகளின் லத்திகளால் பதம் பார்க்கப்பட்டது...உங்களுக்கு தெரியும்

சொந்த பந்தங்கள் போராடிக் கொண்டு இருக்கும் பொழுது ஆறு நாள் வேடிக்கை பார்த்து கூட்டத்தோடு கூட்டமாக இருந்துவிட்டு கடைசி நாளில் கண்ணில் அகப்பட்ட அனைவரையும் கடித்து குதறியதுக்கு காரணம்..அது ஆங்கிலேயனால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களால் பழக்கப்படுத்தப்பட்ட குணத்தால்தால்தான்  அந்த சமூக விரோத கூட்டம் குறி தப்பாமல் ஞாயம் அநியாயம் எதையும் பார்க்காமல்  சூ. என்ற உத்தரவு வந்தவுடன் ஆட்டோக்கள், மீன் கடைகள் என கண்ணில் பட்டதை எல்லாம் எரித்து சூறையாடியது...

IB ,CIB, CID ,IS,I FL, CAPF, CRPF, CPO, ITBP ,NSG, CISF, IFLA  இப்படியாக ஆங்கில எழுத்துக்கள் அனைத்துமே முன்னும் பின்னுமாக போட்டுக் கொண்டு அராஜகமும் அடாவடித்தனமும்  நிறைந்த சட்டபூர்வமாக  உருவாக்கப்பட்டு ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து வருவதே இதன் தலையாய பணியாகும்..

இந்த சமூக விரோதிகளால் சமூகத்திற்கு எந்தப் பலனும் கிடையாது.. இது அரசு அங்கீகாரம்  பெற்ற வன்முறை கூட்டம்..இந்தக் கூட்டத்தை தண்டிக்கவோ, திருத்தவோ முடியாது..அப்படி தண்டிக்கவோ..திருத்தேவே முடியாத.சமூகத்துக்கு எதிரான. இந்த சமூக விரோதிகளை தூக்கி எறிவதைத்தவிர ...வேறு சந்துவழி, குறுக்குவழி என்று எந்த வழியும் கிடையாது என்பதே..உண்மை.  இதற்கு ஆதாரம் ஆங்கிலேயன் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இந்த சமூக விரோதிகளால் நடந்த நடத்தப்பட்ட வரலாற்று காட்சிகளே  அதற்கு சாட்சி.... என்று அவர் சொல்லி முடித்த போது...

கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும்  எந்த எதிர் கருத்தும் கூறாமல் அமைதியாக... இருந்தனர்...

5 comments :

 1. காவல் துறை உங்கள் நண்பன் என்பது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே :)

  ReplyDelete
 2. ஆங்கிலேயனால் தான் போலீஸுக்கு வெறி ஏற்றபட்டது என்கிறார்.
  லஞ்சம் வாங்கும் குணஇயல்பு எப்படி தமிழக போலீஸுக்கு ஏற்பட்டது.
  தமிழர்க்கு ஆங்கில பாஷை மீது மோக வெறி உண்டானதிற்கு ஆங்கிலேயன் தான் காரணமா?

  ReplyDelete
  Replies
  1. அவனும் ஒருவகையில் மூலகாரணம்தான் திரு. வேகநரி அவர்களே!!

   Delete
  2. ஆங்கிலேயனும் ஒருவகையில் மூலகாரணம் என்று நீங்க சொன்னதை ஏற்று கொள்கிறேன்.
   அயோக்கியதனத்தின் மொத்த வடிவமாக தமிழக போலீஸு இருப்பதினால் தான், பகவான்ஜீ சொன்ன மாதிரி காவல் துறை உங்கள் நண்பன் என்று ஏமாற்று விளம்பரம் செய்யவேண்டிய நிலைமை உள்ளது.

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com