பக்கங்கள்

Thursday, February 23, 2017

சமூக விரோத துறையில் ஒரு தோழர்...!!!!!

முன்னதாக ஒருவர் பேசி முடித்தப்பின் அடுத்த தோழர் சிறிது இடைவெளிக்கு பின் பேச வந்தவர்... பேசினார்.

குற்றவாளி படத்தையும் சமாதியையும் அகற்றக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதான அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடங்குகிறேன் என்றார்.

இப்ப சிறிது நேரத்துக்கு முன்னாடி... போலீஸ்காரங்க  நம்மளையெல்லாம் வீடீயொ படம் எடுப்பதை முழக்கமிட்டு.. அவர்களின் அராஜகத்தை உரக்க முழக்கமிட்டு . அவர்களை  நாமும்  செல்போன் மூலமாக வீடியோ படம் எடுப்பதின் மூலமாக தடுத்துள்ளோம்....

இப்படியாக அராஜகமும் அடாவடிதனமும் வன்முறையும் நிறைந்த இந்தக் சமூக விரோத துறையின்  கூட்டத்துக்குள்  சேர்ந்து அவர்களுக்காவும் பாட்டாளிகளுக்காகவும் ஒரு தோழர் போராடினார்..  அவர்தான்  தூக்குமேடை தியாகி தோழர் பாலு அவர்கள். அவருடைய நினைவு நாள் பிப்ரவரி 22ம் தேதிஎன்பதால் அவரைப்பற்றி சிறிய தகவலை தெரிவித்து என் உரையை முடித்துக் கொள்கிறேன் என்றுவிட்டு..

தூக்கு மேடை பாலுவின் நிணைவுகளை பகிர்ந்தார் அவர்.தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து தம் இளவயதிலே போர் தொடுத்தவர் தோழர் பாலு.. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும் இருந்ததால்  ரிசர்வர் போலீசில் பணியில் சேர்ந்தார்.. தோழர் பணியில் சேர்ந்தாலும் இந்த போலீஸ்காரர்களைப் போல் மக்களை மாக்களாக மதிக்காமல் மக்களாக நிணைத்தார்.. போலீஸ- மக்கள் நல்லுறவுக்கும் பாட்டாளிகளுக்கும், போலீஸகாரர்களின் உரிமைக்கும் சளைக்காது போரிட்டார்.

ஒரு கட்டத்தில் இவர் தலைமையிலான ரிசவர் பட்டாளத்தை  தெலுங்கானாவில்  போராடிக் கொண்டு இருந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்க்காக அனுப்ப உத்திரவிட்டபோது..... எம் மக்களை ஒடுக்குவதற்கு நான் செல்ல முடியாது என்று மறுத்தார். மக்கள் சேவையைப் பிரதானமாகக் கொண்டு பாடுபட்டதால் போலீஸ வேலையிலிருந்து நீக்கிவிட்டு. ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு பிப்ரவரி 20ந்தேதி அறிவிக்கப்பட்டு  1951ம் ஆண்டு பிப்ரவரி22-ல் தூக்கிலிடப்பட்டார்.... இந்த நிகழ்வில் தூக்குமேடை தியாகி தோழர் பாலுவின் நிணைவை பகிர வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கேட்டவர்கள் அனைவரும் கைதட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்...


4 comments :

  1. தியாகி தோழர் பாலு பற்றிய சிறப்புகளை இன்னும் சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. தியாகத் தோழர் பாலு பற்றி நிறைய சொன்னார்.. எனக்கு பதிவிட்டப்பிறகுதான் தோழர் பாலுவைப்பற்றிய நிணைவுக்கு வந்தது... வேலையும் குறிக்கிட்டதால்.. சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும் தலைவரே....

      Delete
  2. அந்த கால ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் இருந்தது உண்மையா :)

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுபட்ட கட்சி எதுவுமில்லை நண்பரே... இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். இதிலிருந்து பிரிந்ததுதான் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நண்பரே....

      Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com