பக்கங்கள்

Sunday, August 06, 2017

அந்த இரகசியம் தான் என்ன...??

அந்தக் காவல்
நிலையத்தில் உள்ள
ஆண் காவலர்கள்
இரண்டு மூன்று
தடவை சிறு நீர்
கழிக்கச் சென்றார்கள்

பிடித்து வரப்பட்ட
குற்றவாளிகளில் சிலரும்
ஓரிரு தடவை
சிறுநீர் கழிக்கச்
சென்று வந்தார்கள்..

அந்தோ..அந்த
பெண் காவலர்கள்
யாரும் சிறுநீர்
கழிக்கச் செல்லவே
இல்லையே எப்படி
அவர்களால் தாக்கு
பிடிக்க முடிகிறது
அந்த இரகசியம்
தான் என்ன.......
பொய்ப் புகாரில்
குற்றவாளியாக உட்கார
வைக்கப்பட்டவனின் சந்தேகக்
கேள்வி இது...


8 comments :

 1. ஐந்து நாளாய் ஆளைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன் ,சென்று இருந்த இடம் தெரிந்தது ,ஆனால் அந்த ரகசியத்தின் காரணம் தான் தெரியவில்லை :)

  ReplyDelete
  Replies
  1. அந்த இரகசியம் ஒன்னும் சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை. அந்த ரகசியத்தை பதிவாய் சொல்லி விடுகிறேன்....

   Delete
 2. யார் அந்த குற்றவாளி நண்பரே......

  ReplyDelete
  Replies
  1. அவர் குற்றவாளி இல்லை நண்பரே...குற்றவாளியாக ஆக்கப்பட்டவர்..

   Delete
  2. இந்திய நாட்டில் குற்றவாளி இல்லாத ஒருவர் குற்றவாளியாக ஆக்கப்பட் சிறை சென்றதிற்காக வேதனைபடுகிறேன்.

   Delete
 3. ஆத்திரத்தை அடக்கினாலும், அதை அடக்கி வைக்கக் கூடாது என்பார்கள், பிற்காலத்தில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்
  பெண்காவலர்கள் மட்டுமல்ல, படிப்பு படிப்பு என்று அதிகாலையிலேயே, நம் மழலைகளை, சிறுவர்களை பள்ளிக்குச்செல்வதற்காக பேருந்தில் ,பள்ளிப் பேரூந்தில் அனுப்பி வைக்கிறார்கள் அல்லவா,இவர்கள் எல்லாம் ஒரு நாளில் எத்துனை முறை,கழிவரைற்குச் செல்வார்கள்,அல்லது அதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும் என்று யாருக்காவது தெரியுமா, அல்லது பெற்றோர்களாவது கவலைப் பட்டிருப்பார்களா,
  வேதனை வேதனை

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com