ஆதி கால மனிதர்களுக்கு தங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.உலகத்தைப் பற்றியும் தெரியாது.அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சரியமாக தோன்றியதை எல்லாம் மனிதனுக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட சக்திகளால் உண்டாக்கப்பட்டவை என்று நம்பினார்கள்.
அவர்கள் கனவுகள் காணும்போது அந்தக் கனவுகளில் தாங்களும் தங்கள் நண்பர்கள் உறவினர்கள் உயிர் பெற்று வாழ்வதை கண்டார்கள். இ்த்தைகைய கனவுகள் அவர்களுடைய கற்பனையை தூண்டிவிட்டன. அந்தக் கற்பனையைக் கொண்டு ஒவ்வொருவனுக்கும் இரட்டை வாழ்க்கை உண்டு என்று முடிவு கட்டினார்கள். ஒவ்வொருவனுக்கும் ஒரு வாழ்க்கையல்ல இரட்டை வாழ்க்கையுண்டு என்ற கருத்து அவர்களை கலங்கச் செய்தது.
எனவே தாங்கள் சிந்திக்கும் சிந்தனைகளும் அனுபவிக்கும் புலனுணர்ச்சிகளும் தங்கள் உடம்பின் நடவடிக்கையல்ல.அவையெல்லாம் ஒரு சுயம்புவான ஆன்மாவால் நடைபெறுகின்றன. அந்த ஆன்மா உடம்புக்குள்ளே குடி கொண்டிருக்கிறது சாகும்போது அந்த ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்து போய்விடுகிறது என்றெல்லாம் அவர்கள் கற்பனை செய்து கொண்டார்கள்.
அதிலிருந்து ஆன்மா அழிவற்றது என்ற கருத்து பிறந்தது. பொருளான உடம்புக்கு வெளியே அப்பால் நின்று ஆன்மா வாழ முடியும் என்ற கருத்து பிறந்தது.
இறந்த பிறகும் “ஆன்மா” என்ற ருபத்தில் மனிதன் தொடர்ந்து வாழ்வதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் அந்த ஆன்மாவானது மென்மையான ஒரு வித பொருளான கண்ணாடி போல ஒளி புகும் தன்மை பெற்ற பொருள் என்றும் கற்பித்துக் கொண்டார்கள்..
கதை அறிந்தேன் நண்பரே நன்று நன்றி.
பதிலளிநீக்குமென்மையான ஒரு வித பொருளான கண்ணாடி போல ஒளி புகும் தன்மை பெற்ற பொருளான ஆன்மா ஒன்று தான் நமது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை வழிநடத்தி கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஆனால் ஆன்மாவை இன்றும் நம்புவதுதான் வேதனை
தம =1