வியாழன் 01 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-14

                                    அவர் கேனையனா..லூசா...?


எல்லோருக்கும் தெரிந்தது. அவர் பொம்பளைகளைக் கண்டால் பயந்தவர் என்று,  தைரியத்தை வரவழைத்து சிலர் அவரிடமே கேட்டார்கள்.  நீங்கள் பொம்பளைக் கண்டால் பயப்படுவீர்களாமே என்று...?

அந்த பயத்திற்கு காரண காரியத்தை சொன்னதும் அவர்கள் பதில் கூறமுடியமல் அவரின் பயத்துக்கான காரணத்தை தெரிந்து கொண்டார்கள். மற்றவர்கள் அவரின் பயத்தை கண்டு கேலியும் கிண்டலுமாக பேசிக் கொள்ளும்போது...அவரின் பயத்துக்கான காரியத்தை தெரிந்தவர்கள் கேலியும் கிண்டலுமாக பேசுபவர்களிடம் கூறும்போது... கப்சிப்வென்று ஆகிவிடுவார்கள். அவரைக்கண்டால் அவர்களுக்கு உள்ளுர பயம் இருப்பதை வெளிக்காட்டாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.

எப்படியோட அவர் பொம்பளைக் கண்டால் பயம்படும் விசயம். தெரிந்து இரண்டு தெருவுக்கு அடுத்து ஒரு தெருவில் குடியிருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் அவரைப்பற்றி குறிப்பிட்டு ” ஏன்? இப்படி பயப்படுகிறார்” என்று கேட்டபோது..அந்தக் கணவன் அவளிடம் தனக்கு தெரிந்த எல்லா விபரத்தையும் கொட்டி பொம்பளைக்கு பயந்தவர் குடியிருக்கும் தெரு பொம்பளைகளை வாங்கு ... வாங்குன்னு வாங்கி..தன் மனைவியையும் சேர்த்து பி்டி  பிடின்னு பிடித்துவிட்டு,அந்தத் தெருக்காரிகளிடம் பேசுவதைக்
கண்டேன் என்று தன் மனைவிகை்கு தடையும் போட்டுவிட்டார்.

அவருக்கு பொம்பளையைக் கண்டா பயமுன்னு எவன் சொன்னான். எவ சொன்னாள்...வேட்டி கட்டிய பொட்டப்பயல்கள்... அவரை எதிர்க்க திராணியற்று... தெருக்காரன் பொண்டாட்டியெல்லாம் தன் பொண்டாடி என்று காசு பணத்தை கொடுத்து கள்ள உறவு  கொண்டிருக்கும் நாயி,.

.தன் வீட்டுப் பிரச்சினையை பொதுப்பிரச்சியைாக மாத்தி... அவரை எதிர்க்க துப்பில்லாமல் பொலீசுகாரன்களுக்கு பணத்தை இறச்சு..அவிங்க சொன்ன வழிமுறையில் பொம்பளைகளை அவரிடம் சண்டையிட வைத்து ..அந்தப் பொம்பளைகளே தங்கள் சட்டையை தாங்களே கிழித்துவிட்டு..பத்தி இழுத்துட்டான்  மானபங்கம் செய்துட்டான் என்று பொய் புகார் கொடுத்தால்.... எந்த ஆம்பளடி பயப்படாம இருப்பான். சொல்லுடி......போலீஸ் ஸ்டேசனில இருக்கிற போலீசெல்லாம் அவ்வளவு நேர்மையாகவா..இருக்காங்கே.....அவரு கல்யாணம் முடிக்காமல் இருப்பதை காரணமாகக் கொண்டு,  ஏன்? கல்யாணம் முடிக்காமல் இருக்க என்று கேட்டுவிட்டு அப்ப நீ... கையப் பிடுச்சு இழுத்திருப்பேன்னுன்ல சொல்றான் நாறப்பய.....

அவரு, அவுங்க அம்மாவக் கண்டு பயப்பட்டாறா...? அவரு அக்காவு கண்டு பயப்பட்டாரா.... அவரு..அக்கா பிள்ளகள கண்டு பயப்பட்டாரா? சொல்லுடி..?.இல்ல உன்னையோ...மற்ற பொம்பளைக்கண்டு பயப்பட்டாரா? சொல்லு..?.....கல்யாணம் முடிக்காததையே காரணமாகக் கொண்டு அவருடைய சித்தப்பன் மகன்கள்.அவரை .பொட்ட, ஒம்போது.ன்னு தினமும் தண்ணிய போட்டுட்டு திட்டுறது தெரியுமா..?   நம்ம கூட்டமாக இருந்திருந்தாத.... வெட்டு, குத்து, கொலையே நடந்திருக்கும்.... பாவம் ஆள்பலமும், பணமும் இல்லாததால்..இப்படியெல்லாம் வசவு பெயர்களை எல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்... அப்படி ஆள்பேரு இல்லையென்னாலும் தைரியமாக  ஒத்தை ஆளா  அந்த தெரு பொட்டப் பசங்கள எதித்து  நிக்கிறாறே.. அவரா பொட்ட....ஒம்போது.......

அந்த தெருவின் மானங்கெட்ட சிரிக்கிக... அந்த தெருவின்  பூசாரி கொடுக்கிற காசுக்கும், அவன் வாங்கி கொடுக்கிற சேலை துணிமணிக்கும் ஆசைப்பட்டு, பூசாரியின் தூண்டுதலில் அவரோடு சண்டையிடுவதும், கூட்டத்தோடு கூட்டமாக சண்டையிடும் சாக்கில் அவருடைய விதைக் கொட்டையை பிடிச்சு கசக்கி பணியவைக்கிறாளுடி...

ஒரு மானம் மரியாதைக்காத்தாண்டி அவரு குடியிருக்கும்..அந்தத் தெரு பொம்பளைக்கண்டு  பயப்படுகிறாறே தவிர.... வேட்டி கட்டிய , கூட்டிக் கொடுக்கிற அந்தத தெரு பொட்டப்பயல்க  மாதிரி இல்லடி அவரு...... .

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.... நீ மொதல்ல அந்தத் தெரு பொம்பைளைக்கிட்ட பேசுவதை குற....இல்ல பேசுவே வேண்டாம்.... என்ன நமக்கு அவள்களா..படி அளக்குறால்க.... மகளிர்.குழுவு.அது..இதுன்னு தெருகாரிகள்கிட்ட போகத..... நரம்பில்லா நாக்குல உன்னையும் எட்டு கட்டி பேசுவாள்க ....கவனமாக இருந்துக்க.....

அந்தத் தெருவ விட்டு வெளியில வாய்யான்னு சொன்னா...ஆரம்பித்தில வந்திருக்கனும்.... அந்தத் தெருக்காரர்களோடு சண்டையிட்டு முக்கால் கிணற்றை தண்டி விட்டேன்...அப்படி வெளியே வந்தாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து இடமோ..ஒரு வீட்டையோ வாங்கும் நிலமையில் இல்லை என்கிறார்.

 .அந்த தெரு பொம்பளைகளைக் கண்டு பயப்படுவதற்கு முதல் காரணமே அவருடைய சித்தப்பன் பொண்டாட்டிதான் காரணம்... தெரியுமா உனக்கு...?.

ஆத்தா சொல்லுச்சு..அம்மா கேட்டுச்சு..ன்னு  தன்னுடைய ஆசா பாசத்தெல்லாம் மூட்ட கட்டிவச்சுட்டு ..அக்காவையும் அக்கா பிள்ளைகளையும் வளத்து ஆளாக்கிய அவரை... கேன..கிறுக்கன்,லூசுன்னு   சொல்வதா...? தியாகின்னு சொல்வதான்னு..எனக்கு தெரியலடி.....

நமக்கு ஒரு இம்சைன்னா.....அந்தாளுக்கு வேறு மாதிரியான இம்சைகள்.....




2 கருத்துகள்:

  1. திருமணம் செய்யாமல் இருப்பது இப்படி வசவுகளையும் கொண்டு வருகிறதே... ச்சே என்ன சமூகம் ???

    பதிலளிநீக்கு
  2. ஏய்ச்சுப்பிழைக்கும் கூட்டம் இருக்கும் வரை இப்படியான அப்பாவிகள் நிலை மிகவும் கொடியது!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...