பக்கங்கள்

Thursday, April 26, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-19

 என்னாச்சு..... உனக்கு
என்றைக்கும் இல்லாத
பழக்கமாக இன்றைக்கு
என் அருகில்
தனியாக உட்கார்ந்து..
இருக்கிறாய்...எதை..
எதையோ..போட்டு
குழம்பிக் கொண்டு
 இருக்கிறாய்.....அடிக்கிற
வெயில் உன்னை
குழப்பி விட்டதோ...!!!
.உப்பை திண்ணாமல்
இருந்தாலும் கண்டிப்பாக
தண்ணி குடித்தே..
ஆக வேண்டும்.......

உடனே தண்ணீர்
தாருங்கள் ...என்று
கேட்டுவிடாதே...

இங்கு அடிக்கிற
வெயில் உங்க
வீட்டு வெயிலும்
எங்க வீட்டு
வெயிலும் இல்லை
இந்த வெயில்
 உலக முதலாளிகள்
உருவாக்கிய வெயில்

புரியலையா..உனக்கு
என்றைக்கு புரிந்தது
உன்னைப் போல்
நானும் ஒரு
நாள்  அல்ல
பல நாள்
போராடி தண்ணீர்
கிடைக்காமல் சாவேன்

எப்படி சாவேன்
என்றா கேட்கிறாய்
ரெம்ப குசும்புதான்
உனக்கு  இப்போது
நிழல் தரும்
இலைகள் உதிர்ந்து
பட்டை மரமாக..
காட்சி அளிப்பேன்
அப்போது ...நீ
இருந்தால் குழம்பாமல்
புரிந்து கொள்...3 comments :

.........