பக்கங்கள்

Friday, July 20, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-48


Image result for ஆட்டக்காரிவண்டியை மறித்து
ஒரங்கட்டுமாறு சைகை
செய்தார் மாப்பிள்ளையான
 உறவு  முறைக்காரர்

ஒருங்கட்டிய பின்
காதருகில் வந்து
 மாமா..என்
அம்மா மட்டை
யாகினார் மாமா
என்றார் அவர்

உடனே வண்டியை
திருப்பி குரு
தியேட்டர்க்கு வந்து
ஒரு பெரிய மாலை
வாங்கி கொண்டு
மூன்றாவது ஆளாக
என் அஞ்சலியை
செலுத்தி விட்டு
திரும்பி வந்தேன்

தூக்குவதற்கு ஒரு
மணி நேரத்துக்கு
முன் அவ்விடம்
வந்தபோது இன்னொரு
மாப்பிள்ளைகாரன் போதையில்
என்னிடம் கிசு கிசுத்தார்.

மாப்பிள்ள வேல
இருக்குன்னு போகத..
சேர்ல உட்காரு
ஆட்டத்த பாரு
ஆடுதுகள  அதுக
ரெண்டும் ஒரிசினல்
பொம்பளக...வெட்கப்பட்டு
ஓடிறத மாப்பிள்ள.....

எய்...அம்மா
மாப்பள முன்ன
நல்லா ஆடுகம்மா
என்று மாப்பிள்ளகாரர்
 சொன்னதுதான் தாமதம்
ரெண்டு ஆட்டக்கார
அலுமேலுகளும் ஆட்டத்த
கொழுத்திப் பிட்டதுக....

மாப்பிள்ளகாரர் சாராய
வாடையுடன் என்
அருகில் குனிந்தவர்
சட்டென்று எனது
சட்டைப் பையில்
இருந்த இரண்டு
ஐம்பது ரூபாயை
எடுத்து இரண்டு
ஆட்டக்கார அலுமேலுகளுக்கு
கொடுத்து விட்டு
என் பெயரைச்
முரசு அறிவித்தார்

கொட்டும் டம்டமன“னு
அடித்து வாழ்த்து
தெரிவித்தன....அடடா
பெட்ரோல் போட
வைத்திருந்த காசு
ஆட்டத்தை கண்டதுக்கு.....
.....................................
..............................
..........................................


3 comments :

  1. கட்டணம் வாங்கிக்கொண்ட காட்சி/

    ReplyDelete
  2. வண்டியை உருட்டிக்கிட்டுதான் வீட்டுக்கு போகணுமோ...

    ReplyDelete
  3. சாராய வாடைதானே எட்டுத்திக்கும் வீசுது?

    ReplyDelete

.........