ஒரு நல விரும்பியின் விசாரிப்பு
கடைக்கு சென்று கெண்டுருந்தவரை அவரின் தந்தையின் உடன் பிறந்த தம்பியின் நண்பர் ஒருவர். “ ஏய் ..கேன..... இங்க வாடா.. என்றார்
அருகில் வந்தவர் “ என்ன விசயம் என்றார்..... நேத்து உன் வீட்டிலிருந்து சத்தம் போட்டு கத்திகிட்டு இருந்தேயே.... எதுக்குடா.”.... என்றார்.
உங்களுக்கு எப்படி தெரியும் என்ற போது... உடம்புக்கு முடியாம இருக்கிற உன் சித்தப்பனை பார்க்க வந்தேன்டா... என்று அவர் சொன்னதுதான் தாமதம். இவர் குதித்துவிட்டார். “ எவன் எனக்கு சித்தப்பன்.., அவனா எனக்கு சித்தப்பன்.. அவனைப் போயி எனக்கு சித்தப்பன்னு சொல்லுறிங்க.... அந்தாளுவைப் போய் என் சித்தப்பன்னு சொல்றீங்க......
டேய்...டேய்... தெரியாம சொல்லிட்டேன்டா... என் நண்பன பாக்க வந்தேன்டா...
ம்ம்ம்.... அப்படிச் சொல்லுங்க..... அந்தாள என் சித்தப்பன்னு சொல்லாதிங்கன்னு எத்தனை தடவ உங்ககிட்ட சொல்லியிருக்கேன்... திரும்ப..திரும்ப.. அந்தாள போயி என் சித்தப்பன்னு சொல்றிங்க...
மறந்திட்டேன்டா..... சரி.. நான் கேட்டதுக்கு பதில சொல்லுடா..ஏன்டா கத்திகிட்டு இருந்த....
அதா...இந்தக் கேனயனுக்கு லூசு புடுச்சிருச்சு... லூசு புடுச்சா.. என்ன செய்வாங்கே... கத்ததானே செய்வாங்கே..... அதான் கத்திக்கிட்டு இருந்தேன்..
நீ... கத்துனது...லூசுப் பய கத்தினது மாதிரி இல்லேயடா....
நான் கத்தினது எதுக்குன்னு தெரிஞ்சு.... ஒங்க நண்பனுகிட்ட சொல்வா....
போடா...லூசு.... அவனே.. வாய பொளந்துகிட்டு.... இப்பவோ..அப்பவோ கிடக்கான்....அவகிட்ட போயி நானு சொல்வதாவது....
நான் கத்தின பத்தி அந்தாளுகிட்ட சும்மா சொல்லுங்க.... உடனே படுக்கைய விட்டு எழுந்திருச்சுவாப்ல....
“நிஜமாவடா....”
“ பிறவு பொய்யா சொல்றேன்....
“ இல்லேடா...நீ கத்திக்கிட்டு இருந்தத... அவன் பொண்டாட்டி.. உன் வீட்டு சுவத்தல சாய்ந்து கேட்டுகிட்டு இருந்தால்ல.......
ஒட்டு கேட்டு இருக்குது..... இனி என்ன ஆஸ்பத்திரிக்கு போயி செலவு பன்னாம நாள பின்னக்கி அந்தாளு.... அதான் உங்க நண்பரு.... இந்த இடத்தில குந்திருப்பாரு பாருங்க......
ஏன்டா..அப்படி..???
“ஏன்டா...அப்படின்னா...... நான் எப்ப சாவேன்...என் வீட்ட அபகரிக்கலாம்முன்னு கண்ணுல வௌக்கெண்ணைய விட்டுகிட்டு இருக்கிறவிங்களுக்கு.... நா..ன் சத்தம் போட்டது...அவிங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா...???
“ ஆமா..அவிங்க சந்தோசத்துல கொள்ளிக்கட்டை வைக்க...” சரி..நான் சொல்றத எதித்து பேசாம.. கேளு..... அந்தத் தெருவுல நீ ஒத்த ஆளு...தெருவே உனக்கு எதிராக இருக்குது.... இந்தா... தெருவ மறச்சு கோயில கட்டிபுட்டான். இன்னிக்குத்தான் பாக்குறேன். உன் வண்டிய நிறுத்துவதற்கு இடைஞ்சல் பன்னிட்டான். உன் வீட்டாரோடும்... தெருவுக்காரன்களோடும் சண்டை போட்டு அவதிப்பட்டுகிட்டு கிடக்காதே... செத்த பிறகு எவன் இடத்த கொண்டு போகப்போறான். சொல்லு... இருக்கிற வரைக்கும் நிம்மதியா இருந்து போவம்ப்பா........என்னைக்குமே நீ கத்தின நான் கேட்டதில்ல.. அதனால சொல்றேன்...
இடைமறித்து அந்த நிம்மதிக்குதான் அய்யா.... சத்தமிட்டேன்..என்ற போது தனக்கு வேண்டாத ஒருவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து வணக்கம் சொல்லி நலம் விசாரித்தவுடன்... தன் பேச்சை நிறுத்தி...அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அருகில் உள்ள கடைக்குச் செல்லும் வேலையை தொடர்ந்தார் .......... ..
விசாரிப்பு நல்லாத்தான் இருக்கு.
பதிலளிநீக்குஇடையில் நந்தி புகுந்து விட்டதால்முழுசா பேச முடியவில்லை....நண்பரே...
நீக்குஇருக்கும் வரை நிம்மதியாக இருக்க முயல்வோம்
பதிலளிநீக்குஇருக்கும்வரை நிம்மதியாக இருப்பது மிகவும் கஷ்டம்தான் நண்பரே....
நீக்கு