பக்கங்கள்

Monday, February 11, 2019

நினைவலைகள்-61.

உலக கம்யூன்ஸ்டுகளை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திய தோழர் லெபா ராடிக்காவின் வாசகம்.....

தோழர் லெபா ராடிக்.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற வீரம் நிறைந்த  யுகோஸ்லோவாகிய இளம் பெண் தோழர்.

17 வயதே ஆன இளம் பெண் தோழரான அவரை 1943ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ந்தேதி நாஜிப்படையினர் தூக்கலிட்டு கொன்றனர்.

அவரை தூக்கிலிடுவதற்கு முன்பு நாஜிப்படை அதிகாரி ஒருவன் தோழர் லெபா ராடிக்கு ஒரு சலுகையை அறிவித்தான். அந்தச் சலுகை என்னவென்றால்.. அவரது சக போராளிகளைப் பற்றிய தகவல்களைச் சொன்னால் மரணதண்டனையை தவிர்த்துவிடுவதாக உயிர் ஆசையை காட்டினான்.

ஆனால் அவரோ உலகெங்கும் உள்ள எல்லா உண்மை கம்யூனிஸ்டுகளைப்போலவே வீரத்துடன் அந்த உயிர் சலுகையை மறுத்தார். எக்காரணத்தைக் கொண்டும் தனது சக தோழர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக மறுத்து நின்றார்

அவர் கூறிய வாசகம் உலக கம்யூன்ஸ்டுகளை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தும் ஒன்றாகும் .

“எனது மரணத்திற்கு
நீதி கேட்டு
எனது தோழர்கள்
வருவார்கள்.. ......
அப்போது அவர்களே
தங்கள் பெயர்களை
உங்களுக்கு சொல்வார்கள்.”

இத்தகைய மகத்தான வீரத்தை வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்தார் தோழர்
மரணத்தை கண்டு பதறாமல் பயப்படாமல் அதை எதிர்கொண்ட தோழர் லெபாவின் வீரம் கம்யூன்ஸ்டுகளின் பொதுவான குணாம்சமாகும்


#Red_Salute_Comrade_Lepa_Radic
இணைப்புகளின் பகுதி

6 comments :

 1. மயிர்கால்கள் கூச்சரிந்தன...
  வலி
  தொடருங்கள் தோழர்

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி! தோழர்..

   Delete
 2. நண்பரின் கருத்தை வழி மொழிகின்றேன்

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிந்தமைக்கு நன்றி! நண்பரே!!

   Delete
 3. கூச்செரியும் பகிர்வு/

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு நன்றி! நண்பரே..!!

   Delete

.........