செவ்வாய் 30 2019

அதிகாலை கனவு-11.

உள்ளது உள்ளபடி............













ஸ்ஸ்கூட்டியில் நார்மலாக போனேன்... நடுத்தர வயதுடையவர் கை நீட்டி வழி மறித்தார். யாரென்று தெரியவில்லை. தெரிந்தவராக இருக்கும் என்ற நிணப்பில் வண்டியை நிறுத்தி என்ன விசயம் என்றேன்.

எங்கே போகிறாய் என்றார்
நீங்கள் எங்கே போக வேண்டும் என்றேன்.
இடத்தை சொன்னார். நான் சொல்லும் இடத்தை கடந்துதான் செல்லவேண்டும். அதை மறைத்து உங்களை ஏற்றிக் கொண்டு என்னால் வண்டி ஓட்டமுடியாதே என்றேன்.

பரவாயில்லை..நான் ஓட்டுகிறேன். என்றார். உங்களிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா..? என்றேன். இருக்கிறது. தற்போது கைவசம் இல்லை. நான் ஓட்டுவதால் என்னிடம் யாரும் கேட்க மாட்டார்கள் என்றார்..

சரி உட்காருங்கள் நான் ஓட்டுகிறேன்...என்றபோது..ஓட்ட தெரியாதுன்னு சொன்ன...என்றார்

சும்மா சொன்னேன்..உட்காருங்கள் என்றேன். முதுகில் லேசாக தட்டினார். பொய் சொல்வதற்கு அளவில்ல என்பது போல்....

என் முதுகில் கையை வைத்துக் கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது... பள்ளம் மேடுகளில் செல்லும்போது திடிர் பிரேக்கால் அவருடைய மார்பகம் என் முதுகில் முட்டியது.. தப்பாக நிணைத்துவிடுவார்களோ என்று சுமரான வேகத்தில் சென்றாலும்  அவரது மார்பகம் முதுகில் மோதியது...
கூச்சமாக இருந்தது..ரெம்ப கவனமாக அவர் சொன்ன இடத்திற்கு முன்னால் வண்டியை நிறுத்தினேன். என்னை ஒரு அமுக்கு அமிக்கி இறங்கியவர் தன் மேலாடைக்குள் இருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

எதுக்கு என்றேன்.. வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்க..என்றார்.  வண்டியில் பெட்ரோல் இருக்கு , வேண்டாமென மறுத்தேன்...அடிக்காத குறையாக என் சட்டை பைக்குள் திணித்தார். அவரிடம் விடைபெற்று நான் செல்லும் இடத்திற்கு சென்று கொண்டு இருக்கும்போது... யாராக இருக்கும என்று நிணத்துப் பார்த்தேன் நிணைவுக்கு வரவேயில்லை...

அவரது முகமும்  வண்டியில் போகும்போது ஏற்ப்பட்ட நிலையும் மறையவேயில்லை....மறக்கவேயில்லை...ஏகப்பட்ட கனவுகள் வந்தும் போயியும் இருக்கின்றன... இந்தக் கனவும் மட்டும் போகவே மாட்டேன்கிறது..
இந்த வயதில் இந்தக் கனவு எனக்கு தேவையா..?? அது யாரென்றும் தெரியவில்லை....

என் தொழிலகத்தில் இரண்டு பேர் அடுத்த இடத்தில் அதிகம் சம்பளம் கிடைக்கிறது என்று சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.. ஏகப்பட்ட பிரச்சனைகளில் தவிக்கும் எனக்கு இந்த கனவு முகம் மறைய மாட்டேன்கிறது......அடுத்தக் கனவும் வரவில்லை...இந்தத் தொல்லையால். எனது கடவுச் சொல்லும்  தமிமணம் கடவுச் சொல்லும் மறந்ததினால் இந்தப் பக்கம் வரவே முடியவில்லை.........

6 கருத்துகள்:

  1. இந்தக்கூத்தில் கடவுச்சொல் மறந்து விட்டதா ? அடக்கடவுளே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்கூத்தில் கடவுள் சொல் மறந்தது. இல்லாத அந்தக் கடவுள் எப்படி???

      நீக்கு
  2. ஆகா கடவுச் சொல்லே மறந்துவிட்டதா

    பதிலளிநீக்கு
  3. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் கொஞ்சம் குழப்பும்தானே,,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு இப்படியா!!...இனி பாருங்க!..நிக்காமா..போனா அதுக்கு வரும் வசவு இருக்கே...!!!அய்யோ..??

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...