புதன் 10 2019

அதிகாலை கனவு-7.

 à®•à®¾à®°à¯à®Ÿà¯à®Ÿà¯à®©à¯ க்கான பட முடிவு



வழக்கம் போல் தூங்குவதற்கு மணி 12 ஆகியது... பகலில் தூங்காமல் வேல
செய்வதால் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது. வழக்கம் போல கனவு காலை அஆறு மணிக்கு விழிக்க வைக்கிறது.

மாநகராட்சிகாரர்கள் என்னவோ தினசரி தண்ணீர் திறந்து  விடுவதாகவும்,சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறந்து விட்டால் மே மாதம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவிடும்  பிறகு நாலு நாளைக்கு ஒரு நாள்தான் தண்ணிர் திறக்கப்படும்  விடப்படும் என்று தினகரன் பத்திரிகையில் பெரிய எழுத்தில் போடப்பட்டு இருந்தது.  தினகரன் அலுவலகத்துக்கு வேனா தினசரி தண்ணீர் திறந்து விடுகிறான் போல.... 

என்றைக்கு நாலு நாள் ஒரு தடவை தண்ணீர் திறந்துவிட்டார்களோ அதிலிருந்து இன்றுவரை நாலு நாளைக்கு ஒரு தடவைதான் தண்ணீர் வருகிறது.. அதை படித்து பொருமியதால் என்னவோ இந்தக் கனவு...

பத்து வருடங்களுக்கு முன்.. வைகையில் குளிப்பதுதான் எமது பழக்கம். எழுந்தவுடன் முகத்தை கட்டியிறுக்கும் கைலியால் துடைத்துவிட்டுக் கொண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவெகமாக மிதித்து செல்வது 

இப்போ வைகை வறண்டு போனதினால். என் பார்வை அந்தப்பக்கம் போகவில்லை.. கனவில் போவதைத்தவிர....

வைகையைச் சுற்றி அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் யாரும் ஆற்றுக்குள் யாரும் போக முடியாதவாறு  இரண்டு ஆள் உயரத்துக்கு வேலி கட்டிவிட்டார்கள். வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஓடும் தண்ணீர் அதிசியம் பார்க்கின் கழிவு நீரோ....சோழவந்தான், மேலக்கால் மற்றும் அதன்வழி ஊர்களின் சாக்கடை தண்ணீரோ ஒரு பொட்டு கூட கலக்காமல் சுத்தமாக பன்னீர் போல் ஆரப்பாரித்து ஓடுகிறது.

எப்போதும் போலவே கூட்டம் இல்லாமல் இருக்கும் இடத்தை தேடிச் சென்று ஒரு இடத்தை பார்த்தபோது  காவல்காரர்கள் செல்லும் வழி பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது.. அதன் அருகில் வேலி உயரத்துக்கு பலகையால் ஆன ஏணி இருந்தது.

அதைப்பார்த்து யோசணையில் இருந்த போது எனக்கு அறிமுகமானவர் ஒருவர் வந்தார். என்னிடம் ஏதோ சொன்னார். என்னவென்று கண்விழித்து யொசித்தபோது தெரியவில்லை. வந்தவர். அணிந்திருந்த துணிமணிகளை கழிட்டிவிட்டு விறுவிறுவென்று பலகை ஏணியில் ஏறி வேலியின் இரும்புக் கம்பியில் நின்று  பெருக் கெடுத்து ஓடிய ஆற்றில் தலை கீழாக டைவ் அடித்தார்.. சிறிது நேரத்தில் தலையை நீட்டி நீச்சலடித்து வேலியை  பிடித்து மேலேறி பின் ஏணி வழியாக இறங்கினார்.

எனக்கும் தைரியம் வந்தது. நானும் அவரைப்போல ஏணியில் ஏறி  டைவ் அடித்து  வைகை வெள்ளத்தில் குதித்தேன். டைவ் அடித்த நிலையிலே தண்ணரில் முழ்கியபடி போய் கொண்டே இருந்தேன்.... ஒரு கட்டத்தில் திரும்பி மேலே வந்து கொண்டே இருக்கிறேன். தண்ணீரிக்கு மேல.. என்னால் தலையை நிட்டமுடியவில்லை. கையையும் காலையும் அசைத்தபடியே மேலே வந்து கொண்டிருக்கிறேன்.. முச்சு விடுவதைப்பற்றி நினைக்காத எனக்கு திடிரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறது... கையையும் காலையும் வேகவேகமாஆட்டி தண்ணீருக்கு மேல வர முயற்சிக்கிறேன். மூச்சு திணறல் அதிகமாகிறது. திடிரென்று  உறக்கத்திலிருந்து விழிக்கிறேன்.

விழித்தவுடன் மூச்சு நார்மலா இருப்பது தெரிந்ததும் பதட்டம் குறைந்தது.  லேசாக விடிந்துவிட்டது......எனக்குள் முன்னால் மொதல்ல குளிச்சவன் யாருன்னு யோசிக்கிறேன்..இப்ப வரைக்கும் அந்த முகம் வரவேயில்லை........

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...