வியாழன் 18 2019

அதிகாலை கனவு-9.


தேர்தல் 2019 க்கான பட முடிவு




சற்று முன்புதான் கம்பூ யூட்டர் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை கனவில் கண்டதை எழுதி வைத்த குறிப்பையும் காணவில்லை.

சரி, போனால் போகட்டும் கனவுக்கா பஞ்சம் என்ற கதையாக நேற்று கண்ட  கனவு  ஏதேச்சையாக வந்து நின்றது......

வென்றால் ஜனநாயகம் வென்றது என்ற கூப்பாடு.. தோற்றால் பணநாயகம் வென்றது என்ற ஒப்பாரி இதுதானே காலம்காலமாக நடந்து வருகிறது..


“அடியே..மாப்ள்ள...தேர்தல் பாதை. திருடர் பாதைதான் ஒத்துக்கிறேன். அதுக்காக.. நீ இப்பவும் ஓட்டு போடலைன்னா... அதாவது உன் பாசையிலே சொல்கிறேன்......... அன்னிக்கு ஒருநாள்.அவன் கேட்டான்ல... ஒங்கப்பன் பன்னயடிமை..ஒங்கொம்மா வீட்டு வேலைகாரி..நீ எப்படிடா  இந்த வேலைக்கு வந்தேன்னு...  அதுமாதிரி..

பாஜாகாரன் இந்த தடவ ஜெயிச்சான்னு வைய்யி... அவுக..அவுக ஆத்தா..அப்பன் செய்த வேலையைச் செய்ய வைப்பாண்டி மாப்பிள்ள...நீ மாடுதான் மேய்க்கனும்டி.....

ஒங்கம்மா..அப்பவே..எங்கம்மாகிட்ட சொல்லுச்சு இவன நாலு எழுத்து படிக்க வைக்கிறதுக்கு பதிலாக பன்னைக்கு வச்சு மாடு மேய்க்க வச்சிருக்கனும்னு


பாஜாகாரன் ஜெயிச்சா  மோடி டீவிக்கவும் பக்கோடா விக்கவும் போவாங்களான்னு இப்படி எடக்கு மொடக்கு கேள்வி என்னிடம் கேட்கலாம் மாப்பிள்ள அவிங்கிட்ட இப்படியெல்லாம் கேட்க  முடியாதிடி.... ஆமா...



முடிச்சவிக்கி- மொள்ளமாறி-முடிச்சவிக்கி...மொள்ளமாறி.... இவிங்கதானே மாறி மாறி ஆளுறாங்கே..! ன் னு நீயே  கேட்டுக்கிட்டு இரு மாப்பிள்ள... எனக்கு கேட்டு கேட்டு காது சேவிடாப்போச்சு....

ஒங்க தெருவுல.. நீ ஒருத்தன்தான் ஓட்டு போடாதவன்... நி்ஜமாகவா...என்று என்னைக் கேட்காத....தேர்தல் ஏஜென்டா.. ஓட்டு பூத்ல இருக்கிற உன் பரம்பர வைரி ஒருத்தன் “ சார் அவன் ஓட்டே போடமாட்டான் சார்”என்று சொல்றான்டா  

அவனுக்கு ஆப்பு வைக்கிறதுக்காவாது ..நீ கண்டிப்பா ஓட்டு போடனும்டா மாப்பிள்ள.... ஓங்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல... இன்னிக்கு ஓட்டு போடுறத  மறந்திட்டேன்டா.....போடா...ஒன்னால..  வாய்யிலே  நல்லாவுல...வருது.. விடுடா....  நா....போறேன்.............


4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...