ஞாயிறு 05 2019

அதிகாலை கனவு-14


விபத்து க்கான பட முடிவு

 காலையில் எழுந்தவுடன் குறளை படித்தவுடன்  எதற்கு அம்மா அடித்தார்கள் என்று யோசித்த போது இதுதான் இருக்கும் என்று அனுமாதித்தேன். குறளில் ஒரு வார்த்தை வரும்... பிரிதொரு சந்தர்ப்பத்தில் மிளாகாயை தேடியபோது..என் அம்மாவிடமும்.அம்மாவின் தோழியிடமும் ..

“யம்மா நீ வச்ச இடத்துல முலய காணம்மா என்று சொல்லி ரெண்டு அம்மாக்களிடம் திட்டு வாங்கியது நிணைவுக்கு  வந்தது...திக்கு வாயில்லை இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இப்படியாக வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. இந்த நிலமை கனவிலும் தொடர்கிறது. நான் என்ன ஜெனம்மமடா நோகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது...

அடுத்தக் இரவு வருவரைக்கும் இதுதான் மண்டையில் உலகம் சுற்றுவத மாதிரி சுற்றிக் கொண்டே இருக்கும். அன்றைய செய்தி பேப்பரில் படித்த செய்தி படுத்தவுடன் முதலில் வந்தது. இரண்டு இரு சக்கர வாகணங்கள் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலி என்ற செய்தி..எப்படி மோதியிருப்பார்கள் என்ற நிணைப்புடன்....படுத்ததால் அவை பற்றியே வந்து...


நான்  இரு சக்கார வண்டியில் சென்றால் அதிக பட்சம் 40கிபசக்லோ வேகத்துக்கு மேல் செல்ல மாட்டேன் எப்போதும் இது என் பழக்கம். ஆனால் 40 தாண்டி 45.50 60க்கு மேல் என் வண்டி என்னையறிமால் வேகமாக செல்கிறது. ஓட்டுவது நான்தானா என்று சந்தேகம் கைகளை கிள்ளி பார்த்துக் கொள்கிறென்.. கண்கள் திறந்திருக்கிறதா..மூடியிருக்கிறதா என்று தெரியவில்லை..செல்லும் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் உள்ளதால் எதிரே வண்டி வராது என்ற தைரியத்தில் வேகத்தை குறைக்காமல் செல்கிறேன்.. பகலா இரவான்னு அறியமுடிவில்லை.

திடிரென்று தூக்கி வீசப்பட்டு நடு ரோட்டில் கிடக்கிறேன். அய்யோ அம்மா என்று புலம்புகிறேன்.. போகும் வரும் பஸ் கார் லாரி என் உடல் மீது ஏறி இறங்கி செல்கிறது. மூச்சு விடுவது மட்டும் தெரிகிறது. யாரோ அலறல் சத்தம் கேட்கிறது. என் தாயாரின் குரலைப்போல் கேட்கிறது.பொசுக்கென்று முழித்துவிட்டேன். இந்தக் கனவு எனக்கு பயங்கரமாகத்தான் இருந்தது. எனக்கு முன்னெச்சரிக்கையாகவே...

அன்று முழுவதும் வெளியே செல்லும்போது கவனமாகவே சென்றேன். இரவ ஏழு மணிக்கு மேல் பரவையில் உள்ள கிளினிக்குசெய்து முடித்த வேலையை சேர்க்கபிக்க சென்றபோதும் 35. 40யை தாண்டாமல்தான் சென்றேன். பரவை பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த வேன் பயங்கர வேகத்தில் வந்தது.. என்னைக் கடந்த அடுத்த நொடியில் என் வண்டி கிழே சாய்ந்து  நடுரோட்டில் கிடந்தேன்.. நல்லவேளையாக எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகண நண்பர்கள் சற்றும் தாமதிக்காமல் என்னை சாலையின் ஓரத்துக்கு துக்கிச் சென்றனர்.. சிறிது நேரத்தில்  அதிர்ச்சியில் மீண்டு எனக்கு உதவி செய்த நண்பர்களின் கேள்விகளுக்கு பதில்...எப்படி என்று தெரியவில்லை வேகமாக சென்ற வண்டிக்கு பின் கீழே விழுந்துவிட்டேன். ஒரு நண்பர் பாலத்துக்கு பக்கம் சென்று ஓஸ் பைப்பை எட்டி உதைத்து ஓரத்துக்கு தள்ளிவிட்டார். முழங்காலிலும் இரண்டு கைவிரல்கள்  மீதும் வலது கண் ஓரத்திலும் காயம் ஏற்பட்டது. காப்பாற்றிய நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பழுதடைந்த அந்த வண்டியில் மெதுவாக கவனமாக உடன் வந்த நண்பரின் உதவிக்கு நன்றி சொல்லி கிளனிக்கில் அவர்களின் வேலையை கொடுத்து நடந்த சம்பவத்தை சொல்லி காயங்களுக்கு மருந்திட்டு ஊசியை பொட்டுவிட்டு நிதனமாக வீடு வந்து சேர்ந்து கைகால் அலம்பி விட்டு யாரிடம் எதுவும் சொல்லாமல் படுத்துவிட்டேன்


எப்படி விழுந்தேன் என்பதை அடுத்து பதிவில் எழுதுகிறேன்


2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...