ஞாயிறு 12 2019

அதிகாலை கனவு-15.

சிங்கத்திடமிருந்து தப்பித்து புலியிடம் மாட்டிய கதை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை க்கான பட முடிவு


நான் படுத்திருப்பது வீடா.. வேறு இடமா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை... மயக்க நிலையில் இருந்தேன்.... வலது காது அவுட் என்பது உர்ஜிதமானது... எந்த சத்தமும் கேட்கவில்லை... இடது காது  பற்றி ஒன்றும் தெரியவில்லை... நான் மூச்சு விடும் சத்தம் மட்டும் எனக்கு தெரிகிறது.. வேறு ஒன்றும் தெரியவில்லை.. எந்த சிந்தனை இல்லாமல்  மயக்கமாகி இருந்தேன்.


நீண்ட நேரத்திற்குப் பின் சுய நிணைவு வந்து கண் விழித்தபோதுதான் தெரிந்தது. நான்  ஜீ எச்சில் இருப்பது... விபத்தில் கைகால் முட்டி கன்னம் முதலிய இடங்களில் அடி பட்டபோதும்... உள்ளுக்குள் பலமாக அடிபட்டு இருப்பது வந்து நான்கு நாளுக்கு பிறகுதான் எனக்கே தெரிந்தது. 


என்னென்னமோ கதை சொன்னார்கள்....பாதி காதில் விழுந்தும் மீதி விழாமல் கடந்தது. ஒருவழியாக சிகிச்சை முடிந்தது..... விழுந்தது எழுவதற்குதான் என்பது மாதிரி விழுந்து எந்திரிச்சு வந்தாச்சு....

இனி  நம்ம பொழப்ப பாக்குனும்..... அய்யா விபத்துல சிக்கியதால் இந்த மாதத்துக்கு ஜிஎஸ்டி கட்ட முடியாதுன்னு சொல்ல முடியாது....வட்டிக்காரன்கிட்ட வேண்டுமானால் அடுத்த மாதத்துக்கு தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.....

பகல் கனவு கண்டால் பலிக்காது என்றாலும் பகலில் கனவு வருவதில்லை.
இரவுதான் கனவு வருகிறது... வரும் கனவுகளில் சில நடந்துவிடுகிறது. கண்ட கனவு நிணைவில் இருந்தால் தப்பித்துவிடலாம்... அங்கு மறதி வந்து தடுத்துவிடுகிறது....

சுடுகாட்டில் படுத்திருப்பது போல் நிணைவு ..எனக்கு பக்கத்தில் வரிசையாக பலர் படுத்திருக்கிறார்கள். நான்தான் தனிக்கட்டை... இவிங்க ஏன்? இங்கு வந்து படுத்திருக்காங்கே என்று யோசித்தால் யோசனை வர மறுக்கிறது. ஏழு எட்டு பேருக்கு அடுத்தாப்புல இருக்கிறவன் அருகில் ஒரு பெண் தலைவிரி கோலமாக அழுது கொண்டு இருக்கிறாள்.

அத்தான் என்னை விட்டு போகாதிங்க..த்தான்.... புலம்புகிறாள். அதைக் கேட்டதும்..மாமா மகன் மச்சான்.. அத்தை மகன் அத்தான் என்று நிணைவு போகிறது... சிறிது நேரத்தில் அழுகுரல் எதுவும் கேட்கவில்லை... வரிசையாக படுத்திருந்தவர்களில் பாதிப்பேரை காணோம்... வீட்டுக்கு சென்று விட்டார்களா என்று கேள்வி எழுந்தது.

இதனிடையே ஒரு சத்தம் கேட்டது...ஏலே.. ஒத்த ஒத்தையா எரிச்சு என்னிக்கிடா முடிக்கிறது.. மொத்தமா தூக்கி வச்சு எரிங்கடான்னு...

அப்பத்தான் எனக்கு சுரீர் என்றது ..அட நானு செத்து போயிட்டேன்னா... அதுக்குத்தான் கிடத்தி வச்சுருக்காங்கேளா..என்று யோசிக்கிறேன்.. ஆ..ஆ.. நான் மூச்சு விடுகிறேன்னே......ஆச்சரியப்பட்டு   முழித்தபோது விடிந்துவிட்டது.. காலையில்  செய்தி பத்திரிகையை படித்தபோது.. மழையின் போது. கரண்ட் போனதால் சிகிச்சையில் இருந்தவர்கள் முச்சு திணறி இறந்தது... தெரிய வந்தது.

கனவுக்கும்..செய்திக்கும் ஏதோ ஒரு நூலிலையில் தொடர்பு இருப்பதாகவே எனக்கு தோன்றியது..


4 கருத்துகள்:

  1. கனவிற்கும் நம் உணர்வுகளுக்கும் எதோ தொடர்பு இருக்கத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  2. இந்தக்கனவு நடக்காமலிருந்தால் சரிதான் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்துவிட்டது..நான் தப்பித்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும் நண்பரே......

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...