பக்கங்கள்

Friday, May 17, 2019

அதிகாலை கனவு-19.

 கனவிலும் பயமுறுத்தும் சித்தப்பனின் மனைவி....!!!!!!!!!!என்  தொழிற்கூடத்தில் அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்துக் கொண்டிருக்க  அவர்களோடு நானும் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்... என் சித்தப்பனின் மனைவியும்.. என்மீது அபாண்டமாக பொய் புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவரும் என் பரம எதிரியின் கூட்டாளியும், என்தந்தையின் அக்கா மகளும் என் தாயின் சித்தப்பன் மகளுமான  என் தந்தையின் தம்பியின் மனைவியானவர்.

திடிரென்று படுக்கை பை முதலிய சாமன்களுடன் என் தொழிற்கூடத்தில் நுழைந்து தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்துவிட்டார். இதை நுழையும் போது கவனிக்காத நான் அவர் உட்கார்ந்திருப்பதை  வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் மிரட்சியாக பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் நான் கவனித்தேன்...

அரண்டு மிரண்டு பொய் ஒருவிதமான பயத்தால் ஏற்ப்பட்ட பதட்டத்தில்...“ ஏய்..யாரும்மா நீ.....  திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைவது மாதிரி வந்து உட்கார்ந்திருக்க....உன் வீடு பின்னாடி இருக்குமா..? அங்க போ... வீடு தெரியாம வந்திட்டியா   போம்மா..... என்று சத்தமிட்டேன்
யாரு வீட்டில இருந்துகிட்டு யாரடா வெளியே போகச் சொல்ற முட்டாப் பயலே... நீ போடா வெளியே... பதிலுக்கு கத்தினாள். 

ஆகா... இவ.. எதோ திட்டம் போட்டுத்தான் தைரியமா உள்ளே வந்திருக்காள் என்று என் பயத்தை வெளிக்காட்டாமல். ஒழங்கா மருவாதியா.... உன் பொருட்களை எடுத்துகிட்டு உன் வீடு போயி சேரு.... இல்ல நடக்கிறதே வேற..

இடைமறித்து என்னடா நடக்கும்..... இங்கேயே நான்னுகிட்டு என் சாவுக்கு நீதான் காரணமுன்னு எழுதி வச்சுட்டு சாவேன்டா பொண்டுகயப்பயலே என்றாள்.. எனக்கு பயம் கூடி விட்டது... இவள் எந்த எல்லைக்கும் செல்வாள்.. சும்மா சண்டையில் கையைப்பிடித்து இழுத்தவிட்டதில் கெடுக்க முற்பட்டான் என்று பொய்புகார் கொடுத்து தண்டம் கட்ட வைத்தவள்....

 என்ன பிளான் செய்து வந்திருக்காளொ என்று மனது பதைபதைத்தது.. அவள் கொண்டுவந்து வைத்த பொருளை எடுத்து வெளியே வைக்க முற்பட்டபோது  என் கைகளை தடுத்து என்னை தள்ளிவிட்டாள்... என் வீட்டுக்கு பின் வீட்டிலுள்ள MBA படித்த இவளின் மகனை கூப்பிட்டபோது வீட்டில் ஒளிந்து கொண்டான்.. ஆகா எதோ திட்டம்தான் என்று நிணைத்துக்கொண்டு  

இந்தாரும்மா... நீ செய்வது கொஞ்சம்கூட நல்லா இல்ல.... உனக்கு இந்த வீட்டில பங்கு இருந்தால் அதற்குரிய ஆவணத்தை கொண்டு கோர்ட்ல வழக்கு போடு..உன் பக்கம் தீர்ப்பாயிடுச்சனா... அப்பீல் எதுவும் செய்ய மாட்டேன். அடுத்த நிமிடமே இடத்த விட்டு காலி செய்துவிடுகிறென். அதை விடுத்து முறைகெட்ட தனமாக  நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அடவாடித்தனம் செய்வது சரியல்ல....ஒழுங்கா நீயா போறீயா..? போலீச கூப்பிடவா? என்று சொன்னபோது....

டேய்... கூப்பிடுறா... போலீசு வரட்டும்..... அவுககிட்ட உன் ஞாயத்த சொல்வோம்.. என்றாள்...  இந்தா பாரும்மா  பொம்பளயாச்சுன்னு பாக்குறேன்  இல்ல.....

இல்லாட்டி என்னடா செய்வா...அடிச்சிடுவியா... எங்க  அடிடா....கடிக்கி மவனே என்று சொன்னதான் தாமதம் எனக்கு கோபம் எப்படி வந்ததுன்னு தெரியல... ஒரே அடில   கீழே விழுந்திட்டா...சும்மா நின்றவர்கள்... அவள் அருகில் சென்று அவளை தொட்டு பார்க்க....அவள் செத்துப்போனாள்..

அய்யோ... அம்மா என்ன கொலக்காரனக ஆக்கிப்புட்டாளே  அம்மா என்று கத்திய கத்தலில்... என் அக்கா. மச்சான்... மருமகள், பேத்தி எல்லாரும் பதறிப்போயி என் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுந்திருக்க வைத்து என்ன கனவு பயங்கரமான கனவா?? என்று துழைத்து எடுத்துவிட்டனர்..

கண்ட கனவை அவர்களிடம் சொன்னால்  அதை நிணைத்து அவர்களும் நெஞ்சுக்கும் தொண்டைக்குமா நிணைத்து கொண்டு இருப்பார்கள் என்று நிணைத்துக் கொண்டு  என்னவென்று தெரியவில்லை என்று பேந்த பேந்த முழித்தேன்... விடிவதற்கு நேரம் இருந்தாலும் உறங்க முடியவில்லை. என் சித்தப்பனின் மனைவியான அந்த கொடூர மனது படைத்த சித்தியின் செயலே மனதில் பயத்தை உண்டு பன்னிக் கொண்டு இருந்தது. இந்தக் கனவு நிஜத்தில் நடக்க அதிக வாய்ப்பு இருந்தாலும் அதை தடுப்பதற்கு என்ன வழி என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன்.


8 comments :

 1. கனவு பலிக்ககூடாது நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பலிக்ககூடாது நண்பரே!.

   Delete
 2. மேலே அரபு கம்பெனிகளின் விளம்பரம் கருத்துரையில் வந்து இருக்கிறதே....

  ReplyDelete
  Replies
  1. தாங்கள்தான் அது என்ன விளம்பரம் -ன்னு சொல்லனும் நண்பரே..!

   Delete
 3. பயங்கரம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி! நண்பரே!

   Delete

.........