பக்கங்கள்

Monday, May 20, 2019

அதிகாலை கனவு-20.

சித்தியின் காதலனால் வந்த கோபம்...

கனவு க்கான பட முடிவு


 காலையில் முதல் வேலையாக கண்ட கனவு பலிக்காமல் இருப்பதற்க்கான முயற்சிகளை தொடங்கினேன். சித்தப்பனின் மனைவி வீட்டில் இருக்கிறதா..வேலைக்கு பேய்விட்டதா என்று விசாரிக்க ஆரம்பித்தேன்.


அப்போது ஒரு தகவலை சொன்னார்கள்.. சித்திக்கு இருதயத்தில் ஓட்டையாம். மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூத்த மகள் வீட்டில் ஒய்வு எடுப்பதாக.....

ஓரளவுக்கு மனம் நிம்மதியாக இருந்தாலும்  நேற்று கண்ட கனவு எப்போதும் நடக்கலாம்.. அதில் நான் கோபப்படாமல் சமயோசிதமாக செயல்பட்டால்  கனவின் கடைசியில் நடக்கும் சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எனது பகுத்தறிவு சிந்தனை தெளிவுபடுத்தியது....

அந்த நிமிடத்திலிருந்து வண்டியில் செல்லும்போது குறுக்கும்மறுக்குமாக வருவர்களிடமிருந்து தொடங்கினேன் கோபப் படக்கூடாது என்ற முடிவை...


 மறந்தும் கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காக பேப்பரில் எழுதி வைத்தக் கொண்டு  அடிக்கடி அதை படித்துக் கொண்டு நினைவில் ஏற்றிக் கொண்டே வந்தேன்..அன்று இரவு நேற்று கண்ட கனவின் தாக்கமே வந்து நின்றது.. அப்போது ஒரு சிந்தனை வந்தது. புத்தகம் படிக்கலாம்  என்று... நான் புத்தகம் படித்தால் உடனே என் தலை கோடாங்கி அடித்து தூக்கம் வந்துவிடும்.... அதை உடனடியாக செயல் படுத்தினேன். உடனடி பலன் எனக்கு கிடைத்தது.

தெருவின் மெயின் ரோட்டின் வண்டியை நிறுத்திய போது.. என் பெயரைச் சொல்லி அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தேன். ஒருவர் என்னை அழைத்தார். யாரென்று தெரியவில்லை. அருகில் என் சித்தப்பன் நின்று கொண்டு இருந்தான். அருகில் சென்றபோது.. சித்தப்பன் என்னை முறைத்துக் கொண்டு இருந்தான்.

கூப்பிட்டவரின் அருகில் சென்று நீங்கள் யாரென்று தெரியவில்லை. எதற்கு என்னை கூப்பிட்டீர்கள் என்று கேட்டபோது.....அவர் சொல்வது எனக்கு வேறு மாதிரியாக கேட்டது... “நான்தாண்டா உன் சித்தியின் கள்ள புருசன்  என்று”
சுதாரித்து தெளிவாக கேட்டபோது... சித்திக்கு வேண்டியவர்கள் என்று சொன்னார்.

இடத்துப் பிரச்சினையை பற்றி கேட்டார்....சார் எனக்கு வயது 59 ஆகுது.. அடுத்த வருடத்தில் நான் முதியோர் வரிசைக்கு சென்று விடுவேன். என்னுடைய இருபதாவது வயதிலிருந்தே.. நான் குடியிறுக்கும் வீட்டிற்க்காக போலீஸ் ஸ்டேசன். கோர்ட்டுன்னு அலஞ்சு அலஞ்சு என் வாழ்நாளே முடிந்து போய்விட்டது.. இதுவரை எந்தவிதமான நியாயமான ஆசை எதையும் நான் அனுபவித்தது கிடையாது...  இவர்கள் இடத்துக்கான ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிராகத்தான் இருந்தார்கள் தவிர.. உதவியாக இருந்தது. கிடையாது..  வழக்கு நடக்கும் இடம் என் தந்தையை சுவிகாரமாக எடுத்து வளர்த்த தாத்தாவினுடையது....இதில் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது... நான் திருமணம் ஆகதாவன் என்பதால் எனக்கு பின் இவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை என் தாயார் இறந்த பின் பொய்த்து போனது..எனது இறப்புக்குப்பின் எனது வீடு. இடம் தொழில். தொழில் இயந்திரங்கள் அனைத்தும் என் அக்காவுக்கும் அவருடைய மகள் மகன்களுக்கும் தான் சட்டப்படி செல்லும்.  இதை உங்களுக்கு வேண்டியவர்கள் மறுத்தால்  கோர்ட்டிக்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள்  மறுநிமிடமே நான் காலி செய்துவிடுகிறேன்  என்றபோது..

நான் சொல்வதை எதையும் பரிசிலிக்காமல்... மனிதாபிமானம் ஒன்று இருக்குல்ல அதன்படி நீ நடந்து கொள்ளனும் என்றார்.

என்ன மனிதாபிமானப்படி நான் நடந்து கொள்ளனும்...

அவர்களுக்குரிய பங்கை நீ கொடுக்கனும்...

அதான் கோர்ட்க்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள் என்கிறேனே..!

கோர்ட்டு, கேசு என்பதெல்லாம் ஆகாத வேலை.... 

அப்ப.... நான் நாற்பது வருசமா அலைந்தது எல்லாம் ஆகாத வேலையா...??

நீ வெட்டியா அலைஞ்சதுக்கு இவுங்க எப்படி பொறுப்பாக முடியும்.


சார்... உங்களிடம் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருப்பது எதனால என்று நிணைக்கிறிங்க....போதும்  உங்களிடம் இதற்கு மேல் பேச வேண்டிய அவசியமில்லை-என்று நகர்ந்தபோது....

இப்படி பேச்சை முறித்துக் கொண்டு பொண்டுகத்தனமா... போவதுதான்..வீரமாடா.? என்று கேட்டதும்... அதுவரை அமைதியாக இருந்த எனக்கு கோபம்  தலைக்கேறியதுது...

நான் பொண்டுகன் என்பது உனக்கு தெரியுமாடா  என்று திரும்பி கேட்டபோது.. என் சித்தப்பனும் மற்றவனும். ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தார்கள்.

படக் கென்று கண்விழித்தேன்... சித்தியின் காதலன் முன் வந்து நின்றான். ..சட்டப்பையில் எழுதி வைத்திருந்த வாசகத்தை எடுத்து மூன்று நாலு ஐந்துவரை படித்து மனப்பாடம் செய்து கொண்டேன்.

 என் தந்தைக்கு அடுத்து பிறந்தவன்  சித்தப்பன். வயதானவன்.. லேசாக தள்ளவிட செத்துப்போனால்......???6 comments :

 1. ஆஹா கனவு சிக்கலாக இருக்கும் போலயே...

  ReplyDelete
  Replies
  1. முன்னவிட இந்த சிக்கல்கள் வீரியம் குறைந்தவை..நண்பரே!!

   Delete
 2. 'செத்துப்போனால்".....பாவம் சித்தப்பன்.

  ReplyDelete
  Replies
  1. சித்தப்பன் மேல் எனக்கு பாவம் எதுவும் கிடையாது..தடுக்கி விழுந்து செத்துபோனால் பழி என்மேல் விழுமல்லவா...? அதற்க்காகத்தான் ஒதங்கி போவதுங்க...

   Delete
 3. கனவு காணும் வாழ்க்கை யாவும்...!

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவரி என்னான்னு யோசனைப்பன்னி பார்த்தேன் வரவேயில்லீங்க...

   Delete

.........