வியாழன் 30 2019

அதிகாலை கனவு-24.

கனவில் வந்த ஆத்திரம்...????
.....



சார் வணக்கம்....

வாப்பா.....வா... வா..... உட்காரு.....என்ன விசயம்....  

ஒன்னுமில்ல சார். ஒரு கூட்டத்துல...நடந்து முடிந்த தேர்தலைப் பற்றியும் அதில் ஓட்டுபோட்ட வாக்காளர்களைப் பற்றியும்   கருத்து சொன்னிங்களாம்...
அதப்பத்தி உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டு  போகலாமுன்னு வந்தேன் சார்...

அப்படியா...!!! நானா..!!! ஒனக்கு யாரு சொன்னது...

.டீக் கடையில பேசிக்கிட்டு இருந்தாங்க சார்.....

அவுங்க..யாருன்னு தெரியுமா...?

தெரியாது சார்,.....

நீதான் டீயே  குடிக்க மாட்டியே..பின்ன எப்படி  டீ கடைக்கு போன.....

“ சிகரெட் வாங்க பேனேன் சார்...”

“ என்னது சிகரெட் வாங்கப் போனீயா.... என்ன கத விடுறீயா....உனக்குதான் சிகரெட்ட ஆகாதே.... பின்ன எப்படி..சிகரெட்..”

“ இல்ல சார் ..சில்லரை மாத்த போனேன்.. சார்....”

“நீ...சில்லரை மாத்த டாஸ்மாக்குக்குல்ல போவ..... எப்படி ..டீ கடைக்கு போனே ?  ஏய்....பொய் சொல்ற...”

“ இல்ல சார்...எங்க ஏரியாவுல இருந்த டாஸ்மாக் கடைய எடுத்துட்டாங்க சார், அதிலிருந்து டீக் கடையிலதான் சில்லரை மாத்துவது வழக்கம்..”

“ ஓ...அப்படியா.....”

“ஆமாம் சார்”

“ ஆமா... உனக்கு சில்லரை மாத்துற அளவுக்கா காசு பொளங்குது”

“ அப்படி எல்லாம் இல்ல சார், சும்மா ஒரு ஐறூறு ரூபாய்க்கு , சில்லர மாத்தப் போனேன்... சார்...”

“ஆமா... நா...பேசினத..கேட்டு..நீ என்ன செய்யப்போற.......”

“ஒன்னும் செய்யப் போறதில்ல சார்”

“ ஒன்னுமே செய்யப் போறதில்ல... பிறகு எதுக்கு நான் பேசினத கேட்டுகிட்டு...”



 “ஏலே....நாதாரி.. 
இத முன்னமே சொல்லி 
தொலைக்க வேண்டியதானடா...” 
பெரிய வெங்காயம் மாதிரி 
இம்புட்டு கேள்வி கேட்டுபுட்டு..
கடைசியில என்னாத்துக்குன்னு.

.ஆத்திரத்தில் வாய் ஒலம்பியபடி கண் முழித்தபோது.... பக்கத்தில் யாருமில்லை.. ஆத்திரம் தணியாததால் பின் தூக்கமும் வரவில்லை.....


















2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...