புதன் 12 2019

அதிகாலை கனவு-28.

சொர்க்கம் செல்ல ரூபா ரெண்டாயிரம்...






மணி ஒன்னு. அல்லது ஒன்றரை இருக்கும்..மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தைில் இறங்கியதும் ஒன்றிரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள்.. சவாரிக்கு அழைத்தார்கள்....மறுத்துவிட்டு  ஆரப்பாளையத்துக்கு  செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருந்தார். நெடு நேரம் நின்று கொண்டு இருப்பதற்கு பதிலாக பஸ் வருகிற வரைக்கும் எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து...இருக்கலாம் என்ற எண்ணத்தில் வந்து இருக்கையில் அமர்திருந்தார்..

அரை மணிக்கு மேல் இருக்கும்...செக்கச் சிவந்தழகி ஒருவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார்....அந்த அழகியும் அவரைப்போல..சுமை எதுவும் இல்லாமல் வீசுன கையும் காலுமாக இருந்தார்.

இவரைப் பார்ப்பது..பின் ஒரு சுற்று சுற்றி பார்ப்பதுமாய்..இருந்தவர்..அந்த அழகி ரெம்ப நேரமாக உஸ்...உஸ்.உஸ்சுன்னு அழைத்தது இவருக்கு காதில் விழவே இல்லை... வெறுத்துப்போன அந்த அழகி.....யோவ்... உனக்கு காது கேட்காதா என்று கேட்டவுடன் அவருக்கு டக்கென்று காதில் விழுந்தது.

என்ன விசயம் என்றார். இவர்...இரண்டாயிரம் ரூபாய் இருந்தால் சொர்க்கத்துக்கு அழைத்து செல்வேன் என்றார் அவர்.  சுற்றும் பார்த்தவர் சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதற்கு இரண்டாயிரமா..? ரெம்ப கம்மியா இருக்கு  என்றார்..

ஆமா.. உனக்காக என்றார் அவர்....என்னை முன்னமே தெரியுமா..என்றார் இவர். இந்த மூஞ்சியை பார்த்துதானே வந்து பேசுறேன்.என்றார் அவர்....
சிறிது நேர இடை வெளிக்கு பின்... என்ன ..ஆட்டோவ கூப்பிடட்டுமா..? என்றார் அவர்.... என்னது ஆட்டோவுலயா சொர்க்கத்துக்கு ....இழுத்தார்..

ஆட்டோவுல போயி  ரூம்ல இறங்குவதற்கு.....என்ன கூப்பிடவா...? கொஞ்சம் இருங்க... காசு இருக்கான்னு பாத்துகிறேன்.    சட்டைப்பை..பேண்ட் பையில் கையை விட்டு துழாவினார்.....சில வினாடிகளில்  அய்யோ....என் பர்சக் காணோம் என்று பதற்றமாகவிட்டார்..பின் அந்த அழகியிடம்... அம்மா... தாயி..நான் சொர்க்கத்துக்கே வரல..ரெண்டாயிரத்த எடுத்துகிட்டு மீதிப் பணத்த கொடும்மா என்று கெஞ்ச ஆரம்பித்தார் இவர்.

ஏய் ..... என்னடா விளையாடுறியா...?...ஏ..வேலு.. கார்த்தி..பாண்டி  இங்க வாங்கடா என்று அவரும் உதார்விட்டார்........பிளீஸ்...பிளிஸ்.... நான் பொய் சொல்லல... ஐய்யாயிரம் வைத்திருந்தேன்... மொத்தமாக போச்சு  பஸ்ல போகக்கூட காசுல்ல...நீங்க கூப்பிட்டிங்கள..அவுங்க..வரட்டும்.....என்றவரை..  தலையில் ஒரு கொட்டு கொட்டி போய்யா.... லூசு.......பு.......திட்டி விட்டு  புயலாய் மறைந்துவிட்டார் அவர்.....


கொட்டு வாங்கின தலை வலித்ததால் தலையை தடவியபடியே...ரெண்டாயிரத்தில் சொர்க்கத்துக்கு அழைத்து செல்பவரை தேடு தேடுன்னு தேடுவதற்கு கண்விழித்தார்.... மறுநாள் மெடிக்கல்ஷாப்பில் நின்று கொண்டிருந்த ஒருவர். இந்தக் கதையை மருந்து கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் ...  அட..நம்.... கனவுல..வந்தவரா..இவரு..என்று  என்று அவரை உர்ர்ரரென்று பார்த்தபோது.... என்ன உர்ர்ன்னு பாக்குறீங்க என்று எ்ன்னிடம் கேட்ட போது  என்னத்த சொல்ல... அப்படிச் சொன்னாலும் நம்பவா போறாங்கே...... 





7 கருத்துகள்:

  1. இரண்டாயிர ரூபாய் சொர்க்கங்கள் இப்படித்தான் இருக்கின்றன,,,./

    பதிலளிநீக்கு
  2. வினோதமாகத்தான் இருக்கிறது கனவு சொர்க்கம்.

    பதிலளிநீக்கு
  3. ஹ ஹஹா ...என்னப்பா காலங்காத்தாலே சிரிப்பு காட்டுறீங்க...!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...