பக்கங்கள்

Friday, June 21, 2019

அதிகாலை கனவு-29.


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...!!!

மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டு கதவுக்கு அருகில் காக்கி உடையும் தலையில் தொப்பியும் அணிந்தவர்கள் காவலுக்கு நிறுத்தப் பட்டு இருந்தனர்....


போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்தவண்ணம் சென்று கொண்டிருந்தனர்....இதில்  வாய விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஒருவன். இந்தக் காட்சியைக் கண்டு...  மெதுவாக கேட்டுக்கு அருகில் நின்ற  ஒரு காக்கியிடம் அய்யா... ஏன்?  கதவை சாத்திவிட்டீர்கள். என்று கேட்க..அடுத்த காக்கி ஒன்று ஏய்..? ஒழுங்கா   போயிடு.......இல்ல..சாத்து வாங்கிட்டு போகாத...


கதவ சாத்தியதை பற்றி கேட்டா.. எனக்கு சாத்து விழுமா..? என்னங்கடா இது இந்த மாவட்டத்துக்கு வந்த சோதனை   நல்ல மாவட்டம் நல்ல ஆட்சியர் என்று வார்த்தைகளை கொட்டிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.


மனு எழுதி கொடுப்பவரிடம் சென்று எனக்கு ஒரு மனு ஒன்னு எழுதி தரனுமே..! எவ்வளவு தொகை !..என்றவர் தொகையை கேட்டதும் போங்கப்பா.. ஒரு பேப்பரில் நாலு வார்த்தை எழதி தருவதற்கு அம்பது ரூபாயாா???  ...  என்று  எழுந்தார்.

முதல் கேட்டில் கூட்டமாக கூடியவர்கள் முழக்கம் விடும் சத்தம் கேட்டதும் வேகமாக அவ்விடத்தை நோக்கி வந்தார். மூழக்கவிடும் சத்தம்  கூடுவதும் கூட்டம் பெருகுவதையும் கண்டதும்.. சாத்திய  கதவு திறந்தது...

கடுப்பான அவர்... ஏண்டாப்பா.... கதவ எதுக்குடா சாத்துனிங்கன்னு கேட்டதுக்கு என்ன சாத்து வாங்கப்போற  போயீடு எனச் சொன்னீங்க..... இப்ப சாத்துன கதவு பொளந்துவிட்டுட்டிங்கே  என்றார்..

அவர் சொன்னது அந்த சத்தத்தில்  எவர் காதுக்கும் கேட்கவில்லை...... ஆனால். .தூங்கிக் கொண்டிருந்த என் காதுக்கும் மட்டும்  அருகில் மிக அழகாக கேட்டது எப்படி??  கண் விழித்து எழுந்தபோதும் அவர் சொன்னது என் காதுக்கு மட்டும் எ கேட்டது எப்படி என்ற யோசனையாக இருந்தது..  மேற்படி பேசியவரின் முகத்தை பார்க்க வில்லை.. பகலில் அவரை பார்க்க நேர்ந்தால் சிக்கல் வந்துவிடும் என்பதால்...........


6 comments :

 1. ஏன் உங்கள் காதிற்கு மட்டும் கேட்டது என்றால் கனவில் வந்த கதா நாயகனே நீங்கள்தானே !!!

  ReplyDelete
  Replies
  1. கதாநாயகனா...!நானா..??! நீங்க வேறா காமெடி பீசாக இருக்க தகுதி இல்லங்க.... ஒரு விபத்துல எனக்கு காது கேட்கம போச்சு...அத வச்சுதான் அவரு சொன்னது என் காதுக்கு மட்டும் எப்படி கேட்டது என்று யோசித்தேனுங்க...

   Delete
 2. வினோதமாகத்தான் இருக்கு கனவு.

  ReplyDelete
  Replies
  1. நிஜத்திலே ஏராளமான விசயங்கள் வினோதமாக நடக்கையில் கனவில் நடக்காதுங்களா...

   Delete
 3. இது போன்ற போராட்டக்கனவுகள் அபூர்வம்.
  அந்த வகையில் பார்த்தால் நல்ல கனவு,,,,/

  ReplyDelete
  Replies
  1. போராட்டத்துல லத்தி அடிவாங்கி உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரியெல்லாம் வருதுங்கோ....

   Delete

.........