ஞாயிறு 23 2019

அதிகாலை கனவு-30.

தொட்டில் பழக்கம்......







எனக்கு நினவு தெரிஞ்ச நாளிலிருந்து  இப்பவரைக்கும். நான் உடுத்தும் உடைகளை நானே துவைத்து கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த பழக்கம். மற்றவர்களுக்கு கிடைத்த பலாபலன் மாதிரி  எனக்கு துணையும்.இல்லை இணையுமில்லை.... நமக்கு ஒன்னுக்கோ- வெளிக்கோ வந்தா நாமதானே கழிக்கனும். நமக்கு பதிலா.. வேறு யாரும் கழிக்க முடியாதல்லவா  அதுமாதிரிதான்..என்னுடைய பழக்கவழக்கம்...

ஆத்துலயும் தண்ணி வரல..குளத்துலயும் தண்ணியில்ல இதுல தண்ணி பஞ்சம் வருவதற்கு முன்னமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கமும்  என் அம்மாகிட்ட அடி வாங்கி பழகிய பழக்கமுங்க... குளிக்கையிலோ..அல்லது துணிமணிகளை துவைக்கபோதே  சிறுநீர் வந்தால் தண்ணியோடு தண்ணியாக போகட்டும் என்று பெய்துவிடமாட்டேன். அந்தப் பழக்கமும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


 தண்ணியில்லாததால் நாலு நாளைக்கு ஒரு தடவையாக தண்ணிர் வந்த நேரம்.. அவனவன் மோட்டார் போட்டு சட்டிமுட்டிகளில் எல்லாம் தண்ணீர நிரப்பிக் கொண்டு இருந்த வேளையில் அடி பம்பில் இடைவெளி விடாமல் அடித்ததில் ஒன்றறை ட்ரம்ப்தான் தான் அடிக்க முடிந்தது. வந்த இரண்டு மணி நேரத்துக்குள் தண்ணீர் நின்று விட்டது. 

தண்ணி அடித்த அதாவது குழாயில் அடித்த களைப்பில் உறங்கியதில் பழைய சம்பவம் ..


கந்தையாக இருந்தாலும் கசக்கி கட்டுன்னு யாரு சொன்னாங்கன்னு தெரியல...ஆரம்ப பாடசாலை டீச்சரு ..என்னயப்பாத்து அடிக்கடி சொல்லும்...அதுக்கு பயந்தே செம்மண் ஏறிய என் கால் டவுசரையும் சட்டையையும் தினசரி துவைத்துதான் அணிந்து செல்வேன்.. எவ்வளவுதான் கசக்கினாலும் சோப்பு போடாததால் என் வெள்ளை சட்டை பழுப்பேறிய செம்மண் கலராகவே காட்சிஅளிக்கும்..இது அந்த டீச்சருக்கு உறுத்தும்போல...

ஒரு நாளு காலையில எழுந்தவுடன் அருகில் உள்ள பம்ப் செட்டுக்கு போககையில் யாரோ ஒரு புண்ணியவன்  துவைக்கிற சோப்பு  கரைந்து சிறியதாக இருந்த காரணத்தால் மறந்து வச்சுட்டு போனார்...

அந்த சோப்பைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி... சட்டையில் உள்ள செம்மண்ணை விரட்டிவிடலாம்....என்று கால் டவசர். மேல் சட்டை ஆகியவற்றை கழட்டி தண்ணீரில் நணைத்து அம்மணத்துடன் சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன்.


சிறிது நேரத்தில் கூட்டம் வந்துவிடும் அதற்குள் துணிகளை துவைத்து குளித்து முடிக்க வேண்டும். கூட்டம் வந்துவிட்டால் குளிக்க முடியாது .பரபரப்பாக துவைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் ஒன்னுக்கு வந்து விட்டது. தண்ணியோடு தண்ணியாக ஒன்னுக்கு இருந்துவிடகூடாது.  எழுந்து சென்றுவிட்டால் துவைத்துக் கொண்டிருக்கும் கல்லில் மீண்டும் துவைக்க முடியாது.. அந்தக் கல்லில் இடம் பிடிப்பதற்காக இரண்டு பேர் வரிசை கட்டி நிற்கிறார்கள்...

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்று  அன்றே செயல் முறை விளக்கமாக இருந்தது.  இலேசாக சொர்ர்க் சொர்ர்க் என்று வந்தது.  தட்டுத்தடுமாறி கண்விழித்து. தூக்கத்தில் அவிழ்ந்து கிடந்த கையிலியை பிடித்தபடி அரக்கபரக்க கதவை திறந்து  வேகமாக வெளியே வந்து  கால்வழியாக வழிந்த  சிறு இடைவெளியில் வெட்ட.வெளியில் நீண்ட நேரமாக சிறுநீர் கழித்து.பின் நிதானத்துக்கு வந்தேன்.

நல்லவேளை குழாயில் தண்ணி அடித்த களைப்பினால் படுக்கையில் சிறு கழிப்பதை தடுத்து நிறுத்தியது என். சிறு வயதில் நடந்த  சம்பவம் கனவாக....

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

  நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்கா...